Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மடமடனு பொடியை தூவி.. கடகடனு நெய் ஊற்றி.. சடசடனு வடிவேலின் கனவு ஊத்தப்பம்.. சென்னை சவுகார்பேட்டையில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் வடிவேலுவின் ஊத்தப்பம் கனவை நிஜமாக வேறு ஒருவர் மக்களுக்கு அவர் விரும்பியபடியான ஊத்தப்பத்தை கொடுத்து கொண்டிருக்கிறார். எங்கு தெரியுமா? சவுகார்பேட்டையில்! இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த பொறப்புதான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது.. என்ற பாடலுக்கேற்ப ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு உணவு பொருட்கள் பிரபலமாகும். மதுரை இட்லி, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, மணப்பாறை முறுக்கு, கோவில்பட்டி கடலை மிட்டாய், திருப்பதி லட்டு, நெல்லை அல்வா, மதுரை முனியாண்டி விலாஸ் பிரியாணி, தென்காடி பரோட்டா, மதுரை மீன்குழம்பு, திண்டுக்கல் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, நெல்லை சொதி என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இது போல் அந்தந்த ஊர்காரர்கள் வேறு ஒரு ஊருக்கு வந்து பிழைப்புக்காக ஹோட்டல் கடையை போடும் போதும் அவர்கள் ஊரில் பிரபல உணவுகளையும் செய்து அனைவரின் மனதையும் கொள்ளை கொள்வர். இது போல் சாப்பிடுபவர்கள் பசிக்கு சாப்பிடுவது , ருசிக்கு சாப்பிடுவது என இரு வகைப்படுவர்.

ருசிக்கு சாப்பிடுபவர்கள்

ருசிக்கு சாப்பிடுபவர்கள்

பசிக்கு சாப்பிடுபவர்கள் ருசி எப்படி இருந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் ருசிக்கு சாப்பிடுபவர்கள், அதுவும் பல ஊர்களுக்கு சென்று சாப்பிட்டவர்கள் அதே ருசியை எதிர்பார்ப்பது வழக்கம். அந்த வகையில் வடிவேல் நடித்த ஒரு படத்தின் காமெடி காட்சிகள் இன்னும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

குருஷேத்ரம் படம்

குருஷேத்ரம் படம்

குருஷேத்ரம் திரைப்படத்தில் சத்யராஜ், ரோஜா, வடிவோல் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் 2006 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் வடிவேலு நொண்டிப்புலி என கேரக்டரில் நடித்திருப்பார். அவர் ஹோட்டல் டுபாக்கூர் என்ற ஹோட்டலுக்கு உணவு சாப்பிட செல்வார். அங்கு ஹோட்டலில் ஒரு ஈ காக்கா கூட இருக்காது. சப்ளையர்கள் பெஞ்ச்களில் தூங்கிக் கொண்டிருப்பார்கள். ஓனரோ உட்கார்ந்தபடியே தூங்குவார். வடிவேல் போய் ஓனரை எழுப்பியதும், அய்யய்யோ வாங்க வாங்க. சாப்பிட வந்தீங்களான்னு வரவேற்பார்.

வடிவேல் வர்ணிப்பார்

வடிவேல் வர்ணிப்பார்

அதற்கு வடிவேலு இது ஹோட்டல்தானேங்க என்பார், ஆமாம் என கூறும் ஓனர், அவரை ஒரு பெஞ்சில் உட்கார வைப்பார். சாப்பிட உட்காரும் வடிவேலுவிடம் சப்ளையர் என்ன சார் வேண்டும் என கேட்பார். அதற்கு வடிவேல், ஒரே ஒரு ஊத்தப்பம் வேண்டுங்க என்பார். உடனே சப்ளையர் சமையல் அறைக்கு செல்லும் போது ஒரு நிமிஷம் என கூறி அந்த ஊத்தப்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதை வடிவேல் மிக அழகாக வர்ணிப்பார்.

வரக்கு வரக்குனு

வரக்கு வரக்குனு

என்ன பண்றீங்க, ஒரு சொம்பு தண்ணிய எடுத்துக்கோங்க, அதை தோசைக்கல்லில் ஊற்றி, அதுக்கென வழக்கமா ஒரு வெலக்குமாறு வச்சிருப்பீங்கல்ல, அதுல அடிப்பக்கமாக திருப்பி வரக்கு வரக்கு வரக்குனு ஒரு 4 பக்கமாக இழுத்து கழுவுவிடுங்கள். ஒரு கிண்ணம் நிறைய மாவை எடுத்து பெரிய ரவுண்டுக்கும் இல்லாமல் சின்ன ரவுண்டும் இல்லாமல் பொதுவா ஒரு ரவுண்டை ஊத்தி நாலஞ்சு வெங்காயத்த பொடிப்பொடியா நறுக்கி அப்படியே மேலாக பரபரபரனு தூவி ஒரு நீளமான காரட்டை எடுத்து அதையும் பொடி பொடியாக நறுக்கி அப்படியே மேலாக பரபரபரனு தூவி ஒரு 16 கரண்டி நெய்யை எடுத்து அதில் 6 கரண்டி நெய்யை உள்சைடு அப்படியே லேசா விளாசிவிட்டு 10 கரண்டி நெய்யை தோசைக்கு வெளிசைடில் அப்படியே மேலாக விளாசிவிட்டு இட்லி பொடி இருக்கு பாத்தீங்களா, அதை அப்படியே அள்ளி மழைச்சாரல் மாதிரி அப்படியே மேலாக பரபரபரனு பேய விட்டு பொத்துனாம்ப்ல அப்படி ஒரு பிரட்டு இப்படி ஒரு பிரட்டு அப்படியே ரெட் கலர்ல முறுக்கவிட்டு அழகாக மடிச்சி கமகமகமனு ஒரு ஊத்தப்பத்தை எடுத்துட்டு வாங்க என வடிவேல் சொல்வார். அதற்கு அந்த சப்ளையர் அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்ம்ம்ம்... என ராகம் பாடுவார்.

ஒரே வார்த்தை

ஒரே வார்த்தை

அரைமணி நேரமாக கதையை கேட்டுகிட்டு சரிங்க சரிங்கன்னு சொல்லிவிட்டு ஒரே வார்த்தையில் ஊத்தப்பம்னு சொல்றானே என வடிவேல் சொல்வார். இப்படியாக அந்த காமெடி இருக்கும். ஆனால் வடிவேலுவுக்கு என்னவோ அவர் கேட்ட ஊத்தப்பம் கிடைத்திருக்காது. ஆனால் வடிவேலின் ஊத்தப்ப கனவை ஒருவர் நிறைவேற்றி வருகிறார். அவர் சவுகார்பேட்டையில் கடை வைத்திருக்கிறார்.

வைரலாகும் வீடியோ

அது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அந்த கடைக்காரர் ஊத்தப்பம் செய்வதை வீடியோ எடுத்த ஒரு யூடியூபர் பின்னணியில் வடிவேலுவின் ஊத்தப்பம் காமெடியை சேர்த்துள்ளார். வடிவேலுவின் கனவை இந்த சவுகார்பேட்டை கடைக்காரர் நிறைவேற்றிவிட்டதாக வீடியோ வைரலாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+