படிப்பு முக்கியம்தான்.. அதுக்குன்னு இப்படியா! சென்னையில் மாணவிக்கு நேர்ந்த சோகம்.. கதறிய பெற்றோர்
சென்னை: சென்னை நங்கநல்லூரில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் தலைகணஞ்சேரி கல்லுக்குட்டையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலங்களாக பள்ளி மாணவர்களின் மரணங்கள் பெரும் துயரத்தை ஏற்படுத்தி வருகின்றன. கல்வி கற்றலில் உள்ள முரண்பாடுகள், சமூக ஏற்றத்தாழ்வுகள், போதிய வசதி வாய்ப்புகள் இல்லாமை, புறக்கணிப்புகள், அவமானங்கள் என ஏராளமான காரணங்கள் இந்த மரணங்களை நியாயப்படுத்த முயல்கின்றன. ஆனால், ஒவ்வொரு தற்கொலைகளும் நம்முடைய சமூகத்தின் மிகப்பெரிய தோல்விகளாகும். நாம்தான் இந்த மரணங்களுக்கு பெரும் காரணமாக இருக்கிறோம்.

ஆனால், இதை மாற்றுவதற்கான பாதையை நோக்கி செல்வதற்கு பதில் பின்னோக்கி சென்றுக்கொண்டிருக்கிறோமா என்கிற கேள்வியை அடுத்தடுத்த மரணங்கள் நம்மை பார்த்து கேட்கின்றன. அப்படியாகதான் சென்னை நங்கநல்லூர் மாணவியின் மரணமும் நம்முன்னே மிக்பெரிய கேள்வியாக எழுந்து நிற்கிறது. 15 வயது மதிக்கத்தக்க மாணவி நங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி பள்ளிக்கு சென்ற அவர் அன்று மாலை வீடு திரும்பவில்லை.
இரவு வரை காத்திருந்த பெற்றோர் உடனடியாக அவரை தேட தொடங்கினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனவே அவர்கள் மடிப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருக்கின்றனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியை தேட தொடங்கினர். எங்கு தேடியும் மாணவி கிடைக்கவில்லை. எனவே சுற்றுவட்டாரத்தில் இருக்கும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் மாணவியின் புகைப்படத்தை அனுப்பி வைத்தனர்.
ஒருபுறம் பெற்றோரும், மறுபுறம் போலீசாரும் தேட நாட்கள் மெல்ல நகர்ந்தது. இப்படியாக மூன்று நாட்கள் ஆன நிலையில் நேற்றிரவு தலைகணஞ்சேரி கல்லுக்குட்டையில் பள்ளி சீருடையுடன் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. இந்த தகவலையடுத்து தாம்பரம் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் சடலத்தை மீட்ட பல்லாவரம் போலீசார், அதை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சடலத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை ஆய்வு செய்ததில் அது காணாமல் போன சிறுமியினுடையது என்பது உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையில் பிரேத பரிசோதனையின் அறிக்கையும், மீட்கப்பட்ட சடலம் காணாமல் போன சிறுமியினுடையது என்பதை உறுதி செய்தது. இதனையடுத்து பெற்றோரிடமும், பள்ளியிலும் தீவிர விசாரணையை போலீசார் மேற்கொண்டனர். விசாரணையில், மாணவியை படிக்க சொல்லி பெற்றோர் டார்ச்சர் செய்தது தெரிய வந்தது. சமீபத்திய தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் எடுத்திருந்ததால் பெற்றோர் மாணவியை திட்டியுள்ளனர்.
இதனால் கூட மாணவி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர். பெற்றோர் திட்டியதால் 15 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சென்னையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஒரே நாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. 17 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடியாக மாற்றம் - அரசு உத்தரவு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications