பிரபல நடிகர் அருள்மணியின் கடைசி நொடி.. அப்பதான் வந்தாரு, உடனே நெஞ்சை பிடித்து.. இதுதான் அந்த போட்டோ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நடிகரும், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளருமான அருள்மணி மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்... இது சினிமா, மற்றும் அரசியல் துறையினரிடையே கடும் அதிர்ச்சியை தந்து வருகிறது.

அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம்வந்தவர் அருள்மணி.. நிறைய படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.. குறிப்பாக, அழகி, தென்றல், தாண்டவக்கோனே உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்ததன்மூலம், தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றிருப்பவர். மேலும், இயக்குநர் பயிற்சி உள்ளிட்டவற்றில் திறன்பட செயல்பட்டு வந்தார்.

Actor Arul Mani last Photo with AIADMK Edappadi Palanisamy and what happened to arul mani

அரசியல் ஆர்வம்: அதேசமயம், படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போது, அரசியலிலும் அருள்மணிக்கு ஆர்வம் ஏற்பட்டது.. இதையடுத்து, அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்ட அருள்மணி, மிக தீவிரமாகவே கழகப்பணியாற்றினார்.

அதிமுகவின் பிரதான மேடைகளில் எல்லாம் அருள்மணியை எளிதாக பார்க்க முடியும். எங்கே கூட்டம் நடந்தாலும், அங்கே களப்பணியில் இறங்கிவிடுவார். தற்போது தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால், அதிமுகவுக்காக பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார் அருள்மணி. கடந்த 10 நாட்களாகவே பிரச்சாரத்தில்தான் ஈடுபட்டு வருகிறார்..

பிரச்சாரம்: பிரச்சாரம் செய்வதற்காகவே, வெளியூர் சென்றிருந்த அருள்மணி, நேற்று சென்னை திரும்பியிருந்தார்.. தன்னுடைய வீட்டில் ஓய்விலும் இருந்தார்.. நேற்று மாலை 4.30 மணியளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.. ஆனால், டாக்டர்கள் எவ்வளவோ போராடியும், சிகிச்சை பலனின்றி அருள்மணி இரவு 9.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்..

அருள்மணியின் இந்த மறைவு பொதுமக்கள் உட்பட அரசியல், சினிமா தரப்பினரை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தி வருகிறது. அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி போட்டோ: இதனிடையே, அருள்மணியின் கடைசி போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. 4 நாளைக்கு முன்புதான், திருச்சியில் நடைபெற்ற எடப்பாடியார் பொதுக்கூட்டத்தில் போட்டோ எடுத்துக் கொண்டுள்ளார் அருள்மணி..

அந்த போட்டோவில் நடிகர்கள் சிங்கமுத்து, அருள்மணி, இயக்குனர்கள் மனோஜ் குமார், நாஞ்சில் பி.சி.அன்பழகன் ஆகியோர் உள்ளனர். அதிமுகவினர் இந்த போட்டோவை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு, இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அருள்மணியுடனான தங்கள் நினைவுகளையும் கண்ணீர் மல்க பதிவிட்டு வருகிறார்கள்.

மரணம்: சமீபகாலமாகவே மாரடைப்பு மரணங்கள் பெருகி கொண்டிருக்கின்றன.. அதிலும் இளம் வயது மரணங்கள் அதிகரித்து வருகிறது.. அதிலும், திரைத்துறையில் இந்த மரணங்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போகிறது.

இதற்கு எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டாலும், இழப்புகளின் எண்ணிக்கை மட்டும் பெருகிகொண்டே போகிறது.. இந்த மாரடைப்புகள் பாரபட்சம் காட்டுவதில்லை.. வயது வித்தியாசத்தையும் பார்ப்பதில்லை.. ஒருவரை இழந்து தவிப்பதற்குள், இன்னொரு மரணம் நம்மை உலுக்கி சென்று கொண்டிருக்கிறது..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+