"ஏபிவிபி" அம்மா.. நரபலி கொடுத்துடுவாங்க.. தமிழ்நாடுதான் காப்பாற்றும்.. கதறிய பெண்.. நடந்தது என்ன?
நான் தமிழ்நாட்டில் இருந்தால்தான் பாதுகாப்பாக இருப்பேன். இங்குதான் என் உயிருக்கு ஆபத்து இல்லை என்றுள்ளார் அந்த பெண்.
சென்னை: வளர்ப்புத் தாய் நரபலி கொடுக்க இருப்பதால் தமிழ்நாட்டுக்கு தப்பி வந்த தனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் முதுகலை பட்டதாரி பெண் ஷாலினி சர்மா. இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனும் ஏ.பி.வி.பி. அமைப்பில் தனது தனது வளர்ப்புத் தாய் சுதா ஷர்மா உறுப்பினராக இருக்கிறார்.
அந்த அமைப்பில் இருக்கும் தாய், பல்வேறு மூட நம்பிக்கைகளை கொண்டவர். முக்கியமாக மாந்த்ரீகங்களிலும், நரபலியிலும், மூட நம்பிக்கைகளிலும் அதீத நம்பிக்கை கொண்டவர் எனத் தெரிவித்துள்ளார்.

நரபலி
இந்த நிலையில் யோகத்தை அடைய வேண்டும் என்று அவர் பல்வேறு பூஜைகளை செய்து வருகிறார். பூஜைகளை செய்வதுதான் அவரின் வழக்கம். இந்த பூஜைகளுக்கு இடையில் தன்னை நரபலி கொடுக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் இப்படி செய்தால் தனக்கு சாகாவரம், பொருளாதார யோகம் கிடைக்கும் என்று தனது தாய் நினைப்பதாக அந்த பெண் மனுவில் குறிப்பிட்டு உள்ளார். இதெல்லாம் போக அதிர்ச்சி அளிக்கும் இன்னொரு அதிர்ச்சி அளிக்கும் தகவலையும் அந்த பெண் தனது மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அதிர்ச்சி
அதில், ஏற்கனவே தனது 10 வயது சகோதரனையும், மேலும் இருவரையும் அவர் நரபலி கொடுத்துள்ளார். இதே யோகம் வேண்டி அவர்களை நரபலி கொடுத்ததாகவும், ஆனால் யோகம் கிடைக்கவில்லை என்பதால் பெண்ணை நரபலி கொடுத்தால் யோகம் கிடைக்கும் என்பதால் என்னை நரபலி கொடுக்க முயன்று வருகிறார்கள். அதனால் என்னை காப்பாற்றுங்கள். சொன்னாலும் அவர்கள் உதவி செய்வது இல்லை.

போலீஸ்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிராக போலீசில் புகாரளிக்க எவருக்கும் தைரியமில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். நரபலியில் இருந்து தப்பிப்பதற்காக தட்சிணாமூர்த்தி என்ற நண்பரின் உதவியுடன் பிப்ரவரி 17ம் தேதி சென்னை வந்தேன்.. இங்கேதான் நான் பாதுகாப்பாக இருக்கிறேன். இங்கேதான் எனக்கு அடைக்கலம் கொடுத்தனர். தந்தைப் பெரியார் திராவிடர் கழக செயலாளர் வீட்டில் தங்கியிருக்கும் தன்னை, குடும்பத்தினரும், ஏ.பி.வி.பி. அமைப்பினரும் வலுக்கட்டாயமாக போபால் அழைத்துச் செல்ல முயற்சி செய்கிறார்கள்.

மத்திய பிரதேசம்
என்னை மீண்டும் மத்திய பிரதேசம் அழைத்து சென்று நரபலி கொடுக்க முயற்சி செய்கிறார்கள். அதனால் என்னை காப்பற்றுங்கள். நான் தமிழ்நாட்டில் இருந்தால்தான் பாதுகாப்பாக இருப்பேன். இங்குதான் என் உயிருக்கு ஆபத்து இல்லை, என மனுவில் அச்சம் தெரிவித்துள்ளார். வலுக்கட்டாயமாக தன்னை போபாலுக்கு கொண்டு சென்று விட்டால் தன்னை நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளது என மனுவில் கூறியுள்ளார். தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம். இங்குதான் மக்கள் சுதந்திரமாக இருக்கிறார். மபி திரும்பி சென்றால் என்னை நரபலி கொடுத்து விடுவார்கள், எனக்கு செல்ல பயமாக இருக்கிறது, என்பதால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.இந்த மனு, நீதிபதி சந்திரசேகரன் முன் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications