மாநாட்டுக்கு இடம் தந்தவர்களுக்கு விருந்தளித்த விஜய்..வாசலுக்கே வந்து வரவேற்ற ஆன்ந்த்! பனையூர் ஹாப்பி
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு பிரம்மாண்டமாகவும் அதே நேரத்தில் வெற்றிகரமாகவும் அமைந்ததில் உற்சாகத்தில் இருக்கிறார் நடிகர் விஜய். இந்த நிலையில் மாநாட்டுக்கு இடம் வழங்கியவர்கள் மற்றும் மாநாட்டுக்கு பணியாற்றியவர்களை நேரில் அழைத்து விருந்தளித்து கௌரவ படுத்தியுள்ளார் விஜய்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடந்தது அக்கட்சியினரை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். நாற்காலிகள் அமைக்கப்பட்டிருந்த திடல் மட்டுமல்லாது அதற்கு வெளியேயும் தேசிய நெடுஞ்சாலையிலும் கூடுதலாக லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டு இருந்தனர்.
தமிழகத்திலுள்ள அனைத்து ஊடகங்களும் விஜய்யின் மாநாட்டை நேரடியாக ஒளிபரப்பு செய்த நிலையில், அனைத்து தொலைக்காட்சிகளில் முன்பும் பொதுமக்கள் அமர்ந்து விஜய் மாநாடு குறித்து தான் பேசினர். அதற்குப் பிறகாகவும் கிட்டத்தட்ட ஒரு மாதமாக தமிழக அரசியலில் விஜய் குறித்த பேச்சு தான் இருக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்தாலும் ஆண்ட கட்சி ஆக இருந்தாலும் கூட்டணி கட்சிகளாக இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் விஜய் குறித்து பேசாமல் இல்லை. ஏன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட புதிதாக வந்தவர்கள் திமுகவை அழிக்க நினைக்கிறார்கள் என விஜய்யை குறிப்பிட்டு பேசினார்.
இப்படி விஜயின் மாநாடு தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றதில் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய். தொடர்ந்து மாநாடு நிறைவடைந்த உடன் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தான் மகிழ்ச்சி கடலில் இருப்பதாகவும், நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் என நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தார். முன்னதாக விஜயின் மாநாட்டுக்கு மதுரை, திருச்சி,ஈரோடு, சேலம் என தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இடம் பார்க்கப்பட்டது.
ஆனால் எங்குமே அமையவில்லை. இறுதியாக திருச்சியிலும் சேலத்திலும் மாநாட்டுக்கு இடம் பார்த்தபோதும் கூட சில இடையூறுகள் நேர்ந்தது. மேலும் தமிழகத்தின் அரசியல் கட்சி ஒன்றின் நெருக்கடி காரணமாக பலர் இடம் தர மறுத்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் இறுதியாகவே விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி-சாலை பகுதியில் மாநாட்டுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டு திடல் பார்க்கிங், உள்ளிட்ட வசதிகளுக்காக சுமார் 180 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது .இதை அடுத்து பலரிடம் நிலம் பெறப்பட்டு மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று தற்போது மாநாடும் நிறைவடைந்து இருக்கிறது.
குறிப்பாக சுமார் 100 அடி உயர கம்பத்தில் விஜய் கொடி ஏற்றிய நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு அந்த கொடி அப்படியே இருக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் மாநாட்டுக்கு இடம் வழங்கியவர்களை குடும்பத்தோடு சென்னை பனையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்கு அழைத்து விருந்தளித்துள்ளார் நடிகர் விஜய். மேலும் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
நிலம் வழங்கியவர்கள் மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினர் சிறுவர் சிறுமிகள் என அனைவரையும் அழைத்து வந்து விருந்தளித்ததோடு அவர்களுடன் புகைப்படம் எடுத்து நினைவு பரிசு வழங்கியுள்ளார் விஜய். மேலும் மாநாட்டுக்கு பந்தல் அமைத்த விஸ்வநாதனையும் அழைத்து தங்க மோதிரம் பரிசளித்துள்ளார் விஜய்.
தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மாநாட்டுக்கு இடம்பெறும் போதே நிச்சயம் விஜய் உங்களை நேரில் அழைத்து கௌரவிப்பார் என உறுதி அளிக்கப்பட்டதாகவும், சொன்னது போலவே தங்களை நேரில் அழைத்து விஜய் நன்றி தெரிவித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் மாநாட்டுக்கு நிலம் தந்தவர்கள் கூறியுள்ளனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications