பூட்டும் உடையவில்லை, கண்ணாடியும் உடையவில்லை! மதுரை தனிஷ்க் திருட்டின் பகீர் பின்னணி! நடந்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை காளவாசல் பகுதியில் உள்ள பிரபல தனிஷ்க் நகைக்கடையில் நடந்துள்ள மெகா கொள்ளைச் சம்பவம், வழக்கமான திருட்டுகளைப் போல இல்லாமல் ஒரு சினிமா திரில்லர் பாணியில் மிகவும் துல்லியமாக அரங்கேறியிருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. ஷோரூமில் இருந்த சுமார் 35 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள நிலையில், கடைக்குள் கொள்ளையர்கள் புகுந்த விதம் போலீசாரையே திகைக்க வைத்துள்ளது.

பொதுவாக ஒரு பெரிய நகைக்கடையில் கொள்ளை நடந்தால், கடையின் முன்பக்க ஷட்டர் உடைக்கப்பட்டிருக்கும், கண்ணாடிகள் நொறுக்கப்பட்டிருக்கும் அல்லது பாதுகாப்புப் பெட்டகங்கள் கியாஸ் வெல்டிங் மூலம் வெட்டப்பட்டிருக்கும். ஆனால், மதுரை தனிஷ்க் ஷோரூமில் இதில் எதுவுமே நடக்கவில்லை என்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியம்.

madurai crime

உடைக்கப்படாத பூட்டுகள்: அதிர்ச்சியில் போலீசார்

காலையில் கடையைத் திறக்க வந்த ஊழியர்கள், கடையின் பிரதான கதவு மற்றும் பூட்டுகள் அனைத்தும் வழக்கம்போல பத்திரமாக இருப்பதைப் பார்த்துள்ளனர். ஆனால், உள்ளே சென்று பார்த்தபோதுதான் நகைகள் வைக்கப்பட்டிருந்த பகுதிகள் காலியாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மதுரை மாநகர காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் கடை முழுவதும் அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்தனர்.

அப்போது, கடையின் எந்தவொரு பூட்டும் உடைக்கப்படவில்லை என்பதும், ஷோரூமின் கண்ணாடிகளில் ஒரு கீறல் கூட விழவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. எந்தவித சத்தமும் இல்லாமல், பாதுகாப்பு அலாரங்களைக் கூட எழுப்பாமல் கொள்ளையர்கள் இவ்வளவு பெரிய வேலையைச் செய்திருப்பது எப்படி என்ற கேள்வி எழுந்தது.

அதிகாலை 3.30 மணி: மொட்டை மாடி வழியாக இறங்கிய மர்ம நபர்கள்

கடையின் சுற்றுப்புறம் மற்றும் மாடிப் பகுதிகளை போலீசார் ஆய்வு செய்தபோதுதான் அந்தத் துல்லியமான திட்டம் வெளிச்சத்திற்கு வந்தது.

கொள்ளையர்கள் கடையின் முன்பக்கம் அல்லது பின்பக்கக் கதவுகளைத் தொடாமல், கட்டிடத்தின் மொட்டை மாடி வழியாக உள்ளே இறங்கியுள்ளனர். அருகில் உள்ள கட்டிடங்கள் வழியாகவோ அல்லது பின்பக்கமாகவோ மொட்டை மாடிக்கு ஏறிய அவர்கள், அங்கிருந்த வழித்தடம் வழியாக மிக எளிதாக ஷோரூமிற்குள் நுழைந்துள்ளனர்.

நள்ளிரவு தாண்டி, ஊரே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் அதிகாலை சுமார் 3.30 மணியளவில் இந்தக் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியிருக்கலாம் என போலீசார் கணிக்கின்றனர். அந்த நேரத்தில் அப்பகுதியில் போலீஸ் ரோந்துப் பணியும் இல்லை என்பதைக் கொள்ளையர்கள் முன்கூட்டியே நோட்டமிட்டுத் தெரிந்து வைத்துள்ளனர்.

எந்தப் பூட்டையும் உடைக்காமல் உள்ளே நுழைந்து, நகைகள் இருக்கும் இடத்தைத் துல்லியமாகத் தேர்ந்தெடுத்து, பாதுகாப்பு அமைப்புகளைச் செயலிழக்கச் செய்து நகைகளை அள்ளிச் சென்றிருப்பதால், கடையின் வரைபடம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் நன்கு தெரிந்த நபர்கள், கட்டுமானத்தை மேற்கொண்ட நபர்கள், அங்கே வேலை செய்யும் நபர்கள் இந்தச் சதியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தீவிரமடையும் விசாரணை

சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை அப்பகுதியில் இயங்கிய செல்போன் சிக்னல்களை வைத்து காவல்துறையினர் துப்பு துலக்கி வருகின்றனர்.

ஏற்கனவே தீபாவளி தொடர் கொலைகள் மற்றும் சட்டம் - ஒழுங்கு விவகாரத்தில் தமிழக அரசு கடும் நெருக்கடியைச் சந்தித்து வரும் சூழலில், காவல்துறையின் கண்காணிப்பையும் மீறி அதிகாலை 3.30 மணிக்கு நடந்துள்ள இந்தத் துணிகரக் கொள்ளை, குற்றவாளிகளை உடனடியாகப் பிடிக்க வேண்டிய கட்டாயத்தை காவல்துறைக்கு ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+