Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐபோன் 16.. பொதுத்தேர்வில் ஜெயித்த மகனுக்கு.. குப்பை சேகரிக்கும் தொழிலாளி தந்த காஸ்ட்லி கிப்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளியில் நடந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற தனது மகனுக்கு ₹1.5 லட்சம் மதிப்புள்ள ஐபோன் 16 வாங்கிக் கொடுத்துள்ளார் குப்பை சேகரிக்கும் தொழிலாளி. தனது மகன் படித்து பாஸாகிவிட்டதாக மகிழ்ச்சி பொங்க கூறும் இவரது வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தந்தையின் விலைமதிப்பற்ற பரிசு என்றும், ஐபோனின் விலையை விட மிக அதிகம் என்றும் பாராட்டி வருகிறார்கள்.

"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து." என்று வள்ளுவர் பாடிய ஒரு திருக்குறள் போதும், கல்வி எந்த அளவிற்கு மிகவும் முக்கியமானது என்பதை உறுதி செய்ய, ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையது ஆகும். ஆகவே கல்வி தான் இந்த உலகத்தில் சிறந்த செல்வம் என்பதை மக்கள் உணர்ந்து இப்போது படிக்க தொடங்கிவிட்டார்கள். ஏழை மக்களின் வறுமையை, அடையாளத்தை மாற்றும் வல்லமை உடையது கல்வி. கூலித்தொழிலாளியின் மகன் கூலித்தொழிலாளி , தூய்மை பணியாளரின் மகன் தூய்மை பணியாளர் என பல ஆண்டுகளாக இருந்த அடையாளத்தை கல்வி தான் மாற்றி உள்ளது.

apple iphone 16 16

இந்நிலையில் கல்வியின் சிறப்பை உறுதி செய்யும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. ஏழைகளின் மகன்கள் பலர் கலெக்டர்களாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக, வெளிநாட்டு தூதர்களாக, ஐபிஎஸ் அதிகாரிகளாக, வனத்துறை அதிகாரிகளாக வந்துள்ளார்கள். இந்நிலையில் கல்வியின் சிறப்பை உணர்த்தும் புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோ தனது கல்வியின் சிறப்பை மட்டுமல்ல, மகன் மீது தந்தை வைத்துள்ள பாசத்தையும் வெளிக்காட்டுகிறது.

அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அந்த வைரல் வீடியோவில், குப்பை சேகரிக்கும் தொழிலாளி ஒருவர் அதாவது பழைய இரும்பு, குப்பைகளை சேகரிக்கும் தொழிலாளியான ஒருவர், மிகவும் விலை உயர்ந்த ஒன்றல்ல.. இரண்டு ஐபோன்களை கேமராவிற்கு காட்டுகிறார். இந்த மாத தொடக்கத்தில் தான், ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரிஸ்களை அறிமுகம் செய்தது.

இந்த ஐபோன் 16 தான் இந்தியாவில் பலரும் வாங்க ஆர்வம் காட்டும் செல்போனாக இருக்கிறது. ஆனால் இந்த ஐபோன் குப்பை சேகரிக்கும் தொழிலாளியின் வாழ்வில் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. முகம் நிறைய புன்னகையுடன் வீடியோவிற்கு ஐபோனுடன் போஸ் கொடுக்கும் இவர், தனக்காக ஒரு ஐபோனை ₹85,000 செலுத்தி வாங்கி உள்ளார். இதேபோல் பள்ளியில் பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற தனது மகனுக்கு ₹1.5 லட்சம் விலையுள்ள லேட்டஸ்ட் ஐபோன் 16 ஐ பரிசாக வழங்கியதையும் வீடியோவில் பெருமையுடன் கூடினார். அந்த குப்பை சேகரிக்கும் தொழிலாளி, தனது மகனுக்காகவும், தனக்காவும் வாங்கிய விலைமதிப்பற்ற ஐபோன்களை பிடித்துபடி, தனது தொழிலைப் பற்றி பேசியிருக்கிறார். அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் எதையோ சாதித்த உணர்வு அவருக்குள் இருந்ததை காண முடிந்தது.

குப்பை சேகரிக்கும் தொழிலாளியின் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலர் அவரது கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டி வருகிறார்கள். ஐபோன் போன்ற மிகவும் விலை உயர்ந்த செல்போன்களை வாங்குவதற்கான அவரது முயற்சியை பலரும் பாராட்டி வருகிறார்கள். ஆனால் அந்த ஐபோன் வாங்கியதற்காக தான் உழைத்த சேமித்தது பற்றியோ, தனது சம்பாத்தியம் பற்றியோ குப்பை சேகரிக்கும் தொழிலாளி வாயை திறக்கவில்லை.. எனினும் பலர் அவரத மாத வருமானம் எவ்வளவு, வங்கி இருப்பு எவ்வளவு என்று கேட்டு வருகிறார்கள்.

முதல் முதலாக இந்த வீடியோவை பகிர்ந்த நபர் வெளியிட்ட பதிவில், "தந்தையின் விலைமதிப்பற்ற பரிசு: குப்பை சேகரிக்கும் தொழிலாளி, தனத மகன் பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்காக ரூ. 1.80 லட்சம் மதிப்புள்ள ஐபோனை பரிசளிக்கிறார்" என்று கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த நெட்டிசன், "அவரது மகன்பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்ததில் அவர் பெற்ற மகிழ்ச்சியின் அளவு ஐபோனின் விலையை விட மிக அதிகம்" என்று கூறியுள்ளார்.


இன்னொரு நெட்டிசன், “அவர் இந்த பணத்திற்காக எவ்வளவு தூரம் உழைத்திருப்பார்.. அதை அவர் தனது மகனுக்காக இப்படி செலவழிக்க எப்படி முடிவு செய்தார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஹாட்ஸ் ஆஃப்” என்று நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இன்னொரு நெட்டிசன், குப்பை சேகரிக்கும் அவரால் கூட ஐபோன் வாங்க முடியும், ஆனால் என்னால் விவோவிற்கு மேல் போக முடியவில்லை எனறு கூறியுள்ளார். இன்னொரு நெட்டிசன், “தந்தையின் அன்பிற்கு ஈடு இணை எதுவும் இல்லை. அவரது தியாகங்கள் இறுதியாக பலனளிக்கின்றது" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+