யூடியூபர் அபிஷேக் ராஜாவுக்கு நாக்கில் சனி!.. சரவணனை போல் பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்படுவாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் போட்டியாளரும் யூடியூபருமான அபிஷேக் ராஜா மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசுவதால் அவர் அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளனர். 100 நாட்கள் இவர்கள் தங்கியிருக்க வேண்டும். கடைசியாக மக்கள் ஆதரவுடன் தங்கும் ஒரு போட்டியாளருக்கு வெற்றிக் கோப்பையும் 50 லட்சம் பணமும் வழங்கப்படும்.

இந்த சீசனில் நிறைய பெண் போட்டியாளர்கள் உள்ளார்கள். இவர்களில் மாடல்கள், யூடியூபர்கள், நாடகக் கலைஞர்கள், நாட்டுப்புற பாடகி, ஆங்கர், நடிகர், நடிகைகள் என பலதரப்பட்டோர் உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி

பொதுவாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி சென்டிமென்ட், சர்ச்சைகளுக்கு புகழ்பெற்றதாகும். எந்த கலவரமும் வெடிக்காவிட்டாலும் பிக்பாஸ் எதையாவது கொளுத்தி போட்டு அந்த இடத்தை களேபரம் செய்துவிடுகிறார். எனினும் இந்த சீசனில் பிக்பாஸுக்கு சிரமமே இல்லாமல் களேபரத்தை கொண்டு வரக் கூடிய ஒருவர் இருக்கிறார். அவர் யூடியூபர் அபிஷேக் ராஜா.

சர்ச்சைகள்

சர்ச்சைகள்

இவர் சண்டைகள், சர்ச்சைகளை கொண்டு வருவதில் கிட்டதட்ட கடந்த சீசன் ரன்னர் அப் பாலாஜி முருகதாஸை அப்படியே உரித்து வைத்துள்ளார். அபிஷேக் ராஜா உண்மையாக விளையாடவில்லை என ரசிகர்கள் மத்தியில் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் அவர் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஒவ்வொருவர் குறித்து ரிவ்யூ சொல்கிறார்.

தாமரைச் செல்வி

தாமரைச் செல்வி

அப்போது நாடக கலைஞர் தாமரைச் செல்வி குறித்து ரிவ்யூ கொடுத்த அபிஷேக், பட்டை அடிச்சிட்டு ஊரை ஏமாத்துறாங்க என்றார். இதனால் கோபமடைந்த தாமரைச் செல்வி தம்பி பட்டையை பற்றி பேசுனா எனக்கு கோபம் வரும். அதனால் அதப்பற்றி பேசாதீங்க என்றார். இமான் அண்ணாச்சியிடம் முறையிட்ட போது அப்படியா சொல்றான், போச்சு போ அபிஷேக் உனக்கு 2 லட்சம் ஓட்டு போச்சு என்கிறார்.

தாமரை

தாமரை

உடனே என்ன நினைத்தாரோ அபிஷேக் , தாமரையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். வெள்ளந்தியான, தனது கடும் உழைப்பால் முன்னுக்கு வந்த தாமரையை போய் ஊரை ஏமாற்றுவதாக அபிஷேக் பேசியது சர்ச்சையையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருநீற்று பட்டை என்பது மதம் சார்ந்தது. என்னதான் மன்னிப்பு கேட்டாலும் அபிஷேக் மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளார். விபூதி வைப்பதும், குங்குமம் வைப்பதும் இந்து மதத்தில் பெரும்பாலானோர் பின்பற்றக் கூடிய ஒன்று. கடவுளுக்கும் கூட பட்டை போட்டு குங்கும பொட்டு வைப்பது காலம் காலமாக பின்பற்றப்படும் மரபு. அப்படியிருக்கும் போது அபிஷேக் எப்படி மத உணர்வுகளை கேலி செய்யும் விதத்தில் பேசலாம் என நெட்டிசன்கள் கொதித்துள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 3

பிக்பாஸ் சீசன் 3

கடந்த பிக்பாஸ் சீசன் 3 இல் நடிகர் சரவணன், தான் கல்லூரி காலங்களில் பெண்களை உரசவே பஸ்ஸில் சென்றதாக கூறி பெருமைப்பட்டார். இதனை கமல்ஹாசன் கண்டிக்காமல் விட்டார். ஆனால் ஊடகங்களில் சர்ச்சையானது. அவரை கன்பெஷன் ரூமுக்கு அழைத்த பிக்பாஸ், பெண்கள் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க சொல்லிவிட்டு இது போல் பேசியதற்காக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவதாக கூறி அவரை மெயின் டோர் வழியாக அனுப்பாமல் கன்பெஷன் ரூம் வழியாக உள்ள மற்றொரு கதவு வழியாக வெளியேற்றினார்.

சரவணன்

சரவணன்

பெண்களை இடிப்பதற்காகவே பேருந்தில் பயணம் செய்தேன் என பெண்களை இழிவாக பேசிய சரவணன் சர்ச்சைகளால் வெளியேற்றப்பட்ட நிலையில் மத உணர்வுகளை புண்படுத்தும் அளவுக்கு பேசிய அபிஷேக் ராஜாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவாரா என்ற கேள்வி நெட்டிசன்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+