Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பியூட்டி பார்லருக்குள் உல்லாசம்! உள்ளே போய் பார்த்தா ஷாக்! சென்னையை கலக்கிய முனிஸ்! சிக்கியது எப்படி

சென்னையில் பாலியல் தொழிலை நடத்தி வந்த நபர் அதிரடி கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அண்ணா நகர் பகுதியில் பியூட்டி பார்லரில் பாலியல் தொழில் நடத்தப்பட்டதையடுத்து வில்லிவாக்கத்தை சேர்ந்த முனிஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் முனிஸ் எப்படி கைது செய்யப்பட்டார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

சென்னையின் மக்கள் தொகையானது ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஏதாவது ஒரு வேலை கிடைத்துவிடாதா? எப்படியாவது முன்னேறி விட மாட்டோமா? என்று ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்னையில் காலடி எடுத்து வைக்கிறார்கள். இதில் குறிப்பிட்ட சதவிகிதம் பேர் இளம் பெண்களாக இருக்கின்றனர். ஆனால் இப்படி வரும் அனைவருக்கும் வாய்ப்பு எல்லா இடங்களிலும் கிடைத்துவிடுவதில்லை.

குறிப்பாக பெண்களுக்கு ஏகப்பட்ட தடைகள் இருக்கின்றன. இந்நிலையில், எதிர்பார்த்த வேலை கிடைக்காமல் திரும்பி ஊருக்கும் போக முடியாமல் தோழிகளுடன் இன்னும் எத்தனை நாட்களுக்கு தங்க முடியுமோ என்கிற விரகத்தில் பல இளம்பெண்கள் கிடைத்த வேலைக்கு சென்றுவிடுகின்றனர். படிப்புக்கும், செய்யும் வேலைக்கும் கொஞ்சமும் தொடர்பில்லாமல் இருக்கிறது. இருப்பினும் என்றாவது ஒருநாள் வாழ்வின் இலக்குகளை அடைந்துவிடுவோம் என்று விடாப்பிடியாக வாழ்ந்து வருகின்றனர்.

 பாலியல் தொழில்

பாலியல் தொழில்

ஆனால் இப்படி கொஞ்சம் கூட வாய்ப்பு கிடைக்காத பெண்களை ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபட வைக்க ஒரு கும்பலே சுற்றிக்கொண்டிருக்கிறது. வளர்ந்து வரும் சமூகத்தை பின்னோக்கி இழுக்க இதுபோன்ற குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. எனவே இதனை கண்காணித்து ஒழித்துகட்ட காவல்துறையினர் அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இதேபோல மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி வழிகாட்டுதலின்படி, துணை கமிஷனர் வனிதா மேற்பார்வையில், உதவி கமிஷனர் ராஜலட்சுமி தலைமையிலான போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

ரகசிய தகவல்

ரகசிய தகவல்

இவர்கள் அனைவரும் பாலியல் தொழிலை கட்டுப்படுத்த தொடர்ந்து தீவிரமாக பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில்தான் நேற்று இந்த போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இந்த தகவலின் அடிப்படையில், சென்னை அண்ணா நகர் பகுதியில் திடீர் ரெய்டு நடத்தினர். அப்போது அண்ணா நகர் திருமங்கலம் ரோட்டில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் வழக்கத்திற்கு மாறாக ஆண்கள் நடமாட்டம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த பியூட்டி பார்லருக்கு எதிரில் மறைந்திருந்து ரகசியமாக கண்காணித்துள்ளனர்.

பார்லர்

பார்லர்

இதில் வழக்கத்திற்கு மாறான ஆள் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிரடியாக உள்ளே புகுந்த காவல்துறையினர் சோதனை நடத்தியதில் ஏரளமான ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்த இளம்பெண்களிடம் விசாரித்ததில், தாங்கள் கட்டாயத்தின் பேரில் இங்கு பாலியல் தொழிலாளியாக இருந்து வருவது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்து அப்பெண்கள் மீட்கப்பட்டனர். மேலும் ஒரு செல்போன் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செல்போனை ஆய்வு செய்து பார்த்ததில் அடையாளம் தெரியாத எண்களிலிருந்து அழைப்புகள் வந்திருக்கின்றன.

வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர்கள்

அதாவது வாடிக்கையாளர்கள் வருதை முன்கூட்டியே அறிவிக்க இந்த செல்போன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த குற்றச்செயலின் பின்னணியில் இருப்பவர் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். தேடுதலில் முனிஸ் என்கிற முனியாண்டி என்பவரின் பெயர் அடிபட்டிருக்கிறது. ஆனால் உள்ளூர் காவல் நிலையத்தில் இவர் மீது வலுவான வழக்கு எதுவும் கிடையாது. அப்படி இருக்கையில் இவர் பெயர் எப்படி இங்கு அடிபடுகிறது? என்று விபச்சார ஒழிப்பு பிரிவு போலீஸார் விசாரித்தனர். அப்போதுதான் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

கைது

கைது

அதாவது முனிஸ் இந்த பாலியல் தொழில் நடத்துவதில் மிகப்பெரிய புள்ளி என்பதுதான் அந்த அதிர்ச்சி தகவல். இருப்பினும் போலீசுக்கு பயந்து கொண்டு கடந்த சில ஆண்டுகளாக தனது பெயர் வெளியில் வராமல் தொழில் செய்து வந்திருக்கிறார். இவருக்கு ஏகப்பட்ட தொடர்புகள் இருக்கின்றன. பல முக்கிய அதிகாரிகள் மத்தியில் கூட இவருக்கு தொடர்பு இருந்திருக்கிறது. எனவே இதை விட்டால் வேறு ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்காது என உடனடியாக முனிஸை விபச்சார ஒழிப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர். இவருக்கு எதிரிகள் பலர் இருந்தாலும், அண்ணாநகரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்கள்தான் இவர் தொடர்பான தகவல்களை காவல்துறையினருக்கு தெரிவித்தனர் என்பதுதான் இதில் பெரிய டிவிஸ்ட்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+