போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது.. மருத்துவ பரிசோதனையில் உறுதியானது.. போலீசார் அதிரடி!
சென்னை: போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் ஸ்ரீகாந்திடம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், அவருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர் கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த மாதம் ஒரு தனியார் மதுபான விடுதியில் அடிதடியில் ஈடுபட்டதாக அதிமுக ஐடி விங் நிர்வாகியான மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசாத், மற்றொரு அதிமுக பிரமுகர் அஜய் வாண்டையார், பிரபல ரவுடி சுனாமி சேதுபதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அதன் பிறகு அதிமுக ஐ.டி விங் நிர்வாகியான பிரசாத் மீது அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தார் என அடுத்தடுத்து போலீசில் புகார்கள் கொடுக்கப்பட்டன. இது தொடர்பாக நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் ஆகிய காவல் நிலையங்களில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும், பிரசாத், போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. போதைப் பொருளை யாரிடம் வாங்கினார், யாருக்கெல்லாம் சப்ளை செய்தார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே மோசடியில் ஈடுபட்ட வழக்கில் கைதான அதிமுக ஐ.டி விங் நிர்வாகி பிரசாத்தை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மற்றும் கொக்கைன் சப்ளை வழக்கில் கைதான பிரதீப் குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில், நடிகர் ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருளை சப்ளை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, நடிகர் ஸ்ரீகாந்திடம் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், அவருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் கொக்கைன் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
'ரோஜாக்கூட்டம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இந்நிலையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications