Srikanth Flashback: 18 ஆண்டுக்கு முன்பு! வந்தனாவுடன் குடும்பம் நடத்திவிட்டு ஏற்க மறுத்த ஸ்ரீகாந்த்!
சென்னை: வந்தனா என்ற பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொண்டு அவருடன் குடும்பம் நடத்திவிட்டு, அவரை மனைவியாக ஊரறிய ஏற்க மறுத்த நிலையில் அவர் பெரும் சட்ட போராட்டம் நடத்திய பிறகு அந்த பெண்ணையே திருமணம் செய்து கொண்ட நடிகர் ஸ்ரீகாந்த், தற்போது 18 ஆண்டுகளுக்கு பிறகு போதை வழக்கில் கைது செய்யப்பட்டு மீண்டும் ஒரு சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள போகிறார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு "ரோஜா கூட்டம்", "ஏப்ரல் மாதத்தில்", "மனசெல்லாம்", "பார்த்திபன் கனவு" உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். எம்சிஏ பட்டதாரியான இவர் திருப்பதியை சேர்ந்தவர். அதாவது இவர் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்.

இவரது தந்தை சித்தூரை சேர்ந்தவர், தாய் கும்பகோணத்தை சேர்ந்தவர். ஸ்ரீகாந்தின் தந்தை பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றியதால் அவர் திருப்பதியில் வசித்து வந்தார். ஸ்ரீகாந்திற்கு ஒரு அண்ணன் இருந்தார். அவர் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
ஸ்ரீகாந்த், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் "நண்பன்", படத்தில் நடித்துள்ளார். ரோஜா கூட்டம் படத்தில் ஆப்பிள் பெண்ணே நீ யாரோ என்ற பாடலுக்கு இவரது நடனத்திற்கு மயங்காதவர்களே அன்றைய காலத்து கல்லூரி பெண்கள் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு ஸ்ரீகாந்த் அழகு.
அப்படிப்பட்ட இவர் கடந்த 2007ஆம் ஆண்டு ஒரு சர்ச்சையில் சிக்கினார். வந்தனா என்ற எம்பிஏ பட்டதாரி பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொண்டு அவருடன் 3 மாதங்கள் குடும்பம் நடத்திவிட்டு பிறகு தன்னை ஸ்ரீகாந்த் மனைவியாக ஏற்க மறுப்பதாக வந்தனா போலீஸில் புகார் அளித்தார். மேலும் பல்வேறு சட்ட போராட்டங்களை எதிர்கொண்டதை அடுத்து வந்தனாவை, ஸ்ரீகாந்த் ஏற்றுக் கொண்டார். அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்த பிளாஷ்பேக்கில் நடந்தது என்ன என்பதை பார்க்கலாம். வந்தனா வடபழனி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: எனது பிறந்தநாளை அடையாறு ஸ்டார் ஹோட்டலில், எனது தோழிகள் மற்றும் சில நடிகைகளுடன் கொண்டாடினேன். அப்போது அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் நடிகை ஒருவருடன் நடிகர் ஸ்ரீகாந்த் பார்ட்டிக்கு வந்தார். அவரை நடிகை தான் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அதன்பிறகு கிண்டியில் இருக்கும் ராயல் லீ மெரீடியன் ஹோட்டலில் நடந்த ஸ்ரீகாந்த் பிறந்தநாள் விழாவுக்கு எனக்கு அழைப்பு வந்தது. அதில் நான் கலந்து கொண்டேன். அப்போது எங்களுக்குள்ளான நெருக்கம் அதிகமானது. தொடர்ந்து பழகினோம். ஒரு கட்டத்தில் ஸ்ரீகாந்த், நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்றார்.
ஆனால் அதை அவரது பெற்றோர் ஏற்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து நண்பர்களாகவே இருந்து வந்தோம். எங்கள் வீட்டில் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். அப்போது ஸ்ரீகாந்த் தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்த தெலுங்கு படத்தின் தயாரிப்பாளர் கோடீஸ்வரராவின் மனைவி கீதாவுடன் ஸ்ரீகாந்துக்கு பழக்கம் ஏற்பட்டது. கீதாவிடம் தன் காதல் விவகாரத்தை சொல்லி சேர்த்து வைக்கும்படி கேட்டார் ஸ்ரீகாந்த்.
இதையடுத்து கடந்த 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், கீதாவின் குடும்ப ஜோதிடரான கேதார்ஈசுவர ராவை சந்திக்க காக்கிநாடாவுக்கு நானும், ஸ்ரீகாந்தும், கீதாவுடன் சென்றோம். அப்போது ஸ்ரீகாந்த் திடீரென அங்கு வைத்து கல்யாணம் செய்து கொள்வோம் என்றார். இதையடுத்து நான் எனது பெற்றோரை அங்கு வரச் சொன்னேன். அவர்கள் வந்ததும் ஜோதிடர் முன்னிலையில், அங்குள்ள வேணுகோபால்சாமி கோவிலில் வைத்து எனக்கு ஸ்ரீகாந்த் தாலி கட்டினார்.
எங்கள் திருமணத்தை ஹைதராபாத்தில் பதிவு செய்தோம். திருமணம் முடிந்து நான் சென்னையில் எனது வீட்டில் இருந்தாலும், ஸ்ரீகாந்த் அடிக்கடி வருவார். நேரம் காலம் பார்க்காமல் எனது அறையிலேயே எங்களது தாம்பத்திய வாழ்க்கை நடந்தது. நாங்கள் இருவரும் 3 மாதங்கள் கணவன், மனைவியாக வாழ்ந்தோம். ஷூட்டிங்கில் இருக்கும்போது பகலில் கூட பெர்மிஷன் போட்டு விட்டு, என்னை பார்க்க ஓடி வந்துள்ளார். இரவில் வந்தால் தனது அப்பா, அம்மாவுக்கு சந்தேகம் வந்துவிடும் என்றார்.
இதற்கிடையில் ஒருவழியாக அவரது பெற்றோர் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து நிச்சயம் செய்ய தேதி குறிக்கப்பட்டது. திருமணத்திற்கு அழைப்பிதழ், திருமண மண்டபம், நகைகள் என எல்லாம் தயார் நிலையில் இருக்க, திடீரென என் மேல் வழக்கு இருப்பதாக காரணத்தை சொல்லி திருமணத்தை நிறுத்தி விட்டனர்.
அவருக்காக உடலை கொடுத்த நான், உயிரை கொடுக்கவும் தயாராக இருக்கிறேன் என்று போலீசாரிடம் கூறியுள்ளார் வந்தனா. மேலும் ஸ்ரீகாந்த் வீட்டில் தங்கி வந்தனா போராட்டம் செய்த நிலையில், அங்கிருந்து ஸ்ரீகாந்த், அவரது பெற்றோர் வெளியேறி ஹோட்டலில் அறை எடுத்து தங்கிக் கொண்டனர்.
இந்த விவகாரத்தால் ஸ்ரீகாந்தின் இமேஜ் சரிந்தது. அவருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைக்காமல் போய்விட்டது. இதையடுத்து ஒருவழியாக ஊரறிய வந்தனாவை மீண்டும் ஒரு முறை திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீகாந்த்.
தற்போது 18 ஆண்டுகள் கழித்து, போதை பொருள் பயன்படுத்தியதாக உறுதி செய்யப்பட்டதை அடுத்து மீண்டும் ஒரு சட்ட போராட்டத்திற்கு ஸ்ரீகாந்த் தயாராகிவிட்டார் என்றே சொல்லப்படுகிறது.
-
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
ரூ.45 லட்சம் நூதன மோசடி.. சென்னை தம்பதி மீது வழக்கு பதிவு! -
Personality Test: படத்துல 3 ரூம் இருக்கு! எந்த அறை பிடிச்சிருக்குனு சொல்லுங்கள்! சர்பிரைஸ்! -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
தென் மாவட்ட பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே! எழும்பூரில் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது -
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications