மருத்துவருக்கு கத்தி குத்து! ’இந்த’ ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பில்லை.. தவெக விஜய் டைரக்ட் அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கிண்டி கலைஞர் நினைவு அரசு மருத்துவமனையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது தினம் தினம் நிகழும் குற்றச் செயல்களால் நிரூபணமாகிறது எனவும் விஜய் விமர்சித்துள்ளார்.

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் புற்றுநோய் துறை மருத்துவர் பாலாஜியை, நோயாளியின் மகனான விக்னேஷ் என்பவர் கத்தியால் குத்தியதால் அவர், ரத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

guindy hospital vijay doctor

மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மருத்துவர்கள் கொந்தளித்துள்ள நிலையில், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தையும் அறிவித்து பின்னர் வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, மருத்துவர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அதே நேரத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். அந்த வகையில், சென்னை கிண்டி கலைஞர் நினைவு அரசு மருத்துவமனையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது எனவும் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," தமிழ்நாட்டில் பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர் கேட்டையே காட்டுகிறது என்று எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் வாயிலாகக் கண்டனம் தெரிவித்திருந்தோம். இந்த நிலையில், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது தினம் தினம் நிகழும் குற்றச் செயல்களால் நிரூபணமாகிறது.

சென்னை கிண்டியில் உள்ள உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள் இன்று கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கும் இது போன்ற அரசு உயர் சிறப்பு மருத்துவ மனையில், அரசு மருத்துவரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டு இருப்பதற்குத் தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம். கத்திக் குத்தில் படுகாயம் அடைந்த மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள், விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்.

காலம் நேரம் பார்க்காது கடுமையாக உழைக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சட்டப் பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் தினந்தோறும் நிகழும் பல்வேறு குற்ற நிகழ்வுகள், பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளன. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்கள் இனியாவது விழித்துக் கொண்டு மக்களைப் பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என அந்த பதிவில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+