ஒரே நாளில் சென்னை தொழில் அதிபரிடம் 2 கோடி சம்பாத்தியம்.. கற்பனை செய்ய முடியாத புதிய யுக்தி
சென்னை: சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த டி.ஏ.சேகர் என்பவர் தொழில் அதிபராக உள்ளார். இவர் கிரிக்கெட் பயிற்சியாளராக இருக்கிறார். சேகர் அண்மையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவது போல் ஒரு வீடியோ பார்த்தார். அதன் பின்னர் அவர்கள் குறிப்பிட்ட ஆன்லைன் தளத்தில் முதலீடு செய்துள்ளார். இதில் சென்னை தொழில் அதிபரிடம் 2.11 கோடி மோசடி செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் பொம்மை வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி ஏமாற்றும் கும்பல் தற்போது நூதன முறைகளை கையாள்கிறார்கள். அப்படித்தான் சென்னையில் மிகப்பெரிய அளவில் தொழில்அதிபர் ஒருவரிடம் மோசடி செய்திருக்கிறார்கள். அவர்கள் மோசடி செய்தவற்காக டீப்பேக்வீடியோவை பயன்படுத்தி இருக்கிறார்கள்.மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவது போல் ஒரு வீடியோவை உருவாக்கி ஏமாற்றி உள்ளார். மத்திய அமைச்சரே சொல்கிறாரே என்று நம்பி ஏமாந்துள்ளார் தொழில் அதிபர்.

சென்னை அடையாறைச் சேர்ந்த தொழிலதிபரான 69 வயதாகும் டி.ஏ.சேகர் கிரிக்கெட் பயிற்சியாளராக இருக்கிறார். சேகர் இணையதளத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவது போன்ற ஒரு வீடியோ காட்சியை பார்த்துள்ளார். அதன்பின்னர் ஆசையாக குறிப்பிட்ட ஆன்லைன் வர்த்தக தளத்தில் முதலீடு செய்திருக்கிறார். அதில் கொள்ளை லாபம் சம்பாதிக்கலாம் என்று சதுரங்க வேட்டை பாணியில் கூறியிருக்கிறார்கள்.
அது பணத்தை பறிக்கும் வலை என்று தெரியாமல் கண்மூடித்தனமாக நம்பிய சேகர், குறிப்பிட்ட ஆன்லைன் வர்த்தக தளத்தில் ரூ.2.11 கோடி முதலீடு செய்துள்ளார். ஆனால் முதலீடு செய்த தொகைக்கான லாபம் எதுவும் கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் தொடர்ந்து அவரை முதலீடு செய்யும்படி வற்புறுத்தி கொண்டே இருந்துள்ளார்கள். இதனால் சந்தேகம் அடைந்த அவர், சென்னை மத்திய குற்றப்பிரிவின் 'சைபர்' கிரைம் போலீசாரிடம் தொழில் அதிபர் சேகர் புகார் கொடுத்தார்.
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பெயரிலேயே மோசடி நடப்பது குறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். போலீசாரின் ஆலோசனையின் பெயரில், தொழில் அதிபர் சேகர் ரூ.25 லட்சம் தன்னிடம் ரொக்கப்பணமாக உள்ளது என்றும், அதை நேரில் வந்து வாங்கி கொள்ளுமாறும் மோசடி கும்பலுக்கு தகவல் அனுப்பியிருக்கிறார்.
அதை உண்மை என்று நம்பிய, மோசடி கும்பலை சேர்ந்த ஒருவர் சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகர் பகுதியில் தொழில் அதிபர் சேகரை சந்தித்தார். அப்போது அங்கு மாறுவேடத்தில் காத்திருந்த சைபர் கிரைம் தனிப்படை போலீசார் பணம் வாங்க வந்த அந்த நபரை மடக்கி பிடித்தார்கள். அந்த நபரின் பெயர் ராகுல்ராஜ் புரோஹித் என்றும், அவரிடம் விசாரித்தபோது, தனது தந்தை பிரித்விராஜ் புரோஹித் (41) தன்னை பணத்தை வாங்கி வர அனுப்பியதாக கூறியிருக்கிறார்.
உடனடியாக தனிப்படை போலீசார் களத்தில் இறங்கி, சென்னை பெரம்பூரை சேர்ந்த பிரித்விராஜ் புரோஹித்தை அதிரடியாக கைது செய்தனர். அவர் சென்னை சவுகார் பேட்டையில் பொம்மை கடை வைத்து இருந்தது விசாரணையில் தெரியவந்தது. மும்பையில் இருந்து செயல்படும் ஆன்லைன் மோசடி கும்பலின் ஏஜென்டாக பிரித்விராஜ் புரோஹித் செயல்பட்டிருக்கிறாராம். அதற்காக அவருக்கு அதிக அளவு கமிஷன் தொகை கிடைத்து வந்தததாம். இந்த வழக்கில் தொடர்புடைய மும்பை மோசடி கும்பலை கைது செய்ய தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications