Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆவின் பாலிடிக்ஸ்.. ரோலக்ஸ் வாட்ச் கட்டிக்கொண்டு ஆடு மேய்க்கும் கதை.. யாரை சொல்கிறார் மனோ தங்கராஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களை வாழ வைப்பதற்காக சில கைக்கூலிகள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம் சாட்டியுள்ளார். ரோலக்ஸ் வாட்ச் கட்டிக்கொண்டு ஆடு மேய்க்கும் கதை பேசுபவர்களுக்குப் பால் விவசாயிகள் நிலை புரியாது தெரியாது என்றும் மனோ தங்கராஜ் கூறியள்ளார்.

ஆவின் பச்சை நிற பால் நிறுத்தப்படுவதாக வெளியான தகவல் தமிழ்நாட்டில் பற்றி எரிகிறது. பாஜகவினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமியும் ஆளும் திமுக அரசைக் கண்டித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

Aavin Milk issue: Minister Mano Thangaraj condemned BJP Leader Annamalai

ஆவின் பால் விற்பனை குறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில், அதுத் தொடர்பாக தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய மனோ தங்கராஜ், ஆவின் பாலில் உள்ள கொழுப்பு திருடப்படுவது என்று சொல்வது அபத்தமான, மோசமான ஒரு பொய் என்று கூறினார்.

இதுபற்றி பேசுபவர்களுக்கும் புகார் கூறுபவர்களுக்கும் இதில் ABCகூட தெரியாது. ஆவின் நிறுவனம் 4 விதமான பால்களை விற்பனை செய்கிறது. முதலில் டிலைட் பால் 3% கொழுப்பும், 8.5 % புரதம் உள்ளிட்ட பொருட்களுடன் சேர்த்து விற்கப்படுகிறது. அதேபோல், விட்டமின் ஏ மற்றும் விட்டமின் பி என செறிவூட்டப்பட்ட பால் விற்கப்படுகிறது.

கொழுப்பு அதிகம் வேண்டும் என்று கேட்பவர்களுக்கு 'புல் கிரீம் மில்க்'உள்ளது. ஆரஞ்ச் கலர் பாலில் கூடுதலாக, கொழுப்பும், புரதமும் சேர்த்து வழங்கப்படுகிறது. தற்போது டிலைட் பால் விற்பனை அதிகரித்துள்ளது. பச்சை நிற பால் விற்பனை குறைந்துள்ளது. சென்னையில் இன்று 15 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகிக்கொண்டு இருக்கிறது. இதுதான் அதிகபட்சம்.

தற்போது அதையும் தாண்டி விற்பனையாக வாய்ப்பு உள்ளது. 30 லட்சம் லிட்டர் பால் என்பது சராசரியான நியாயமான கொள்முதல்
அதிமுக ஆட்சிக் காலத்தில் தரத்திற்கு ஏற்ற விலையைக் கொடுக்கவில்லை. இப்போது 50% அதிகமாகக் கொடுக்கப்படுகிறது. பால் கொள்முதல் செய்த பின்னர் 10 நாட்களில் பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது. இது ரோலக்ஸ் வாட்ச் கட்டிக்கொண்டு ஆடு மேய்க்கும் கதை பேசுபவர்களுக்குப் புரியாது தெரியாது.

அதானி கும்பலை வாழவைக்க எப்படி ஒரு பிரதமர் ஓடுகிறாரோ அதனைப் போன்று இங்கு சில கார்ப்ரேட்களை வாழவைக்க சில கைக்கூலிகள் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள நிறுவனத்தால் நேரடியாக முதலில் பயன்பெறுகின்றவர்கள் கடைக்கோடி விவசாயிகள்.

இந்த விவசாயிகள் நலனுக்காகத் தொடங்கப்பட்ட ஆவின் நிறுவனத்தைத் தகர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒருவர் செயல்படுகிறார் என்றால் அவரை கைக்கூலி அல்லாமல் வேறு யாராக இருக்க முடியும்?.

தமிழகத்தில் ஆவின் அசைக்க முடியாத நிறுவனமாக உள்ளது. இதனால் பால் உற்பத்தியாளர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கிறது. வருடம் முழுவதும் விலை கிடைக்கிறது. வட இந்திய நிறுவனங்கள் தமிழகத்திற்குள் நுழைய முடியவில்லை. இதனால் ஆவின் பெயரைக் கெடுக்க, நற்பெயருக்குக் களங்கள் விளைவிக்க முடியுமா என்று சிலர் பார்க்கிறார்கள்.

ஆவின் பால் பற்றி பரிசோதனை செய்தோம் அதுவும் 'பெட்' பாட்டிலில் என்று ஒருவர் சொல்கிறார். ஆவினுக்கு முதலில் பெட் பாட்டிலே கிடையாது என்று கூட அவருக்குத் தெரியவில்லை. அதனால் ஆவின் பால் குறித்த பொய் பிரச்சாரங்களைப் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறினார் மனோ தங்கராஜ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+