கலைஞர்..எம்ஜிஆர்.. உதயநிதி! நீங்க எங்க போவீங்கனு தெரியும்! சந்தோசம்தான்! மேடையில் ஆனந்தமான ஆனந்தராஜ்
சென்னை : கலைஞர், எம்ஜிஆர், ஜெயலிதாவுக்கு பிறகு திரைத்துறையிலிருந்து தமிழகத்தை ஆளப்போவது உதயநிதி தான் எனவும், ஒரு கலைஞனின் கையில் தமிழகம் இருப்பது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி என கோப்ரா ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ஆனந்தராஜ் கூறியுள்ளது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
2018ஆம் ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குனராக அறிமுகமான அஜய் ஞானமுத்து தற்போது சீயான் விக்ரம் நடிப்பில் கோப்ரா திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படம் நடிகர் விக்ரமின் 58 வது திரைப்படமாகும். இந்த படத்தில் நடிகர் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மிருனாளினி ரவி, மியா ஜார்ஜ் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

கோப்ரா
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் கோப்ரா பட புரமோசனுக்காக படக்குழு தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது.

இசை வெளீயிட்டு விழா
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் ஸ்ரீநிதி செட்டி இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் நடிகரும் தயாரிப்பாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடிகர் ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பல குழுவினரை வாழ்த்தியும் படத்தில் நடித்த போது கிடைத்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

நடிகர் ஆனந்தராஜ்
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஆனந்தராஜ், உதயநிதியை பார்த்தவுடன் எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது. அவரைப் பார்த்தவுடன் அனைவரும் ஒரு வேண்டுகோள் வைப்பார்கள். நானும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு இண்டர்வியூ ஒன்றில் பேசிய உதயநிதி இதுதான் எனது கடைசி படம் எனக் கூறினார். அப்படி இருக்கக் கூடாது கேட்டவுடன் எங்களுக்கெல்லாம் பகீர் என ஆகிவிட்டது. தயவுசெய்து அந்த வார்த்தைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும். அவர் இன்னும் சில படங்களில் நடிக்க வேண்டும் நானும் அவருடன் இணைந்து நடிக்க வேண்டும்.

தமிழகத்தை ஆளப்போவது..
அடுத்து நீங்கள் எங்கு செல்வீர்கள் என்பது தெரியும் அது எங்களுக்கு பெருமை தான். நாங்கள் வெளி மாநிலங்களுக்கு செல்லும்போதெல்லாம் அங்கு இருப்பவர்கள் கேட்பார்ர்கள் திரைத்துறையை சேர்ந்தவர்கள் தான் தமிழ்நாட்டை ஆள முடியுமா என்று அப்போதெல்லாம் எனக்கு கர்வம் வந்துவிடும். அண்ணாவுக்கு பிறகு, எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதாவுக்கு பிறகு திரைத்துறையை கலைஞன் தான் ஆளவேண்டும் என்றால் அந்த பெருமை உதயநிதி உங்களுக்கு வந்து சேரும். ஒரு கலைஞர் தமிழகத்தை ஆளுகிற என்கிற பெருமை ஒரு கலைஞனாக எனக்கு கண்டிப்பாக இருக்கும்" என பேசினார். தற்போது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications