Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னைக்கு அருகே உலகத்தரத்தில் விளையாட்டு நகரம்! இடத்தை தேர்வு செய்வதில் உதயநிதி ஸ்டாலின் தீவிரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னைக்கு அருகே உலகத்தரத்தில் விளையாட்டு நகரம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் உதயநிதி ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார்.

விடுமுறை தினமான நேற்றுக் கூட அதிகாரிகள் சகிதமாக செம்மஞ்சேரி பகுதிக்கு சென்று இடத்தை தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்.

சட்டசபையில் விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது இது குறித்து மேலும் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளையாட்டு நகரம்

விளையாட்டு நகரம்

சர்வதேச தரத்திலான விளையாட்டு நகரம் ( GLOBAL SPORTS CITY) அமைத்திட இடம் தேர்வு செய்வது தொடர்பாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செம்மஞ்சேரியில் ஆய்வு மேற்கொண்டார். சர்வதேச தரத்திலான விளையாட்டு நகரம் அமைப்பதற்காக தேவைப்படும் இடத்தின் பரப்பளவு, நிலத்தின் தன்மை மற்றும் வழித்தடங்கள், ஆகியவை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

மாதிரி வரைபடம்

மாதிரி வரைபடம்

விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இணைப்புச் சாலை வசதிகள் குறித்து இடத்தின் மாதிரி வரைபடம் மூலம் அலுவலர்கள் எடுத்துரைத்தனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் ஸ்போர்ட்ஸ் சிட்டி தொடங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிதுள்ளதாக கூறினார்.

105 ஏக்கர்

105 ஏக்கர்

விளையாட்டு நகரத்திற்காக இரண்டு இடங்களை ஆய்வு செய்ய உள்ளதாகவும், அந்தவகையில் முதற்கட்டமாக செம்மஞ்சேரியில் சுமார் 105 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை அதிகாரிகளுடன் ஆய்வு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். விளையாட்டு நகரம் அமைக்க இந்த இடம் சிறப்பாக இருக்குமா, சாலை வசதி போன்ற அனைத்து வசதிகளையும் எவ்வாறு ஏற்படுத்தலாம் என்பது குறித்தும் ஆய்வு செய்திருப்பதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.

 மானியக் கோரிக்கை

மானியக் கோரிக்கை

முதலமைச்சர் ஸ்டாலினிடம் இடம் தேர்வு மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து தெரிவிக்கப்பட்டு மேற்கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்போர்ட்ஸ் சிட்டி உலகத்தரத்தில் அமைந்தால் சிறப்பானதாக இருக்கும் என்று கூறிய அவர் இது குறித்து சட்டமன்றத்தில் விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது விரிவாக பேசுவதாகத் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+