Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆகாத வேலை பார்த்த ஆதவ் அர்ஜுனா.. லெஃப்ட் ரைட் வாங்கிய விஜய்? எடப்பாடிக்கு போனைப் போட்டு வருத்தம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு செயலாளர் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து நிலையில் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார் ஆதவ் அர்ஜுனா. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடம் தொலைபேசி மூலம் விஜய் நேரடியாகவே பேசி வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் எனும் புதிய கட்சியை ஆரம்பித்த விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் கருத்தில் கொண்டு பணியாற்றிய வருகிறார். தற்போதைய சூழ்நிலை அந்த கட்சி தனித்துப் போட்டியிடும் நிலை உருவாகி இருக்கும் நிலையில், தற்போது இருந்தே வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, மண்டல வாரியாக பூத் கமிட்டி ஏஜென்ட் ஆலோசனைக் கூட்டம், தொகுதி வாரியாக மக்களுடன் சந்திப்பு என அடுத்தடுத்து தீவிர அரசியலில் ஈடுபட விஜய் முடிவு செய்திருக்கிறார். இது ஒரு புறம் இருக்க கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளும் நடைபெற்று வருகிறது.

Actor Vijay edappadi palaniswami Adhav Arjuna

அதாவது வேறு கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகளை தமிழக வெற்றி கழகத்திற்கு அழைத்து வர ஏற்பாடுகள் நடக்கிறது. முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜுனா, பேச்சாளர் ராஜ் மோகன், அதிமுகவிலிருந்து நிர்மல் குமார் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். ஏற்கனவே கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்துடன் இணைந்து அவர்கள் பணியாற்றுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முதல் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவியது. அதில் ஆதவ் அர்ஜுனாவும் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இருவரும் புல்வெளியில் நடந்து செல்வது போல பதிவு செய்யப்பட்ட வீடியோவில்,எடப்பாடி பழனிச்சாமி அண்ணாமலை அதிமுக கூட்டணி குறித்து ஆதவ் அர்ஜுனா பேசி இருந்தார். இந்த நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்ட நிலையில் பலரும் அதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே இன்று தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில்,"எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான். அதைத் தாண்டி, எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் எனது பொதுவாழ்வில் நான் கடைப்பிடித்தது கிடையாது. என்னுடன் பயணிப்பவர்களுக்கு அது நன்கு தெரியும். என்னுடைய அரசியல் பயணத்தில் எத்தனையோ விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லாம் என் மீது முன்வைக்கப்படும் பொழுது, எந்த இடத்திலும், யார் மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை நான் வைத்தது கிடையாது.

உண்மையும், நேர்மையும் கொண்ட ஒரு புதிய மக்கள் அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆவலுடனே நான் இந்த அரசியல் களத்திற்கு வந்தேன். தனிமனித விமர்சனங்கள் ஜனநாயக அரசியலுக்கு அழகல்ல எனும் கொள்கையை உறுதியாகக் கொண்டுள்ளேன். அப்படியிருக்கையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜனநாயகபூர்வ பொது வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வையும் எனது அரசியல் வாழ்வில் ஒரு கற்றலாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். அந்தவகையில், கொள்கைக்கான அரசியலையும், வெளிப்படைத்தன்மையான ஜனநாயகத்தையும் என்றும் மதித்து பயணிப்பதே எனது இலக்கு" என கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு குறித்து விஜயின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் ஆதவ் அர்ஜுனாவை கண்டித்ததை தொடர்ந்து வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி குறித்த வீடியோவை பார்த்த உடனேயே ஆதவ் அர்ஜுனாவை விஜய் கண்டித்ததோடு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட வேண்டும் என வற்புறுத்தினார்

அது மட்டும் அல்லாமல் நேரடியாகவே எடப்பாடி பழனிச்சாமியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடந்த நிகழ்வுகளுக்கு வருத்தம் தெரிவித்ததோடு இனி அப்படி நடக்காது என உறுதி அளித்ததாகவும் விஜய் பேசியதாக தகவல்கள் உலாவுகின்றன. ஏற்கனவே தமிழக வெற்றி கழகம் குறித்தோ, விஜய் குறித்தோ அதிமுகவினர் அவதூறாக பேசக்கூடாது என எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்ததாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+