நிறைமாத கர்ப்பிணி இரவில் ரயில் பயணம்.. திக் திக் நிமிடம்.. கைகொடுத்த தமிழக சுகாதார கட்டமைப்பு
சென்னை: இரவு நேர ரயில் பயணத்தில் நிறைமாத கர்ப்பிணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மிக விரைவாக செயல்பட்ட கடலூர் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் 108 பணியாளர்கள் இரண்டு உயிர்களை காப்பாற்றி உள்ளனர். இதற்கு தமிழ்நாடு அரசின் சுகாதார கட்டமைப்பு தான் காரணம் என அமைச்சர் மா சுப்பிரமணியன் மகிழ்ச்சி தெரிவித்தார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: இரவு நேர ரயில் பயணத்தில் நிறை நிறைமாத கர்பிணிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நல குறைபாடு ஏற்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு சுகாதார கட்டமைப்பு கைகொடுத்துள்ளது. கடலூர் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் 108 பணியாளர்கள் இரண்டு உயிர்களை காப்பாற்றியுள்ளனர். 29.2.24 அதிகாலை 1 மணி அளவில் மாவட்ட தலைமை மருத்துவமனை கடலூரில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

இளம் பெண் ஷியாமளா தேவிக்கு 33வயது ஆகிறது. இவர் கர்ப்பத்தின் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர். 36 வார நிறை மாத கர்ப்பிணியான இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஷியாமளா தேவி 29ம் தேதிக்கு 3 நாட்களுக்கு முன்பு உயர் இரத்த அழுத்த மருந்துகளை உட்கொள்ளத் தொடங்கினார்.
இந்நிலையில் பிரசவத்திற்காக திருவாரூரில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு கணவர் மற்றும் 9 வயது மகனுடன் சென்னையில் இருந்து திருவாரூருக்கு ரயிலில் பயணம் செய்தார். ரயில் விழுப்புரத்திற்கு அருகில் வரும் போது கர்ப்பிணிக்கு வலிப்பு ஏற்பட்டது. சுயநினைவை இழந்தார்.
ரயில் அப்போது விழுப்புரத்தில் நின்றுள்ளது. ஆனால் அவர்கள் இறங்குவதற்கு முன், ரயில் நகரத் தொடங்கியிருக்கிறது. ஆனால் தாய்க்கு ரயிலில் வலிப்பு ஆரம்ப கட்டத்தில் தான் இருந்துள்ளது. இதனிடையே பயணி ஒருவர் 108க்கு போன் செய்து, திருப்பாதிரிப்புலியூர் ஸ்டேஷனுக்கு உடனே வருமாறு கூறினார்.
108 ஆம்புலன்ஸ் கடலூர் திருப்பாபுலியூர் ரயில் நிலையத்தில் காத்திருந்தது. மிகுந்த சிரமத்திற்கு இடையே கர்ப்பிணி பெண், ரயில் பெட்டியிலிருந்து ஸ்ட்ரெச்சருக்கு மாற்றப்பட்டு பின்னர் ஆம்புலன்ஸுக்கு மாற்றப்பட்டார். தாய் ஆம்புலன்ஸில் 4 வது தடவையாக வலிப்பு வந்துள்ளது. சிறுநீர் அடங்காமை பிரச்சனையும் வந்துள்ளது விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவ வார்டை அடைந்தது. கர்ப்பிணியை உள்ளே மருத்துவமனைக்கு மாற்றினார்கள்
அங்கு நன்கு பயிற்சி பெற்ற மருத்துவர்கள் குழு ( Eclampsia resuscitation ) குழு உடனடியாக அந்த பெண்ணுக்கு சிகிச்சையை ஆரம்பித்து. தாய்க்கு மருத்துவமனையில் சிகிச்சை தொடங்கப்பட்ட நிலையில், அவரது 9 வயது மகன் தியானேஷ், தாயின் நிலையை கண்டு கவலை அடைந்தான். அப்போது செவிலியர்கள் தைரியம் சொல்லி, நம்பிக்கை கொடுத்தனர். இதனிடையே CNS பிரச்சனைகள் ஏற்பட்டால், அந்த பெண்ணை உடனடியாக ஜிப்மருக்கு மாற்றப்பட வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவித்தனர்.
இரவு நேர
— Subramanian.Ma (@Subramanian_ma) March 1, 2024
ரயில் பயணம்...
நிறைமாத கர்பிணிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நல குறைபாடு
கைகொடுத்த தமிழ்நாடு அரசு சுகாதார கட்டமைப்பு
இரண்டு உயிர்களை காப்பாற்றிய கடலூர் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் 108 பணியாளர்கள்.
29.2.24
அதி காலை 1 மணி
மாவட்ட தலைமை மருத்துவமனை… pic.twitter.com/YG0lniBfRv
எனினும் சிகிச்சை தொடர்ந்தது. மயக்கயில் நிபுணர் டாக்டர்.பாஸ்கரன் தலைமையிலான மருத்துவர்கள் சிகிச்சையை தொடந்தனர்.
அடுத்ததாக டாக்டர்.பரமேஸ்வரி தலைமையிலான குழுவினர் மீண்டும் சிக்சை மேற்கொண்டனர். பெண் குழந்தை பிறந்தது. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு பாதுகாப்பாக வைத்து பராமரிக்கப்பட்டது. இப்போது தாய் மற்றும் சேய் நலம்.. தியானேஷ் என்ற சிறுவனுக்கு இப்போது தங்கை கிடைத்துள்ளார்.
காலையில் மருத்துவமனைக்கு உறவினர்கள் வந்தனர். 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டிருந்தால் (திருவாரூர் சென்றடைய) அல்லது 108 மற்றும் நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனை இல்லாமல் இருந்தால் , குடும்பம் அந்த தாயை இழந்திருக்கும். தமிழ்நாடு சுகாதார கட்டமைப்பு கைகொடுத்துள்ளது. 108 குழுவிற்கு பாராட்டுக்கள். பிரச வார்டு செவிலியர் குழு மற்றும் மருத்துவர்கள் குழுவிற்கு பாராட்டுக்கள் மற்றும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..." இவ்வாறு அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications