சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சுதந்திர தேவி கண்ணீர் விடுகிறாள்! அமெரிக்காவில் கருக்கலைப்பிற்கு தடை.. பொங்கி எழுந்த ப. சிதம்பரம்

Google Oneindia Tamil News

சென்னை: அமெரிக்காவில் கருக்கலைப்பு சட்ட பூர்வமானது இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை காங்கிரஸ் மூத்த எம்பி ப. சிதம்பரம் இதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அமெரிக்காவில் கருக்கலைப்பு சட்ட பூர்வமானது இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கடந்த 50 வருடமாக அங்கு கருக்கலைப்பிற்கு ஆதரவாக இருந்த ரோ vs வேட் என்ற வழக்கின் தீர்ப்பை ரத்து செய்து, கருக்கலைப்பிற்கு அரசியலைப்பில் இடம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

அமெரிக்க பெண்கள் இடையே இந்த தீர்ப்பு கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த தீர்ப்பு காரணமாக அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் பெரும்பான்மையான மாகாணங்களில் கருக்கலைப்பு தடை செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன.

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை! தேவாரம் - திருவாசகம் பாடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர்! சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை! தேவாரம் - திருவாசகம் பாடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர்!

ப. சிதம்பரம்

ப. சிதம்பரம்

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த எம்பி ப. சிதம்பரம் இதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்தில், இந்த நாள் மிகவும் சோகமான நாள். அதோடு உரிமை, சமத்துவம், தனிமை மனித சுதந்திரம், மரியாதையை அனைத்திற்கும் எதிரான மோசமான நாளாக இந்த நாள் மாறியுள்ளது. முக்கியமான பெண்களுக்கு மோசமான நாள்.

 விமர்சனம்

விமர்சனம்

நீங்கள் உற்று கவனித்தீர்களா என்றால்.. உங்களால் சுதந்திர தேவியின் சிலையில் கண்ணீர் வடிவதை பார்க்க முடியும். ஒரு பெண் கர்ப்பத்தில்.கஷ்டப்பட்டு.. வலிகளை தாங்கி தனக்கு விருப்பம் இல்லாத ஒரு குழந்தைக்கு உயிர் கொடுப்பதை உங்களால் சிந்தித்து பார்க்க முடிகிறதா? பாலியல் வன்புணர்வு மூலம் பிறக்கும் குழந்தை, குடும்ப பாலியல் துன்புறுத்தலால் பிறக்கும் குழந்தைகளை பற்றி உங்களால் சிந்தித்து பார்க்க முடிகிறதா?

கண்ணீர்

கண்ணீர்

குழந்தையை வளர்க்க போதிய பொருளாதாரம் இல்லாத தாய்,.. அந்த குழந்தைக்கு உணவு, உடை வழங்க முடியாத தாய்.. அம்மாவின் அன்பை முழுமையாக பெற முடியாத குழந்தை இந்த பூமியில் பிறப்பதை உங்களால் சிந்தித்து பார்க்க முடிகிறதா? இந்த சட்டம் அதற்குதான் வழிவகுக்கிறது. ஒரு நாடு பிளவு பட்டு இருந்தால்.. தேர்வு செய்யப்படாத நியமன நீதிபதிகள் கூட இது போன்ற முன்முடிவோடு தீர்ப்புகளை வழங்க முடியும்.

எதிர்ப்பு இல்லை

எதிர்ப்பு இல்லை

இப்படி தீர்ப்புகளை வழங்கிவிட்டு அவர்கள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் தப்பிக்கவும் முடியும். அரசியலமைப்பு உரிமை, சுதந்திரம் என்பது நீதிமன்றம் வழங்கும் உரிமை அல்ல. அது பிறப்புரிமை. கோர்ட் வழங்காத ஒரு உரிமையை அந்த கோர்ட் நினைத்தாலும் பிடுங்க முடியாது, என்று ப. சிதம்பரம் அமெரிக்கா உச்ச நீதிமன்ற தீர்ப்பை மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

English summary
Abortion has no constitutional rights says USA Supreme Court: P Chidambaram disappointed with the decision Abortion has no constitutional rights says USA Supreme Court: P Chidambaram disappointed with the decision . அமெரிக்காவில் கருக்கலைப்பு சட்ட பூர்வமானது இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X