மாதவரத்தில் காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தற்கொலை.. 'காதலனை ஒன்றும் செய்யாதீர்கள்'..உருக்கமான வீடியோ
சென்னை: சென்னை மாதவரம் அருகே 5 ஆண்டுகளாக காதலித்து வந்தநிலையில், காதலன் திடீரென ஏமாற்றியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலைக்கு முன்பு இளம்பெண் வெளியிட்ட வீடியோவில், 'இதற்காக காதலனை எதுவும் செய்ய வேண்டாம்' என கூறியுள்ளார்.
சென்னை மாதவரம் அருகே உள்ள சின்ன மாத்தூர் பாரதி நகர் தெருவை சேர்ந்தவர் டேனியல் ராஜா. டேனியல் ராஜா அங்குள்ள பகுதியில் பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார்
இவருக்கு ஏஞ்சல் என்ற மகளும் ரூபன் என்ற மகனும் உண்டு. ஏஞ்சல் தன் எதிர் வீட்டு இளைஞர் தனுஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

வாட்ஸ்-அப் மெசேஜ்
டிரைவராக பணிபுரிந்து வரும் தனுசும் ஏஞ்சலை காதலித்து வந்துள்ளார். இருவரும் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ள இவர்கள் செல்போனிலும் அடிக்கடி பேசி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏஞ்சலின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அந்த மெசேஜை பார்த்து ஏஞ்சல் அதிர்ச்சியடைந்தார்.

என்னை மறந்து விடு
அந்த மெசேஜில், தனுஷ் வேறொரு பெண்ணை காதலிப்பதாகவும்... அந்த பெண்ணை தான் தனுஷ் திருமணம் செய்ய போகிறேன் என்றும் இருந்தது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான ஏஞ்சல் உடனடியாக தனுஷிடம் நேரில் சென்று இது தொடர்பாக விளக்கம் கேட்டார். அப்போது தனுஷ் அந்த மெசேஜ் உண்மை தான் என்றும்.. நான் வேறொரு பெண்ணை காதலித்து வருவதாகவும்.. அந்த பெண்ணை தான் திருமணம் செய்வேன் என்றும் இதனால் என்னை மறந்து விடு என்று கூறியுள்ளார்.

மிகுந்த மன உளைச்சல்
5 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தவர் திடீரென காதலை முறித்துக்கொண்டதால் ஏஞ்சல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் கடந்த 2 நாட்களாக ஏஞ்சல் குடும்பத்தினர் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்துள்ளார். தொடர்ந்து நேற்று மாலை தனுஷின் வீட்டுக்கு சென்ற ஏஞ்சால் தனுஷ் தன்னை காதலித்து ஏமாற்றியது குறித்து கூறியிருக்கிறார். மேலும் எங்களுக்கு திருமணம் செய்துவைக்குமாறும் கூறியிருக்கிறார்.

மகனின் விருப்பம் தான்
ஆனால் தனுஷின் பெற்றோர் மகனின் விருப்பம் தான் எங்களுக்கு முக்கியம் என்றும் அவன் யாரை விரும்புகிறானோ அவளை தான் அவனுக்கு திருமணம் செய்து வைப்போம் என்றும் இதில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்றும் கூறி கை விரித்துள்ளனர். இதனால் ஏஞ்சல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இந்த நிலையில் வீட்டில் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் வெளியில் சென்ற நேரம் பார்த்து துப்பட்டாவால் ஏஞ்சல் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தூக்குப்போட்டு சாவு
இந்த நிலையில் வீட்டுக்கு வந்த பெற்றோர் ஏஞ்சல் துக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் ஏஞ்சலின் செல்போனை ஆய்வு செய்தனர். அதில் ஒரு வீடியோ பதிவாகி இருந்தது.

உருக்கமான வீடியோ
அந்த வீடியோவில், தன்னுடைய தற்கொலைக்கு நான் தான் காரணம்.. காதல் தோல்வியால் தனது காதலனை மறக்க முடியவில்லை.. அதனால்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.. இதற்காக எனது காதலனை ஒன்றும் செய்ய வேண்டாம்.. என ஏஞ்சல் உருக்கமாக பேசியிருந்த வீடியோ பதிவாகியிருந்தது. இதன் பின்னரே ஏஞ்சல் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

போலீசார் விசாரணை
இது தொடர்பாக சென்னை மாதவரம் பால் பண்ணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலன் ஏமாற்றியதால் இளம் பெண் தூக்க்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications