சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு
சென்னை: நடிகரும், பாஜக நிர்வாகி குஷ்புவின் கணவருமான சுந்தர் சி, புதிய நீதிக்கட்சி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட உள்ளார். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஏசி சண்முகம் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு தொகுதியில் சுந்தர் சி போட்டியிட உள்ளார் என்பதை புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அஇஅதிமுக (AIADMK) சார்பில் புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதிக்கு திரு. சுந்தர் சி அவர்களை வேட்பாளராக நிறுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறேன் என ஏசி சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நடிகர் சுந்தர் சி போட்டி
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதிக்கு கீழ்கண்ட வேட்பாளரை முடிவு செய்து அறிவிக்கப்படுகிறது. மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் சுந்தர் சி அவர்கள் சன் ஆப் சிதம்பரம் பிள்ளை வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்..
30 3 2026 திங்கட்கிழமை அன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி மற்றும் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட உள்ளது. இரண்டாவது வேட்பாளராக சென்னையில் திங்கட்கிழமை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிமுகப்படுத்த உள்ளோம். இடம் நேரம் விரைவில் தங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்" என்று கூறப்பட்டுள்ளது.
பிடிஆர் பழனிவேல் வென்ற தொகுதி
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரை மத்திய தொகுதியில் 2016 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, நிதி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கும் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.
நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார். தலைநகரம், வீராப்பு, ஐந்தாம்படை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.












Click it and Unblock the Notifications