சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடியே ரூ15 லட்சம் கொடு... பாஜக ஆர்ப்பாட்டத்தில் முதியவரின் 'வெறி' கோஷம்- காண்டானது கூட்டம்!

Google Oneindia Tamil News

சென்னை: பாரதிய ஜனதா கட்சியினர் சென்னையில் நடத்திய போராட்டத்தில் முதியவர் ஒருவர் திடீரென மோடியே ரூ15 லட்சம் கொடு என முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை நங்கநல்லூரில் திமுகவினரின் சுவர் விளம்பரத்தை பாஜகவின் சுண்ணாம்பு பூசி அழித்தனர். இது தொடர்பாக வீடியோக்களையும் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

ஜெயக்குமார் வீட்டில் நண்டு விட்டாரே.. நர்மதா.. பாஜக தலைவர் முருகன் வீட்டருகே என்ன பண்ணாரு பாருங்கஜெயக்குமார் வீட்டில் நண்டு விட்டாரே.. நர்மதா.. பாஜக தலைவர் முருகன் வீட்டருகே என்ன பண்ணாரு பாருங்க

பாஜக திமுக புகார்

பாஜக திமுக புகார்

இதையடுத்து பாஜகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக இருதரப்பும் போலீசில் புகார் தந்துள்ளனர். திமுகவினரால் தாக்கப்பட்டதாக கூறி 4 பாஜகவினர் காய கட்டுடன் காட்சி தரும் படங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.

பாஜக போராட்டம்

பாஜக போராட்டம்

இதனிடையே திமுகவினரைக் கண்டித்து சென்னை நங்கநல்லூரில் பாரதிய ஜனதா கட்சியினர் நேற்று போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திலும் பாஜகவினரே எதிர்பாராதவிதாமன ஒரு ட்விஸ்ட்டை அரங்கேற்றினார் முதியவர்.

திடீர் கோஷம்

திடீர் கோஷம்

திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்த கூடியிருந்த பாஜகவினர் இடையே அந்த முதியவர் எழுப்பிய கோஷம் சலசலப்பை மட்டுமல்ல.. தர்ம சங்கடத்தையும் பாஜகவினருக்கு ஏற்படுத்தியது.. அந்த முதியவர் திடீரென ரூ15 லட்சம்... மோடி... ரூ15 லட்சம் கொடு என உரத்து கோஷம் போட்டார்.

போலீசில் முதியவர் ஒப்படைப்பு

போலீசில் முதியவர் ஒப்படைப்பு

2014 லோக்சபா தேர்தலின் போது பிரதமர் மோடி, அனைவரது வங்கி கணக்கிலும் ரூ15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என வாக்குறுதி அளித்ததை சுட்டிக்காட்டி அந்த முதியவர் முழக்கம் எழுப்பினார். இதனால் கடுப்பாகிப் போன பாஜகவினர் அந்த முதியவரை அமுக்கி பிடித்து அடக்கி போலீசிடம் ஒப்படைத்தனர்.

எங்கிட்டு போனாலும் கேட்டு போடுறாங்களே?

English summary
An elderly man was heckled by BJP Cadres during a protest in Chennai on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X