ஆதார் கார்டை இனி தேட வேண்டாம்! 2 கோடி பேர் பயன்படுத்தும் இந்த எளிய வழிமுறை உங்களுக்குத் தெரியுமா?
சென்னை: இந்தியக் குடிமக்களின் தனித்துவமான அடையாளச் சான்றாக விளங்கும் ஆதார் கார்டு, நாட்டின் டிஜிட்டல் கட்டமைப்பில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. பயோமெட்ரிக் மற்றும் மக்கள்தொகை விவரங்களை உள்ளடக்கிய இது, அரசு நலத்திட்டங்கள் மற்றும் மானியங்களை நேரடியாகப் பெறுவதற்குப் பேருதவியாக உள்ளது. தனிநபர் அடையாளத்தை எளிய முறையில் எங்கும் சரிபார்க்க உதவும் இந்த ஆவணம், காகிதமில்லா நிர்வாகத்தை நோக்கி இந்தியாவை நகர்த்தும் ஒரு முதன்மையான கருவியாகும்.
இந்தியாவின் மிக முக்கிய அடையாள ஆவணமாகத் திகழும் ஆதார் அட்டை, இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியான எம்-ஆதார் mAadhaar, பயனர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆதார் அட்டையை தேட வேண்டாம்
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் (iOS) ஆகிய இரண்டு தளங்களையும் சேர்த்து, இந்தச் செயலியானது தற்போது 2 கோடிக்கும் அதிகமான ஒட்டுமொத்தப் பதிவிறக்கங்களைக் கடந்து (20 million cumulative downloads) புதிய சாதனை படைத்துள்ளது.
இந்த வளர்ச்சி குறித்து UIDAI வட்டாரங்கள் சொல்லும் போது, யூசர்களின் வசதிக்காக செயலியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்படுத்தப்பட்ட பதிப்புகள் மற்றும் எளிமையான பயன்பாட்டு முறையே vஇந்த வெற்றிக்குக் காரணம் என்று ஹேப்பியாக தெரிவித்துள்ளன.
ஆதார் கார்டு - ஸ்மார்ட் போன்
ஆதார் அட்டையைக் காகித வடிவில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லாமல், ஸ்மார்ட்போனிலேயே டிஜிட்டல் முறையில் சான்றிதழ்களைப் பராமரிக்கும் வசதி, தற்போதைய டிஜிட்டல் சூழலில் பொதுமக்களுக்குப் பேருதவியாக அமைந்துள்ளது.
மேம்படுத்தப்பட்ட இந்தச் செயலி மூலம் முகவரியைப் புதுப்பித்தல், மொபைல் எண்ணைச் சரிபார்த்தல் மற்றும் இ-ஆதார் டவுன்லோடு போன்ற 35-க்கும் மேற்பட்ட சேவைகளை மக்கள் தங்கள் செல்போன் வழியாகவே மேற்கொள்ளலாம். குறிப்பாக, ஒரே ஆப்பில் குடும்பத்தின் 5 உறுப்பினர்களின் ஆதார் விவரங்களை சேமித்து வைத்துக்கொள்ளும் Family Profile வசதி, பயணங்களின்போது ஆவணங்களை நிர்வகிக்கும் சுமையைக் குறைக்கிறது.
பயோமெட்ரிக் லாக் வசதி
பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, இந்த ஆப் மிக உயரிய டெக்னாலஜியை கொண்டிருக்கிறதாம்.. இதில் உள்ள பயோமெட்ரிக் லாக் வசதி மூலம், பயனர்கள் தங்களின் கைரேகை அல்லது கண் கருவிழி அடிப்படையிலான அடையாளச் சரிபார்ப்பை தற்காலிகமாக செயலிழக்க செய்ய முடியும். இதன் மூலம் யூசரின் அனுமதியின்றி ஆதார் தரவுகள் பயன்படுத்தப்படுவதை தடுக்கலாம்.
மேலும், Device Binding அதாவது டிவைஸ் பைண்டிங் அம்சம் மூலம், இந்த ஆப் ஒரு குறிப்பிட்ட கைபேசியுடன் மட்டுமே பாதுகாப்பாக இணைக்கப்படுவதால், அங்கீகரிக்கப்படாத நபர்களின் ஊடுருவல் அபாயம் வெகுவாகக் குறைகிறது.
டிஜிட்டல் ஆதார் அடையாள சான்றுகள்
இந்த டிஜிட்டல் ஆதார் பல இடங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், சில குறிப்பிட்ட மற்றும் தீவிரமான சரிபார்ப்பு நடைமுறைகளின்போது அசல் பிசிக்கல் ஆதார் அட்டை தேவைப்படலாம் என்பதைப் பயனர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ரயில் மற்றும் விமான நிலையங்களில் இந்த டிஜிட்டல் ஆதாரைப் பயன்படுத்தும் வசதி நடைமுறையில் இருந்தாலும், பாதுகாப்பு கருதி அசல் அட்டையை உடன் வைத்திருப்பது நல்லது.
இந்தியாவின் டிஜிட்டல் நிர்வாக முறையில் இந்த 2 கோடிப் பதிவிறக்கம் என்பது வெறும் எண்ணிக்கையல்ல, காகிதமில்லா சேவைகளை நோக்கி நாடு எடுத்து வைத்துள்ள ஒரு தீர்க்கமான முன்மாதிரி என்கிறார்கள் அதிகாரிகள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications