மெரினாவில் 5 பேர் பலி! மருந்துக்குக் கூட தமிழக அரசை கண்டிக்காத விஜய்! நெட்டிசன்கள் விமர்சனம்
சென்னை: சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் போக்குவரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் மீது தமிழக அரசு இனி வரும் காலங்களில் போதிய கவனம் செலுத்த வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
இந்திய விமான படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் முடிவடைந்து 93ஆவது ஆண்டு தொடங்கியுள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த விழா காலை 11 மணி முதல் மதியம் 1 வரை நடந்தது.

இந்த நிகழ்வுக்கு வருவோர் போதிய அளவில் தண்ணீர், குடை, தொப்பி, உணவு, ஸ்னாக்ஸ் உள்ளிட்டவைகளை கொண்டு வருமாறு தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்த நிகழ்வை காண 10 லட்சம் பேர் வந்ததாக கூறப்படுகிறது. மெரினாவில் மட்டும் 4 லட்சம் பேர் திரண்டிருந்தனர்.
நேற்றைய தினம் அதிக வெயில் இருந்ததால் நீர் சத்து குறைபாடு ஏற்பட்டு நிறைய பேர் மயங்கி விழுந்தனர். அவர்களில் சிலருக்கு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அளித்த சிகிச்சையிலேயே சரியானது. இன்னும் சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அது போல் மேலும் 5 பேர் பலியாகிவிட்டனர்.
அவர்களில் ஜான், கார்த்திகேயன், சீனிவாசன், தினேஷ் குமார் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்த நிலையில் அரசியல் கட்சியினர் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் ஒரு வித்தியாசமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.

இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் விஜய் தெரிவித்துள்ளார்.
மற்ற அரசியல் கட்சிகள் தமிழக அரசின் பாதுகாப்பு குளறுபடிகளை கண்டித்த நிலையில் விஜய்யோ, பாதுகாப்பு சரியில்லைனு மக்கள் பேட்டியை பார்த்தேன் என்றுதான் சொல்லியுள்ளாரே தவிர, அவராகவே எந்த வித கருத்தையும் தெரிவிக்காமல் வெற்று இரங்கல் அறிக்கையை அனுப்பியுள்ளார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications