வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி..வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. புயல் வருதாம் உஷார் மக்களே!
சென்னை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தாழ்வுப்பகுதி வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அக்.22ம் தேதி தாழ்வு மண்டலமாக வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அக்டோபர் 20 ஆம் தேதிவாக்கில் உருவாகக்கூடும். இது மேலும் அக்டோபர் 22 ஆம் தேதிவாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. வானிலை மையம் கணித்தது போல குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.

புயலாக மாறும்
தாழ்வுப்பகுதி வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அக்.22ம் தேதி தாழ்வு மண்டலமாக வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சிட்ராங் புயல்
இந்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றவுடன், தாய்லாந்தால் பெயரிடப்பட்ட சிட்ராங் என்று அழைக்கப்படும். மே மாத தொடக்கத்தில் வங்கக் கடலில் உருவான அசானி புயலுக்குப் பிறகு இந்த ஆண்டு சிட்ராங் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தீபாவளி நாளில் மழை
சிட்ராங் என பெயரிடப்பட்ட இந்த புயல் பெரும்பாலும் மேற்கு நோக்கி நகர்ந்து இந்தியாவின் கிழக்குக் கடற்கரையை நெருங்கி வட தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசாவில் உள்ள பகுதிகளை பாதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடும் நாளில் வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

எங்கெங்கு மழை
இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஈரோடு, சேலம், பெரம்பலூர், கடலூர், அரியலூர், கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

28 மாவட்டங்களில் மழை
நாளைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், செங்கல்பட்டு, பெரம்பலூர், கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications