நடிகர் அபினய் உயிரைப் பறித்த கல்லீரல் சிரோசிஸ் எப்படி ஏற்படுகிறது? அதற்கான சிகிச்சை என்ன?
சென்னை: நடிகர் அபினய் கல்லீரல் சிரோசிஸ் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார். அபினய் அவதிப்பட்டு வந்த 'லிவர் சிரோசிஸ்' கல்லீரலை செயலிழக்கச் செய்யும். இது ஏற்பட முக்கியக் காரணங்கள் என்னென்ன, இதற்கான சிகிச்சை எப்படி இருக்கும்? என்பது பற்றி பார்க்கலாம்.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான 'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தில் தனுஷின் நண்பராக நடித்திருந்தவர் அபினய். இந்தப் படத்தில் அவருக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஜங்ஷன், சிங்காரச் சென்னை, பொன்மேகலை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தார் அபிநய்.

நடிகர் அபினய் உடல்நிலை பாதிப்பு
பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாமல் முடங்கினார். அவருடைய உடல்நிலையும் அவருக்கு ஒத்துழைக்கவில்லை. இவர் டப்பிங் கலைஞராகவும் அறியப்படுகிறார். விஜய் நடித்த 'துப்பாக்கி' திரைப்படத்தில் வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வாலுக்கு பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார்.
சமீபத்தில் அபினய்க்கு கல்லீரல் அழற்சி பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வந்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி இருந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நடிகர் அபினய் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கல்லீரல் சிரோசிஸ்
நடிகர் அபினய் அவதிப்பட்டு வந்த லிவர் சிரோசிஸ் பாதிப்பு ஏற்பட முக்கியமான காரணங்கள் என்னென்ன, இதன் சிகிச்சை எப்படி இருக்கும்? இந்த பாதிப்பைத் தடுக்க முடியுமா என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
மது காரணமல்லாத கொழுப்பு கல்லீரல் நோய், நாள்பட்ட ஹெபடைட்டிஸ் ஏ, பி, சி பாதிப்பு, உடலில் இரும்புச்சத்து அதிகம் சேர்தல், கல்லீரலில் தாமிரம் படிதல், பித்த நாளங்களில் வடு/ அடைப்பு/ வீக்கம் இருத்தல், ஆட்டோ இம்யூன் கல்லீரல் நோய், மது அருந்துதல் போன்றவையே இந்த நோய்க்கான முக்கிய காரணிகளாக உள்ளன.
லிவர் சிரோசிஸ்-க்கான சிகிச்சை என்ன?
மேற்குறிப்பிட்டவற்றில் இதன் காரணமாக ஒருவருக்கு லிவர் சிரோஸிஸ் ஏற்பட்டது என்பதை அறிவதன் மூலம், அதற்கான பிரத்யேக சிகிச்சை அளிக்கப்பட்டு கல்லீரலுக்கு ஏற்படும் சேதத்தை நம்மால் குறைக்க முடியும்.
சீரான உணவு உட்கொண்டு, சரியான எடையில் இருப்பது, மது உள்ளிட்ட போதைப்பொருட்களை தவிர்ப்பது; ஹெபடைட்டிஸ் தடுப்பூசி மூலம் அந்த நோய் தாக்கத்தின் அபாயத்தை குறைத்துக் கொள்வது போன்றவற்றின் மூலம் லிவர் சிரோசிஸ் பாதிப்பை அதிகமாகாமல் தடுக்கலாம். இந்த நோயின் அறிகுறிகளாக பசியின்மை, அதீத சோர்வு, மஞ்சள் காமாலை, கால்கள், கணுக்காலில் வீக்கம், எடை குறைவு, நினைவிழப்பு போன்றவை இருக்கும்.
கல்லீரல் மாற்று
சிரோசிஸ் என்பதே தாமதமான மருத்துவ நிலை என்பதால், ஒருமுறை இது கல்லீரலில் வளர்ந்துவிட்டால் முழுமையாக குணமாகாது. இருப்பினும் அறிகுறிகளை உணர்ந்து முதற்கட்டத்திலேயே சிகிச்சை பெறுவதன் மூலம் தீவிர பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.
கல்லீரல் சிரோசிஸ்க்கு நிரந்தர சிகிச்சை என்றால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அப்படி ஒரு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்காகத்தான் நடிகர் அபிநயும் காத்திருந்தார். ஆனால், அதற்குள் அவர் இன்று காலமாகியுள்ளார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications