எவ்ளோ பெரிய பள்ளம்.. ரோட்ல இல்ல வீட்டுக்குள்ள.. ஊரப்பாக்கம் பரிதாபங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக ஊரப்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் திடீரென 10 அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    வீட்டுக்குள் 10 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம்..கண்ணீர் விடும் குடும்பம் | Oneindia Tamil

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு வல்லம் கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. அவ்வாறு வெளியேறும் நீரானது குடியிருப்பு பகுதிகளில் தேங்கி உள்ளது சுமார் இடுப்பளவு தண்ணீரில் பெரும்பாலான வீடுகள் சூழப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது..

    A ditch 10 feet deep in the living room of a house in the suburbs of Chennai

    பொது மக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அவதி அடைந்துள்ள நிலையில், வெள்ள பாதிப்பு இதுவரை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஏற்கனவே சூழ்ந்துள்ள வெள்ள நீர் வடிவதற்குள் அடுத்தடுத்து பெய்யும் மழை காரணமாக சென்னை நகரமே தத்தளித்து வருகிறது..

    குறிப்பாக ஊரப்பாக்கம் பகுதியில் செல்வராஜ்நகர், ஜெகதீஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் பத்து நாட்களுக்கு மேலாக தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் சென்னை அடுத்துள்ள ஊரப்பாக்கம் ஜெகதீஷ்தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் உள்ள ஒரு வீட்டின் வரவேற்பறையில் சுமார் 10 அடி ஆழத்திற்கு உள்வாங்கியது. கிணறு போல வீட்டிற்குள் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் அந்த வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்..

    மேலும் வீட்டிற்கு அருகே செல்லும் ஓடையில் அதிகளவு நீர் செல்லும் நிலையில் மண் அரிப்பு காரணமாக வீட்டிற்குள் உள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது. சென்னையில் முறையற்ற வீட்டு மனை பிரிவுகளால் வீட்டின் வாசல் வரை தண்ணீர் சூழ்ந்த நிலையில் தற்போது சில வீடுகளுக்கு உள்ளேயும் தண்ணீர் புக ஆரம்பித்தது. இதற்கும் ஒருபடி மேலேபோய் வீட்டிற்குள் கிணறு போல் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+