ஜெமினி கணேசன் திகைச்சுட்டாரு.. "தெலுங்கு" நடிகை சாவித்திரி விடலயே.. திக்கி திணறிய திருநெல்வேலி.. அடடே
சென்னை: தெலுங்கை தாய்மொழியாக கொண்ட, நடிகை சாவித்திரி, தமிழ்மொழி மீது காட்டிய ஈடுபாடும், பற்றும், உதவிகளும், நெகிழ வைத்துவிடுகிறது. அதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம்.
சாவித்திரியின் தமிழ் உச்சரிப்பு தனி அழகு.. 1953-ல் சிவாஜியின் நடிப்பில் 'பெம்புடு கொடுகு' என்ற தெலுங்குப்படம் வெளியானபோது, அவர் பேசிய தெலுங்கை, கிண்டலடித்திருந்தது ஒரு பத்திரிகை. ஆனால், சிவாஜியே, ஒருமுறை சாவித்திரி குறித்த தன்னுடைய பயத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சிவாஜி கணேசன்: "தங்கை சாவித்திரியுடன் நடிக்கும்போது, நான் கொஞ்சம் எச்சரிக்கையாகவே நடிப்பேன்.. நாங்க 2 பேரும் நடிக்கும் காட்சிகளில் நிச்சயமாக நடிப்பு போட்டி இருக்கும்" என்று சொன்னார்.. அதாவது, சிவாஜி கணேசன் அளவுக்கு, தமிழ் உச்சரிப்புக்கு முக்கியத்துவம் தந்து நடித்தவர் சாவித்திரி.
சில நாட்களுக்கு முன்புகூட, சாவித்திரியின் மகள் விஜயசாமுண்டீஸ்வரி ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். சின்ன வயசில எனக்கு தமிழ் அவ்வளவா வராது.. ஆனால் என் அம்மாவுக்கு தமிழ் உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும்.. தப்பாக உச்சரித்தால் கோபம் வரும்.. எனக்கு தமிழ் மொழி பயிற்சியை தருவதற்காக, ஒரு ஆசிரியரை நியமித்தார் என் அம்மா.. குறிப்பாக, பற்று என்ற வார்த்தை எனக்கு உச்சரிக்க வராது.. இந்த பற்று என்ற வார்த்தையை பலமுறை சொல்ல சொல்லி என் அம்மா எனக்கு ட்ரெயினிங் தந்திருக்காங்க என்று நெகிழ்ந்து கூறியிருந்தார்.
தெலுங்கு பெண்: தெலுங்கு பெண்ணாண சாவித்திரிக்கு, பாரதியார் பாட்டு என்றால் உயிராம்.. பாரதியார் மீது, பற்று கொண்ட சாவித்திரி, பாரதி பிறந்த மண்ணுக்கு ஏதாவது செய்ய நினைத்தாராம்.. அதனால், கணவர் ஜெமினியுடன் இணைந்து, 1963ல் எட்டையபுரத்தில் பாரதிவிழாவை மிக பிரம்மாண்டமான முறையில் நடத்தி காட்டியிருக்கிறார்.. சாவித்திரியின் இந்த செயல், திருநெல்வேலி முழுக்க அன்று பரவியது..
இந்த விழாவில், மூத்த தலைவர்கள் பக்தவச்சலம், காமராஜர், மற்றும் ஜெமினிகணேசன், சாவித்திரி என 4 பேருமே ஒரே காரில் பவனி வந்து அன்றைய தினம் மக்களை சந்தோஷப்படுத்தியிருக்கிறார்கள்..
எட்டையபுரம்: எட்டையபுரத்தில் மக்களுக்குப் பயன்படும் விதத்தில், குடிநீர் டாங்க் ஒன்றைக் கட்டி தந்து, குடிநீர் சப்ளைக்கும் ஏற்பாடு செய்து தந்துள்ளனர்.. அப்போது ஜெனிமிகணேசன் சாவித்திரியிடம், "நீ ஆசைப்பட்டது நிறைவேறிடுச்சா சாவித்திரி?" என்று கேட்டார்.
அதுக்கு சாவித்திரி, "இல்லை, இதுமட்டுமல்ல என் ஆசை. இதுபோன்று விழா வருடந்தோறும் நடக்கணும்... அதற்காக நான் என்னால் முடிந்தளவிற்கு பணத்தை டெபாசிட் செய்கிறேன்" என்று சொன்னதுடன், பணத்தை டெபாசிட்டும் செய்து தந்துள்ளார் சாவித்திரி. இதையெல்லாம் அருகிலிருந்து பார்த்த தலைவர்கள் பக்தவச்சலமும் பெருந்தலைவர் காமராஜரும் சாவித்திரியை மிகவும் பாராட்டினார்களாம்.
வள்ளல்குணம்: கோடி கோடியாய் சம்பாதித்து அத்தனையும் தான தருமங்கள் செய்துவிட்டு சாகும்போது கையில் காலணா கூட இல்லாமல் இறந்துபோனார், இடதுகை பழக்கம் உள்ள வள்ளல் குணம் சாவித்திரி.. மனிதர்கள் அழிந்தாலும், அவர்களின் மகத்துவம் அழிவது இல்லைதானே!!"
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications