சிவாஜி பிறந்தநாள் விழா.. பின்னால் ஏறியவரை கை முட்டியால் ஓங்கி குத்திய சிவாஜியின் மகன் ராம்குமார்
சென்னை: மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசனின் சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் நடிகர் பிரபு மேடையில் பேசிக்கொண்டிருந்த போது, பின்னால் இருந்து ஒருவர் ஏற முயன்றார். இதனால் ஆவேசமான சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம் குமார், தனது கைமுட்டியால் அவரை ஓங்கி குத்தி தள்ளிவிட்டு கோபத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
திரை உலகில் இன்று வரை இவரை போல் நடிக்க முடியுமா என்று இளம் நடிகர்கள் முதல் பழம்பெரும் நடிகர்கள் வரை பலரும் வியந்த பார்க்கும் உச்ச நட்சத்திரம் என்றால், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். ஏனெனில் அவரது நடிப்பு அந்த அளவிற்கு அசாத்தியமானதாக இருக்கும். கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் என நடிகர்கள் வந்தாலும், சிவாஜி கணேசனின் நடிப்பு தான் அவர்களுக்கு நிச்சயம் வழிகாட்டியாக இருக்கும். அந்த காலத்தில் எம்ஜிஆருக்கு நிகரான ரசிகர்களை கொண்டிருந்தவர் சிவாஜி கணேசன்.

பல ஹிட் படங்களை கொடுத்த மிகப்பெரிய நடிகர். பல நடிகர்கள், நடிகைகள், ஒரு படத்திலாவது இணைந்து நடித்திருக்க வேண்டும் ஏங்க வைத்தவர் சிவாஜி கணேசன். பல உலக நாடுகளில் விருது பெற்றவர். இந்திய சினிமாவில் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர் சிவாஜி கணேசன். இவர் 1928ம் தேதி அக்டோபர் 1ம் தேதி பிறந்தார். எனவே அவரது பிறந்த நாள் அக்டோபர் 1ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் அக்டோபர் 1ம் தேதியான இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் சிவாஜி கணேசனின் நினைவுகளை கூறி அவரது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்கள்.'
அந்த வகையில் நடிகர் திலகமான சிவாஜி கணேசனின் 97வது பிறந்த நாளை ஒட்டி அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று மரியாதை செலுத்தினார். சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர், நடிகைகள் நேரில் வந்து சிவாஜி கணேசனின் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த விழாவில் சிவாஜி கணேசனின் ஏராளமான ரசிகர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில் நடிகர் பிரபு மேடையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது சிலர் மேடையில் ஏற முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பின்னால் இருந்து ஒருவர் திடீரென மேடையில் ஏற முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம் குமார், தனது கைமுட்டியால் அவரை ஓங்கி குத்தி, தள்ளிவிட்டு கோபத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications