எல்லாப் பக்கமும் எகிறி அடித்த விஜய்.. இனி கொங்கு மண்டலம் மட்டும் தான் பாக்கி! மாற்றத்தை தருமா தவெக.!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டின் வெற்றியின் மூலம் தமிழகத்தில் தன்னை ஒரு கட்சித் தலைவராக விஜய் நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். மாநாட்டில் அவரது பேச்சு மற்றும் கொள்கை தலைவர்களின் தேர்வு மூலம் பலதரப்பட்ட மக்களை அவர் கவர்ந்திருக்கும் நிலையில், கொங்கு மண்டலம் தான் பாக்கி, அதனை விஜய் 'கவர்' செய்து விட்டால் 2026 சட்டமன்ற தேர்தலில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்..
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி-சாலையில் நேற்று முன் தினம் நடைபெற்றது. கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பெயர் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் அதற்கு பிறகாகவே கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக அரசியல் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வந்தார் நடிகர் விஜய். குறிப்பாக சினிமாவில் இருந்து விலகி முழுமையாக அரசியலில் ஈடுபட போகிறேன் என அவர் அறிவித்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.
இது ஒரு புறம் இருக்க அவர் நடிப்பில் வெளியான தி கோட் திரைப்படமும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதை அடுத்து தற்போது கடைசி படத்தில் நடித்து வரும் விஜய் சொன்னது போலவே அரசியலிலும் களம் இறங்கி விட்டார். தொடர்ந்து பல மாதங்களாக அரசியல் கட்சி தொடர்பாக ஆலோசனைகள் அறிக்கைகள் விட்டு வந்த விஜய் இறுதியாக அரசியலில் குதித்தே விட்டார். நேற்று முன் தினம் விக்கிரவாண்டி வி-சாலை பகுதியில் நடைபெற்ற மாநாடு பெரிய அளவில் விஜய்க்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆரவாரத்திற்கிடையே ராம்ப் வாக் வந்த விஜய், அவர்களது உற்சாக வரவேற்பு ஏற்றுக் கொண்டதோடு அவர்கள் வழங்கிய துண்டை தனது தோளில் போட்டுக்கொண்டு நடந்தார். தொடர்ந்து மேடையிலும் கண் கலங்கவே காட்சியளித்தார் விஜய். சினிமா படங்களில் வருவது போலவே விஜயின் வசனங்களும் அவரது ஆக்சன்களும் இருந்தது. இது சமூக வலைதளங்களில் ஒருபுறம் விமர்சனங்களை பெற்றாலும் விஜய் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் ஆரவாரம் செய்தனர்.
மாநாட்டில் திமுகவையும் பாஜகவையும் விமர்சித்ததன் மூலம் அவர்களோடு கூட்டணி இல்லை என மறைமுகமாக மெசேஜ் சொல்லி இருக்கிறார். அதே நேரத்தில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என பேசி இருப்பது, அதிமுக, விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கான கூட்டணி அழைப்பாகவே பார்க்கப்படுகிறது.
மேலும் கொள்கை தலைவர் தேர்விலும் விஜய் சாதி அரசியல் கணக்கு போட்டிருக்கிறார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். வேலு நாச்சியார், அம்பேத்கர் ,காமராஜர், அஞ்சலை அம்மாள் உள்ளிட்டோரை கொள்கை தலைவர்களாக விஜய் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் முக்குலத்தோர், தாழ்த்தப்பட்ட மக்கள், நாடார் சமுதாயம், வன்னியர் சமுதாய மக்களின் வாக்குகளை ஆதரவை விஜய் குறி வைத்து திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் விஜய் மாநாடு நடைபெற்ற போது தென் மாவட்டங்களை விட, வட மாவட்டங்களில் இருந்து வன்னியர்கள், நாடார்கள், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவர் ஜெயந்தி அன்று நடிகர் விஜய் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு தனது வீட்டிலேயே மலர் தூவி மரியாதை செலுத்தினார். அந்த பதிவுக்கு கீழே ஏராளமான தேவர் சமூக இளைஞர்கள் விஜய்க்கு நன்றி கூறியிருந்தனர்.
மேலும் விஜயின் மாநாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் அதிகம் கலந்து கொண்டனர். இதனால் இளைஞர் சமுதாய வாக்குகள் விஜய்க்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சிகளை விஜய் நடத்தி இருப்பதன் மூலம் முதல் தலைமுறை வாக்காளர்களிடையே விஜய்க்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியாக அரசியல் ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும், இளைஞர் வாக்குகளையும் விஜய் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கொங்கு மண் சார்ந்த அரசியல் செய்து, அப்பகுதி வாக்குகளை கவர்ந்து விட்டால், விஜய்க்கு வெற்றிக்கு வாய்ப்பிருக்கிறது. சரியான திட்டமிடல், சரியான வேட்பாளர்கள், களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக களமாடும் அரசியல் என தனது பாதையை விஜய் திட்டமிட்டு அமைத்தால் 2026 இல் நிச்சயம் ஒரு மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications