2015 சென்னை வெள்ளம் நினைவிருக்கா? பசிபிக் கடலில் உருவாகும் புதிய 'எல் நினோ'.. ஏன் முக்கியம்?
சென்னை: கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் ஏற்பட்ட எதிர்பாராத வானிலை மாற்றத்திற்கு 'எல் நினோ' விளைவு காரணமாக இருந்த நிலையில், மீண்டும் இந்த ஆண்டு 'எல் நினோ' காரணமாக உலகம் கடுமையான வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், இந்த ஆண்டு மட்டும் உலகின் வெப்பநிலை சுமார் 1.5 டிகிரி வரை உயரக்கூடும் எனவும் இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
வானிலை செய்திகளை ஆர்வத்துடன் படிப்பவர்களுக்கு 'எல் நினோ' எனும் பெயர் அடிக்கடி தட்டுப்பட்டிருக்கும். அதாவது இந்த உலகம் 71 சதவிகிதம் தண்ணீரால் நிரம்பியது. மீதமுள்ள 29 சதவிகிதம்தான் நிலப்பரப்பாக இருக்கிறது. இந்நிலையில், இந்த நீர் நிலையில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட 29 சதவிகித நிலப்பரப்பில் பெரிய அளவில் எதிரொலிக்கும். இந்த 71% நீர் பரப்பில் மிகப்பெரிய நீர்நிலை பசிபிக் பெருங்கடல்தான்.
உலகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் சுமார் 50.1 சதவிகிதத்தை இந்த பெருங்கடல் தன்னகத்தே கொண்டிருக்கிறது. இந்த பெருங்கடலில் கிழக்கிலிருந்து சூடான காற்று மேற்று நோக்கி வீசிக்கொண்டிருக்கும். அதேபோல மேற்கிலிருந்து குளிர்ந்த காற்று மேலெழும். இது இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதும் போது இரண்டும் சமநிலையடைந்து மழைப்பொழிவை உலகம் முழுவதும் சீராக வைத்திருக்கும்.

காரணம்
ஆனால், கிழக்கிலிருந்து வரும் சூடான காற்று தாமதமானாலோ, அல்லது மேற்கிலிருந்து மேலெழும்பும் குளிர்ந்த காற்று எழும்பாமல் இருந்தலோ வானிலை சமநிலையை இழக்கும். இதைதான் 'எல் நினோ' விளைவு என்பார்கள். இந்த விளைவு உலகம் முழுவதும் திடீர் வானிலை மாற்றத்தை ஏற்படுத்தும். இவ்வாறு ஏற்படும் வானிலை மாற்றத்தை கணிப்பது அரிது. இந்த வானிலை மாற்றம் அதீத வறட்சியையும், அதீத மழைப்பொழிவையும் ஏற்படுத்தும். இதன் காரணமாக மனிதர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். இந்த எல் நினோ பொதுவாக குறைந்தபட்சம் 9 மாதங்கள் முதல் அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை வானிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

எல் நினோ
கடந்த ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் பிரிட்டனில் ஏற்பட்ட வெப்ப அலை ஆகியவற்றிற்கு இந்த எல் நினோ கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த அளவுக்கு சக்தி வாய்ந்த எல் நினோ இரண்டு முதல் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை என உருவாகிறது. ஆனால் கடந்த காலங்களில் இது அதை விட குறைந்த காலத்தில் உருவாகியுள்ளது. இதற்கு உலக வெப்பமயமாதலும் ஒரு காரணம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2015 மற்றும் 2019ம் ஆண்டு உருவான எல் நினோ இந்தியாவில் பெரிய பாதிப்புகளை உருவாக்கியது. 2015 வெள்ளமும் இதானல்தான் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் எல் நினோ உருவாகியுள்ளது.

வெப்பநிலை
ஆனால் இது கடந்த ஆண்டை விட அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதனால் தற்போது உலகம் முழுவம் உள்ள வெப்பநிலையானது சுமாராக 1.5 டிகிரி வரை அதிகரிக்கும். இந்தியாவில் பருவமழையில் கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தும். பருவமழை காலங்களில் மழை பெய்யாமல் இருக்கலாம். அல்லது ஒரேயடியாக இரண்டு மூன்று நாட்களில் கடுமையான மழை பொழிவு இருக்கலாம். இதன் காரணமாக இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள விவசாயம் நெருக்கடியை எதிர்கொள்ளும். உணவுப் பொருட்கள் பற்றாக்குறை காரணமாக அதன் விலை அதிகரிக்கக்கூடும்.

நெருக்கடி
சாமானியர்கள் இதனை வாங்கி பயன்படுத்த முடியாமல் வறுமையில் தள்ளப்படுவார்கள். ஏற்கெனவே உலக வங்கி இந்தியாவுக்கு சுமார் ரூ.50 லட்சம் கோடி வரை கடன் கொத்திருக்கிறது. இவ்வாறு கடன் கொடுத்து பொது விநியோகம், பொது போக்குவரத்து என இலவச திட்டங்களை முடிவுக்கு கொண்டுவர ஒப்பந்தமிட்டுள்ளது. எனவே இனி வரும் காலங்களில் இந்த இலவச திட்டங்களும் விரைவில் முடிவுக்கு வரும். இதுவும் இத்துடன் சேர்ந்து வரும் இயற்கை பேரிடர்களும் மனிதர்களின் வாழ்க்கை போராட்டத்தை தீவிரமாக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications