Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சில்லு சில்லா தாக்கிட்டாரே நெப்போலியன்.. மனைவியை கிட்ட சேர்க்காமல், தாய், தகப்பனையும் ஒதுக்கிய விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களுக்கு அடிப்படையான, அத்தியாவசியமான தேவையானதை செய்து கொடுப்பதற்காக அரசியலுக்கு வருவதாக சொல்லும் நடிகர், சில அடிப்படை விஷயத்தையும் மாற்றி கொள்ள வேண்டும். அதிலும் மாநிலத்தை ஆள வேண்டும் என்று ஆசைப்படுவதால், அந்த சில விஷயங்களை மாற்றி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எப்போதுமே தலைவராக முடியாது என்று மூத்த அரசியல்வாதியும், பிரபல நடிகருமான நெப்போலியன் கருத்து தெரிவித்துள்ளார்.

போக்கிரி பட ஷூட்டிங்கின்போது, நெப்போலியனின் நண்பர்கள் சிலர், விஜய்யை பார்க்க ஆசைப்பட்டுள்ளார்கள்.. இதை நெப்போலியனிடம் சொல்லவும், "விஜய் நம்ம தம்பிதான், கண்டிப்பாக பார்க்கலாம்" என்று சொல்லி நண்பர்களை விஜய் தங்கியிருந்த கேரவனுக்கு அழைத்து சென்றுள்ளார் நெப்போலியன்.

Napoleon TVK Leader Vijay

ஆனால், கேரவன் வெளியில் நின்றிருந்த செக்யூரிட்டி நெப்போலியனை உள்ளே அனுமதிக்கவில்லையாம். இதனால் அங்கு சிறு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கேரவன் விஜய் சம்பவம்

உடனே கேரவன் கதவை திறந்து வெளியே வந்த விஜய் நெப்போலியனிடம், "உங்களுக்கு அறிவு இருக்கா? இது என்ன மாதிரியான மேனரிசம்? நான் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கிற நேரத்துல, நீங்க பார்க்கணும்னு நினைச்சா நான் பார்க்கணுமா? என்னை ஏன் நீங்க பார்க்கணும்? என்கிட்ட நீங்க அப்பாயின்மென்ட் வாங்கியிருக்கீங்களா? மேனர்ஸ் தெரியாதா?" என்று சொல்லிவிட்டு, படாரென கதவை மூடிவிட்டு உள்ளே சென்றுவிட்டாராம்..

இதை பற்றி சில வருடங்களுக்கு முன்பு நெப்போலியன் தன்னுடைய பேட்டிகளில் வருத்தப்பட்டு கூறியிருந்தார். அத்துடன் விஜய் படங்களை பார்ப்பதில்லை, அவரை பற்றி பேசுவதுமில்லை என்று தெரிவித்திருந்தார்.

நடிகர் ராதாரவி வேதனை

அதேபோல சமீபத்தில் நடிகர் ராதாரவி, சித்ரா லட்சுமணனுக்கு அளித்த பேட்டியிலும் விஜய் பற்றி வருத்தமாக கூறியிருந்தார்..

"சர்கார் படத்தில் நானும் விஜய்யும் சேர்ந்து நடித்தோம். என் பேரன் விஜய்யின் தீவிரமான ரசிகன். எப்படியாவது அவரை நேரில் பார்க்க வேண்டும் என்று சொன்னதால், ஷூட்டிங்கின்போது இதுகுறித்து அவரது பி.ஏவிடம் சொன்னேன். ஆனால் விஜய் மேக்கப்பில் இருக்கும்போது ஃபோட்டோ எடுக்கமாட்டார் என்று சொல்லிவிட்டார்.

விஜய்க்கு நன்றி

பிறகு ஒருநாள் குடும்பத்தோடு சென்று விஜய் வீட்டில் ஃபோட்டோக்கள் எடுத்துக்கொண்டோம். அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரத்த அழுத்த பாதிப்பால் மயங்கி விழுந்துவிட்டேன். விஜய் உள்ளிட்டோர் என்னை தூக்கிவிட்டார்கள். சில நாட்கள் கழித்து அதற்கு நேரில் பார்த்து நன்றி தெரிவிக்கலாம் என நினைத்து அவரது பி.ஏ.விடம் கூறினேன்.

