என்ன வச்சி சீமானிடம் பணம் பறிக்க வீரலட்சுமி திட்டம்! கேஸ் வாபஸ் ஏன்? நடிகை விஜயலட்சுமி பரபர வீடியோ
சென்னை: என்னை வைத்து சீமானிடம் பணம் பறிப்பதுதான் வீரலட்சுமியின் திட்டம் என நடிகை விஜயலட்சுமி பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோவில் கடந்த மார்ச் மாதம் மதுரை செல்வத்தை வைத்து சீமான் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் மாதம் ரூ 50 ஆயிரம் கொடுத்துவிடுவதாகவும் சென்னைக்கு வர வேண்டாம் என்றும் லோக்சபா தேர்தல் முடிந்தவுடன் சென்னை வருமாறும் தெரிவித்திருந்தார்.

அதன்படி மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பணம் போட்டார்கள். ஆனால் கணவன் மனைவியாக இருந்த போது எப்படி பேசினோமோ அது போன்ற வீடியோக்களை எல்லாம் வாங்கிக் கொண்டனர். தற்போது என்னை மிரட்டுகிறார்கள். என் மீது மான நஷ்ட வழக்குப் போடுவேன் என மிரட்டுகிறார்கள்.
இப்படியே மிரட்டினால் நான் தற்கொலை செய்து கொள்வேன், இந்த முடிவுக்கு யார் காரணம் என்பதையும் எழுதி வைத்துவிட்டு என் சகோதரியுடன் சேர்ந்து நானும் தற்கொலை செய்து கொள்வேன். ஓவர் டார்ச்சர் செய்தால் இதைத்தான் நான் செய்வேன். என்னை அந்த சூழலுக்கு தள்ளாதீர்கள் என்றார். மேலும் அவருடைய வீடியோவில் வீரலட்சுமி குறித்தும் பேசியுள்ளார்.
அதில் அவர் பேசுகையில் சீமான் மீது நான் கொடுத்த வழக்கை வாபஸ் பெற்றது முட்டாள்தனமாக நான் எடுத்த முடிவாகவோ அல்லது மிரட்டி வாபஸ் வாங்கியதாகவோ அல்லது பெரிய தொகை கொடுத்த பிறகு வாபஸ் வாங்கி விட்டதாகவோ யாரும் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். இந்த வழக்கை பொருத்தவரை தன் தலைவருக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் அது சரியோ தவறோ நாங்கள் களத்தில் இறங்கி நாம் தமிழர் கட்சியினர் வெறித்தனமாக போராடினார்கள்.
இன்னொரு பக்கம் நான் சென்னைக்கு வந்த முதல் நாள் முதல், அதாவது சென்னையில் இருந்த இரு வாரங்கள் சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கிக் கொண்டிருந்தேன் என யாரும் நினைக்க வேண்டாம். நான் பக்காவாக உட்கார்ந்து அப்சர்வ் செய்து கொண்டிருந்தேன். யார் யார் எண்ணங்கள் எப்படி இருக்கிறது , யார் யாருக்கு என்னென்ன தேவை என்பதை எல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன்.
வீரலட்சுமி அம்மாவுக்கு வாய்ப்பேசுதான். என் தம்பிகளை கூட்டிட்டு வந்து அதை பண்ணிடுவேன் இதை பண்ணிடுவேன் என சொன்னாங்க, அம்மா உண்ணாவிரதத்தை தொடங்கிடலாம் என கேட்ட போது இல்லக்கா, 4 நாட்களுக்கு அசைவ சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளேன். அதை சாப்பிட்டு விட்டு நீங்கள் செய்ங்க என சொன்னார். இப்படி இவரும் எதையும் உருப்படியாக செய்யாமல் என்னையும் எதையும் உருப்படியாக செய்யவிடாமல் செய்தார்.
மறைமுகமாக என்னை வைத்து சீமானை மிரட்டி பணம் பறிக்கும் மனசுதான் வீரலட்சுமிக்கு இருந்தது. ஏன் சொல்கிறேன் என்றால் வீரலட்சுமி என்னிடம் பேசும் போது இந்த வழக்கில் நான் நியாயம் வாங்கித் தருவேன் என சொன்னதில்லை, அதற்கு பதிலாக சீமானிடம் இருந்து பெரிய செட்டில்மென்ட் வாங்கித் தருவதாகதான் சொல்லிக் கொண்டிருந்தார்.
நான் அப்போ என்ன நெனச்சேன்னா, தேவையில்லை, சீமானுடன் நான் சண்டை போட்டாலும், அவர் என்னுடன் வாழாவிட்டாலும் சீமானுக்கு என் உயிர் மீது அக்கறை அதிகம், நாம் தமிழர் கட்சியினரால் எனக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என சீமான் நினைத்தார். இதை நான் பார்த்தேன், நல்லபடியாக கேஸை வாபஸ் வாங்கிக் கொண்டேன். சீமானின் அன்பும் நாம் தமிழர் கட்சியின் அன்பும் எனக்கு கடைசி வரை இருந்தால் போதும் என நினைத்துதான் வழக்கை வாபஸ் வாங்கினேன். இவ்வாறு விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications