படக்னு ஏசி சண்முகம் போட்டு உடைச்சிட்டாரே.. விஜய்யை பாஜகவுக்கு ஓபனா கூப்பிடுகிறாரே? என்னவா இருக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவர் விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைப்பார் என்று ஒரு சாராரும், யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடுவார் என்று மற்றொரு சாராரும் கருத்து கூறி வருகிறார்கள்.. இந்நிலையில், அதிமுக-பாஜக கூட்டணிக்கு விஜய் வரவேண்டும் என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார் புதிய நீதி கட்சி ஏசி சண்மும்.ஒரு யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் மணி தந்திருந்த பேட்டியில், "விஜய்யை வைத்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்கிறார்.. ஒருவருக்கு வீக்னஸ் இருக்கலாம், ஆனால் அந்த வீக்னஸை காட்டி கொள்ள கூடாது..அந்தவகையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கும் வீக்னஸ் உள்ளது.. தேர்தலுக்கு பிறகு யாருமே அதிமுகவுடன் கூட்டணிக்கு செல்லவில்லை. மெகா கூட்டணி என்றெல்லாம் எடப்பாடி சொல்லியும்கூட, கூட்டணி வைக்க முன்வரவில்லை.

{image-s-18-jpg-1761389000772_1761388994380-600x338.jpg tamil.oneindia.com

அதிமுக-தவெக கூட்டணி

இன்று விஜய் விஷயத்தில் எடப்பாடியின் செயல்பாடுகள் அனைத்தும் அதிமுகவின் விரக்தியைதான் வெளிப்படுத்துகிறது.. அதிமுக, திமுக இரண்டுமே எனக்கு எதிரி என்று நாளைக்கு விஜய் சொன்னால், அதிமுகவுக்குதான் மிகப்பெருத்த பின்னடைவு ஏற்படும்.. அதுக்காக திமுகவுக்கு தவெகதான் எதிரி என்பதெல்லாம் ஏற்க முடியாது.தேர்தல் நெருக்கத்தில் அரசியல் களத்தில் நிற்கக்கூடியது அதிமுகவும், திமுகவும் மட்டுமே.. ஒரே ஒரு கரூர் நிகழ்வை விஜய்யால் எதிர்கொள்ள முடியவில்லை. இப்போதுவரை அவரால் வெளியே வரமுடியவில்லை" என்றெல்லாம் கூறியிருந்தார்.

விஜய் தனித்து போட்டியிடுவார்

அதேபோல, மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி தந்திருந்த ஒரு பேட்டியில், "விஜய் கூட்டணிக்கு வந்தால் தனக்கான வெற்றி நிச்சயம் என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாக நம்புகிறார். எனவே எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தவியாய் தவித்து வருகிறார்..

ஆனால் விஜய்யை பொறுத்தவரைக்கும் இந்த முறை தனித்து தேர்தலில் போட்டியிடுவதுதான்.. காரணம், அதிமுகவுடன் பாஜக இருப்பதால், கண்டிப்பாக அந்த கூட்டணிக்கு விஜய் போக மாட்டார். இதுதான் உண்மை..விஜய்யை சப்போர்ட் செய்ய வேண்டும் என்ற நோக்கம் அதிமுக, பாஜகவுக்கு இல்லை.. அதேசமயம் விஜய் மீது குற்றம் சொல்லியும் அதிமுக, பாஜகவுக்கு எந்த லாபமும் இல்லை.

ரூ.500 கோடி சம்பளம்

ஆனாலும் கரூர் சம்பவத்தில் விஜய் மீது தவறில்லை என்று பாஜக, அதிமுக தொடர்ந்து சொல்ல காரணம், திமுக மீது பழியை போட்டு, திமுகவுக்கு நெருக்கடி தந்து, அவர்களை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்ற இதை பயன்படுத்தி கொள்ளலாம், திமுக வாக்கு வங்கியில் சேதாரத்தை ஏற்படுத்தலாம் என்ற நோக்கம்தானே தவிர, விஜய்க்கு சப்போர்ட் செய்வதற்காக கிடையாது.

ரூ.500 கோடி வருமானத்தை தூக்கி போட்டுவிட்டு விஜய் அரசியலுக்கு வந்தது, எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைக்கவா? விஜய்யை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைக்கவா எடப்பாடி கட்சி நடத்திட்டு இருக்காரு? எனவே இதுவே முரணானது என்பதால்

அதிமுக, தவெக கூட்டணி என்பது இந்த தேர்தலில் சாத்தியமில்லை. அதேசமயம், விஜய் தனித்து நின்று போட்டியிட்டால் ஓட்டுக்கள் பிரிந்து திமுகவுக்குதான் சாதகமாகும்" என்று தெரிவித்துள்ளார்.

புதிய நீதிக்கட்சி சண்முகம்

இந்நிலையில், அதிமுக-பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும், என்று , புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வெளிப்படையாகவே அழைப்பு விடுத்துள்ளார்...சென்னை கிண்டியில், சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது சகோதரர்கள் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, "முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்திலிருந்தே, கடந்த 25 ஆண்டுகளாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நீதிக் கட்சி இருக்கிறது.. வரும் 2026 தேர்தலிலும் பாஜக தொடர்வோம். நடிகர் விஜயின் தவெகவும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வேண்டும்.அப்படி வந்தால், பலமான கூட்டணியாக இருக்கும்; தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். பாஜக கூட்டணிக்கு விஜயை வரவேற்கிறோம்" என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+