கோயில்களில் யாகம் நடத்தியதால் எங்கெங்கு எவ்வளவு மழை பெய்தது?: விளக்கம் கேட்டு மனு
Recommended Video
சென்னை: கோயில்களில் யாகம் நடத்தியதால் தமிழகத்தில் எந்தெந்த கோயில்களில் எவ்வளவு மழை பெய்தது என அறிக்கை கேட்டு இந்து அறநிலையத்துறைக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் தமிழக கோவில்களில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்த வேண்டும் என்றும் அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி, ஆனந்த பைரவி, ரூப கல்யாணி போன்ற ராகங்களை வாசித்து வழிபாடு செய்ய வேண்டும் என்றும் இந்து அறநிலையத்துறை அண்மையில் உத்தரவிட்டது.
இந்து அறநிலையத்துறையின் இந்த உத்தரவு சர்ச்சைக்குள்ளானது. இந்து அறநிலையத்துறைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மற்றும் பேராசிரியர் சுப வீரபாண்டியன் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

நேற்று பெய்த மழை
அதேநேரத்தில் நேற்று தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. கோவில்களில் யாகம் செய்ததால்தான் மழை பெய்து வருகிறது என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்திருந்தார்.

அறநிலையத்துறைக்கு மனு
இந்நிலையில் இந்த உத்தரவு தொடர்பாக விளக்கம் கேட்டு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் இந்து அறநிலையத்துறைக்கு மனு அளித்துள்ளார். கருப்பணசாமி என்ற அந்த நபர் அளித்த மனுவில் யாகம் செய்தால் மழை வரும் என்ற விதி மற்றும் அரசாணையின் நகல்களை அளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

எவ்வளவு மழை பெய்தது?
வெயில் குறைய யாகம் செய்யலாம் என்ற விதியின் நகல் கேட்கப்பட்டுள்ளது. மேலும் கோவில்களில் யாகம் நடத்திய பிறகு எந்தெந்த ஊர்களில் எவ்வளவு அளவு மழை பெய்தது என்ற விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.

எந்த அதிகாரம்
மேலும் மழை வேண்டி கோவில்களில் யாகம் நடத்த எவ்வளவு செலவானது என்ற விவரங்களும் அந்த மனுவில் கேட்கப்பட்டுள்ளது. அதோடு எந்த அதிகாரத்தின் அடிப்படையில் கோவில்களில் மழை வேண்டி யாகம் நடத்த இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டார் என்ற விவரத்தையும் அளிக்க வேண்டும் என கருப்பணசாமி தனது மனுவில் கேட்டுள்ளார்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications