பிளாஸ்டிக் டப்பாவில் சாப்பாடு வேண்டாம்.. ஹார்ட் பிரச்சனை கன்ஃபார்ம் - ஆய்வில் ஷாக் ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

சீனா: பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் வாங்கப்படும் உணவுகளை உண்பதால் இதயத்தில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

எங்கு பார்த்தாலும் இப்போது பிளாஸ்டிக் பயன்பாடு என்பது கணிசமாக அதிகரித்துவிட்டது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தண்ணீர் ஊற்றி கொடுக்கும் பாட்டில், ஸ்பூன், டிஃபன் பாக்ஸ் என அனைத்துப் பொருள்களுமே பிளாஸ்டிக் பொருள்களில்தான் கொடுத்து அனுப்புகிறோம். ஹோட்டல்களில் வாங்கப்படும் உணவுகள் பெரும்பாலும் பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் தான் சூடாக அடைத்து கொடுக்கப்படுகின்றன.

China Plastic

ஆன்லைனில் உணவு விற்பனை தொடங்கப்பட்டதில் இருந்து பொதுமக்களிடையே ஹோட்டல்களில் வாங்கி சாப்பிடும் கலாசாரமானது பெருகிவிட்டது. விரைவாகவும், அதே நேரத்தில் பிடித்தமான உணவுகளும் வீட்டின் வாசல் படிக்கே வந்து விடுவதால் ஆன்லைனில் உணவுகளை ஆர்டர்செய்து வாங்கி உண்ணும் பழக்கம் அதிகரித்துவிட்டது. அவ்வாறு வாங்கப்படும் உணவுப் பொருள்கள் அனைத்துமே சூடாக பிளாஸ்டிக் கண்டெய்னரில் பேக்கிங் செய்து வழங்கப்படுகிறது.

பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவது சூழலுக்கும், உடலுக்கும் உகந்ததல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இதனை அறிந்திருந்தும் அந்த தவறையே மீண்டும் மீண்டும் செய்து வருகிறோம். இது எதிர்காலத்தில் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்துவதோடு, நோய் பாதிப்புள்ள சந்ததியினரையும் உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்.

இந்நிலையில், பிளாஸ்டிக் டப்பாக்களில் வாங்கப்படும் உணவுகளை உண்பதால் இதயத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் உள்ள ரசாயனங்கள் உணவுப் பொருள்களில் கலந்து இதயத்தை நேரடியாகச் சென்று தாக்கி இதய நோய் ஏற்பட வழிவகுக்கும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் இருந்து கெமிக்கல்கள் எப்படி உணவுப் பொருள்களில் கலக்கிறது மற்றும் எப்படி ஆரோக்கியத்தில் பாதிப்பை உண்டாக்குகிறது என்பது குறித்து எண்டோகிரைனாலஜிஸ்ட் தெரிவித்துள்ளார்.

சீனாவில் எலிகள் மீது நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பிளாஸ்டிக் கண்டெய்னரில் சூடான உணவுப் பொருள்களை வைப்பதால் அதில் உள்ள ரசாயனங்கள் உணவில் கசிந்து கலப்பது தெரியவந்துள்ளது. இந்த உணவுகளை உண்ணும்போது அவை நேரடியாக இதய திசுக்களை சேதப்படுத்திகின்றன. மேலும், இதயத்தின் ஆரோக்கியத்துக்கு முக்கியப் பங்காற்றும் குடல் நுண்ணுயிரிகளையும் இது மாற்றியமைக்கிறது. உடலுக்குள் உணவு சென்று உடைக்கப்படும்போது உற்பத்தியாகும் வளர்சிதை மாற்றங்களை இந்த ரசாயனங்கள் பாதிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

புது டெல்லியில் உள்ள இந்திரபிரப்தா அப்பல்லோ மருத்துவமனையின் உட்சுரப்பியல் துறையின் மூத்த ஆலோசகர் மருத்துவர் ரிச்சா சதுர்வேதியின் கூற்றுப்படி, பிளாஸ்டிக்கில் பிஸ்பெனால் - ஏ (பிபிஏ) மற்றும் பித்தலேட்டுகள் ஆகிய ஏராளமான ரசாயனங்கள் உள்ளன. இந்த ரசாயனங்கள் இதய செயலிழப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளது. உடலுக்குத் தேவையான போதுமான ரத்தத்தை இதயம் பம்ப் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

பிளாஸ்டிக் கண்டெய்னர்களை மைக்ரோவேவில் வைத்து மீண்டும் சூடாக்கும்போது பிளாஸ்டிக்குகள் எதிர்வினையாற்றும். பிளாஸ்டிக் டப்பாவின் நெகிழ்வுத் தன்மை மற்றும் நீடித்து நிலைக்கும் தன்மையை அதிகரிப்பதற்காக உற்பத்தியாளர்கள் பிபிஏ, பித்தலேட்டுகள் போன்ற ரசாயனத்தை பயன்படுத்துகின்றனர். அதனை சூடாக்கும்போது அவை ரசாயனங்களை வெளியிடத் தொடங்குகின்றன.

இந்த பிபிஏ ரசாயனம் இதய திசுக்களில் செல்லுலார் சேதத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் வீக்கத்தையும் ஏற்படுத்தும். இது உடலில் உள்ள ஹார்மோன்களை சீர்குலைத்து இதயத்தின் செயல்பாட்டை பாதிக்கும். ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதோடு, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு மற்றும் இதயத்தின் கட்டமைப்பையே மாற்றிவிடுகிறது.

பொதுவாக வெளியில் சென்றாலே பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் தண்ணீரைப் பயன்படுத்தும் பழக்கம் பொதுமக்களிடையை அதிகரித்துவிட்டது. பிளாஸ்டிக்கில் இருந்து வெளிப்படும் ரசாயனங்களால் மாசுபடும் குடிநீரை அருந்துவதால் குடல் நுண்ணுயிரியல் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது விலங்குகளின் மாதிரியில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இந்த மாற்றங்கள் நுண்ணுயிர் கலவையில் மாற்றம், வீக்கம், திசு சேதத்துடன் தொடர்புள்ள வளர்ச்சிதை மாற்றங்களின் அதிகரிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும்.

அதேபோல, பிளாஸ்டிக் கொள்கலன்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் ஹார்மோன்களில் பாதிப்பை ஏற்படுத்தும். பிபிஏ, பித்தலேட்ஸ் போன்ற ரசாயனங்கள் நாளமில்லா சுப்பிகளில் சீர்குழைவை ஏற்படுத்தும். இவை ஹார்மோன்களின் சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்துவதோடு, கருவுறுதலிலும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால், கருவுறுதல் குறைதல், சந்ததிகளின் வளர்ச்சி பிரச்சனைகள் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

பிளாஸ்டிகள் குறித்து நடத்தப்பட்டு வரும் ஆய்வுகளில் மூளை உட்பட மனித திசுக்களில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ள சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+