தங்கையை கடத்திய 2 பேர்.. குட்டி யானையில் 45 நிமிடம் சேஸ் செய்த அண்ணன்.. சென்னையில் பகீர் சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தனது தங்கையை கடத்தி பாலியல் தொழிலில் தள்ள முயன்றவர்களை துரத்தி பிடித்து இளைஞர் ஒருவர் போலீசில் ஒப்படைத்தது பெரிய வைரலாகி உள்ளது.

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் சின்ன யானை வாகனம் ஓட்டி வருபவர்தான் சீனிவாசன். இவர் அடிக்கடி கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு லோட் எடுக்கவும், சவாரிக்காகவும் செல்வது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று அவர் கோயம்பேடு அருகே சவாரிக்காக காத்து இருக்கும் போது எதிரே சாலைக்கு இன்னொரு பக்கம் கார் ஒன்று இருப்பதை பார்த்துள்ளார். அந்த காரில் இருந்த பெண் தனது உறவினர் போல இருக்கவே அருகே சென்று பார்த்து உள்ளார்.

ஷாக்கானார்

ஷாக்கானார்

அருகே சென்று காரில் பார்த்தவருக்கு பெரிய ஷாக். காருக்குள் இருந்தது தனது உறவுக்கார சிறுமி என்று அப்போதுதான் தெரிந்துள்ளது. ஒரு வகையில் அந்த சிறுமி அவருக்கு தங்கை முறை வேண்டும். இதை பார்த்ததும் கோபம் அடைந்த சீனிவாசன் உடனே அந்த சிறுமியிடம், நீ இங்க காரில் என்ன செய்து கொண்டு இருக்கிறாய். உன்னை யார் இங்கே கூட்டி வந்தது, இவர்கள் யார் என்று கேட்டுள்ளார்.

சண்டை

சண்டை

ஆனால் அந்த சிறுமி பதில் சொல்லும் முன் அந்த காரில் இருந்த இளைஞர் ஒருவர் வெளியே வந்து சீனிவாசன் உடன் சண்டை போட்டுள்ளார். சீனிவாசனை கீழே தள்ளிவிட்டுவிட்டு, அவர் எழும் முன்னே காரை எடுத்துக் கொண்டு வேகமாக கிளம்பி இருக்கிறார்கள். இதை பார்த்த சீனிவாசன் உடனே தனது குட்டி யானை வாகனத்தை எடுத்துக் கொண்டு, அந்த காரை மின்னல் வேகத்தில் துரத்தி இருக்கிறார்.

செம சேசிங்

செம சேசிங்

கோயம்பேடு பகுதியில் இருந்து அரும்பாக்கம் வரை அந்த கார் சென்றுள்ளது. 2.5 கிலோ மீட்டர் தூரம் இருந்தாலும் கூட, பல்வேறு சந்துகளில் சுற்றி, வெவ்வேறு வளைவுகளை எடுத்த அந்த கார் சுற்றி சுற்றி சென்றுள்ளது. சுமார் 45 நிமிடம் அந்த கார் சிறுமியுடன் சேர்ந்து சுற்றியுள்ளது. 45 நிமிடமும் சீனிவாசன் விடாமல் அந்த காரை துரத்தி இருக்கிறார். இந்த சம்பவம் நடந்து கொண்டு இருக்கும் போதே, சீனிவாசன் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

மாட்டினார்

மாட்டினார்

என் தங்கையை இரண்டு பேர் கடத்திவிட்டார்கள். இதுதான் வண்டி எண். நான் அவர்களை பின் தொடர்ந்து சென்று கொண்டு இருக்கிறேன். அவர்களை பிடித்துவிடுவேன். நீங்கள் உடனே அரும்பாக்கம் அருகே வாருங்கள் என்று கூறியுள்ளார். அவர் சொன்னது போலவே சரியாக அரும்பாக்கம் தாண்டி டிராபிக் உள்ள பகுதியில் அந்த கார் சிக்கியது. டிராபிக் பகுதியில் கார் மாட்டியத்தை கண்டவுடன், வேகமாக சீனிவாசன் தனது குட்டி யானையில் இருந்து குதித்து வெளியே ஓடினார்.

மொத்தமாக பிடித்தார்

மொத்தமாக பிடித்தார்

வேகமாக அந்த காருக்குள் சென்று, அந்த சிறுமியை மீட்டார். அதன்பின் அந்த சிறுமியை கடத்தியவர்களை கழுத்தை பிடித்து இழுத்து அடிக்க தொடங்கினார். சரியாக அப்போது போலீஸ் அந்த இடத்திற்கு வந்தது. அதன்பின் கடத்தல்காரர்களை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அதில், அந்தசிறுமியை கடத்தியவர்கள் பெயர் பிரகாஷ் மற்றும் பாஸீல் என்று தெரிய வந்துள்ளது.

ஒப்படைத்தனர்

ஒப்படைத்தனர்

அந்த சிறுமி வில்லிவாக்கம் பகுதியில் இருந்த போது கடத்திக் கொண்டு அவரை இங்கே கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது. பாலியல் தொழிலில் அனுப்புவதற்காக அந்த சிறுமியை கடத்திக் கொண்டு வந்து இருக்கிறார்கள். இதையடுத்து உரிய விசாரணைக்கு பின் அந்த சிறுமியை சீனிவாசனிடம் ஒப்படைத்தனர். சீனிவாசனின் இந்த வீரதீர செயலை போலீசார் பாராட்டி இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+