வடக்கில் இப்படி தலைவர்கள் இல்லையே! தைரியமா பேச மாட்றாங்களே! "இந்தியில்" ஹிட் அடித்த ஆ ராசா பேச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக எம்பி ஆ. ராசா இந்து மதம் குறித்து பேசியது வடஇந்தியாவில் தற்போது வைரலாகி வருகிறது.

சனாதனம் பற்றி திமுக எம்பி ஆ. ராசா பேசியதில் இருந்தே தமிழ்நாடு அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்து மதத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், மனுதர்மத்தில் இருக்கும் ஜாதி ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்குமுறைகள் குறித்து திமுக எம்பி ஆ. ராசா சமீபத்தில் பேசி இருந்தார்.

ஆ. ராசா தனது பேச்சில், இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்தான். உச்ச நீதிமன்றம் சொல்கிறது இந்து கிறிஸ்துவனாக இல்லை என்றால், நீ இஸ்லாமியனாக இல்லை என்றால், நீ பெர்சியனாக இல்லை என்றால் நீ இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது.

 பரபர பேச்சு

பரபர பேச்சு


இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறதா? இந்துவாக இருக்கும் வரை நாம் சூத்திரன்.. இந்துவாக இருக்கும் வரை நாம் பஞ்சமன். இந்துவாக இருக்கும் வரை தீண்டத்தகாதவர்கள்.. இந்துவாக இருக்கும் வரை நாம் விபச்சாரியின் மகன். இந்த அவலத்தை பற்றி நாம் கேள்வி எழுப்ப வேண்டும் என்று ஆ. ராசா காட்டமாக பேசி இருந்தார். ஆ. ராசாவின் இந்த பேச்சை தமிழ்நாடு பாஜகவினர், இந்து முன்னணியினர் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர்.

டிரெண்டிங்

டிரெண்டிங்

இந்த நிலையில் ஆ. ராசாவின் இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இதை திமுக எம்பி செந்தில் குமார் இந்தியில் மொழி பெயர்த்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். வடஇந்தியாவில் உள்ளவர்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்காக திமுக எம்பி செந்தில் குமார் இந்தியில் மொழி பெயர்த்து வெளியிட்டார். இதை வடஇந்தியர்கள் பலரும் பகிர்ந்து இருந்தனர். அதேபோல் மண்டல் கமிஷன் தலைவர் மண்டலின் மகன் திலீப் மண்டலும் இந்த வீடியோவை பகிர்ந்து இருந்தார்.

வீடியோ

வீடியோ

இந்த வீடியோவை பல லட்சம் பேர் பார்த்து உள்ளனர். வடஇந்தியாவை சேர்ந்தவர்கள் பலர்.. எங்கள் மாநிலத்தில் இப்படி தலித் தலைவர்கள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான தலைவர்கள் இல்லை. எங்கள் மாநிலத்திலும் மக்கள் பெரியாரை படிக்க வேண்டும். கல்வி முக்கியம் என்பதை மக்கள் உணர வேண்டும். வடஇந்தியாவில் இருக்கும் அரசியல் தலைவர்களுக்கு இது போன்ற கிளாரிட்டி இல்லை. இது போல அவர்கள் தைரியமாக பேசுவது இல்லை.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

திமுக எம்பி ராசா பேசுவது உண்மைதான். அவர் சொல்வது போல ஜாதி ரீதியிலான பாகுபாடு உள்ளது. நீதி இவர்களுக்கு கிடைக்கவில்லை. வடஇந்திய அரசியல் தலைவர்கள் யாரும் இப்படி பேசுவது இல்லை. அவர்களுக்கு என்ன கோரிக்கை இருந்தாலும் அவர்கள் இப்படி தைரியமாக பேசியது இல்லை. இதுதான் திராவிட புரட்சி. இது வடமாநிலங்களில் ஏற்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+