அதற்கு அவர், 'சரி சார். விஜய் சார் வர சொல்லிவிட்டார். ஆனால் அன்று போல் கூட்டத்தை கூட்டி வர வேண்டாம் என்றார்.

நான் உடனே, 'இல்லை நான் வரவில்லை' என சொல்லி வைத்துவிட்டேன். என் குடும்பத்தைத்தான் அவர் கூட்டம் என்று சொல்லிவிட்டார்.. அவருக்கு வேண்டுமானால் அது கூட்டமாக இருக்கலாம். எனக்கு அது என்னுடைய குடும்பம்" என்றார்.

நெப்போலியன் அட்வைஸ்

ராதாரவியின் இந்த பேட்டி, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. நெப்போலியனை போலவே ராதாரவியிடமும் விஜய் நடந்து கொண்டுள்ளாரே? என்ற முணுமுணுப்புகளும் எழுந்தன.

இந்நிலையில், ஒரு ஊடகத்துக்கு நடிகர் நெப்போலியன் பேட்டி தந்துள்ளார்.. அதில் விஜய் பற்றி பல்வேறு விஷயங்களை கூறியிருக்கிறார்.. அதில், "தனக்கான கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டால் அதை அக்கட்சி தலைவர்தான் கட்டுப்படுத்தணும்.. கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவே தொண்டர் அணியை உருவாக்கி வைத்திருக்கணும். எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தையே நம்பிட்டு இருக்கக்கூடாது.

முதலமைச்சர் பதவி என்பது உயர்ந்த பதவி.. அதை கிண்டலடிப்பது, ஏளனமாக பேசுவது கூடாது.. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்னால் மட்டும் போதுமா?

விஜய்யின் சுபாவமே சினிமா துறையில் எல்லாருக்குமே தெரியும்,. யாரிடமும் நெருங்கி பேச மாட்டார்.. எனக்கும் அவருக்குமே 18 வருஷத்துக்கு முன்னாடி நிறைய சங்கடங்கள் ஏற்பட்டிருக்கு.. அதன்பிறகு அவர் படங்களை பார்ப்பதில்லை.. அவரை பற்றி பேசுவதில்லை.

தலைவனுக்குரிய பண்பு

ஆனால் ஒரு நடிகன், மக்களுக்கு அடிப்படையான, அத்தியாவசியமான தேவையானதை செய்து கொடுப்பதற்காக அரசியலுக்கு வருவதாக சொல்வதால், சில அடிப்படை விஷயத்தையும் மாற்றி கொள்ள வேண்டும். அதிலும் மாநிலத்தை ஆள வேண்டும் என்று ஆசைப்படுவதால் சில அடிப்படை விஷயங்களை மாற்றி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எப்போதுமே தலைவராக முடியாது.

முதலில் கட்சியின் கொள்கையை சொல்லணும், தமிழ்நாடு முழுக்க எங்கே சென்றாலும் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு வலியுறுத்தணும்..

தனி விமானம் ஏன்

இவர் என்ன சாதித்துவிட்டார் என்று இவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு? தனி விமானத்தில் இப்போது பயணிப்பது ஏன்? இத்தனை வருடங்களாக மக்களோடு மக்களாகத்தானே பயணம் செய்து கொண்டிருந்தார்? செல்வி ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி முதலமைச்சர்களாக இருந்தபோதே மக்களோடு மக்களாக பயணித்தவர்கள்தான்.

விஜய் சுபாவமே இப்படித்தான்,. மனைவியையும் கிட்ட சேர்த்துக்கல, தன்னுடைய தாய், தகப்பனையும் கிட்ட சேர்த்துக்கல.. மகனையும் சேர்த்துக்கல. இதையெல்லாம் அமெரிக்காவில் என்கிட்ட எல்லாரும் கேக்குறாங்க..

மனைவி, தாய், தகப்பன்

சொந்த குடும்பத்தையே கவனிக்காதவர், நம்மளை எப்படி கவனிப்பார் என்று மக்களுக்கு கேள்வி வரத்தானே செய்யும்? படிப்படியாக வளர்த்து கொண்டு வந்த அப்பாவையே வீட்டுக்குள்ள சேர்க்கறது இல்லைன்னு சொல்றாங்களே, இது எந்த விதத்தில் நியாயம்? உங்களுடைய கேரக்டர் நல்லா இருந்தாலே, உங்களை பின் தொடரும் ரசிகர்களும் அதேமாதிரி இருப்பார்கள்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+