வீட்டிலிருந்து நீலாங்கரை வாக்குச் சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்த நடிகர் விஜய்!
சென்னை: சென்னை நீலாங்கரை வாக்குச் சாவடி மையத்தில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார்.
Recommended Video

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என வாக்களித்து வருகிறார்கள்.
அந்த வகையில் அஜித், ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்தி, சூர்யா உள்ளிட்டோர் அந்தந்த வாக்குச் சாவடிகளில் வாக்களித்தனர். நடிகர் விஜய் எப்போது வருவார் என அவரது ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

வீட்டில்
நீலாங்கரையில் உள்ள விஜய் தனது வீட்டிலிருந்து அந்த பகுதியில் உள்ள வாக்குச் சாவடி மையத்திற்கு சைக்கிளில் வந்தார். மிக வேகமாக சைக்கிளை மிதித்து வந்தது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. முகக் கவசம் அணிந்தபடியே வந்த அவர் வாக்களித்துவிட்டு சென்றார்.

ரசிகர்கள்
சைக்கிளில் வந்து வாக்களித்த விஜய், பின்னர் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து சென்றார். விஜய் சைக்கிளில் வரும் போது அவரை சுற்றி ஏராளமானோர் இரு சக்கர வாகனத்தில் வந்தனர். விஜய்யை பார்த்த உற்சாகத்தில் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

வாக்களிப்பு
சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற கருத்தை மக்களுக்கு தெரிவிக்கவும், பெட்ரோல் டீசல் விலையுயர்வை மறைமுகமாக சுட்டிக் காட்டவும், வாக்களிப்பது கட்டாயம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவர் சைக்கிளில் வந்து வாக்களித்திருக்கலாம் என தெரிகிறது.

விமர்சனம்
தனது படங்களில் சமூக பிரச்சினைகள் குறித்து விஜய் கடுமையாக விமர்சனம் செய்து வசனங்களை பேசியிருந்தார். அது போல் சர்க்கார் படத்தில் விஜய்க்கு பதிலாக வேறு ஒருவர் வாக்களித்து பின்னர் அந்த வாக்கு செல்லாது என போராடி வெற்றி பெறும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மூலம் வாக்களிப்பது கட்டாயம், எங்கிருந்தாலும் ஜனநாயக கடமையை ஆற்றிட வேண்டும் என்பது ஆகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications