Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் விஜய் வருகையால் பீதியில் திருமாவளவன்..கட்சியை காப்பாற்ற மது ஒழிப்பு மாநாடு- அதிமுகவிடம் சரண்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு மாநாடு நடத்துவது என்பதே நடிகர் விஜய் கட்சியால் தமது கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான்.. இதனால்தான் சட்டசபை தேர்தலில் அதிகமான தொகுதிகளைத் தரக் கூடிய வாய்ப்புள்ள அண்ணா திமுகவிடம் நெருக்கம் காட்டவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடங்கி இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சட்டசபை தேர்தலில் ஆகக் குறைந்தபட்சம் சிங்கிள் டிஜிட் தொகுதிகள்தான் கிடைக்கும். திமுக இந்த முறை 200க்கும் அதிகமான தொகுதிகளில் போட்டியிடுவது என்கிற முடிவில் இருக்கிறது. திமுகவின் இந்த முடிவு ஒரு சுய பரிசோதனை முயற்சி- அக்னி பரீட்சை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் பெரும்பாலும் திமுக கூட்டணி கட்சிகளுடன் இணைந்தே தேர்தலை எதிர்கொண்ட நிலையில் கிட்டத்தட்ட தனித்துப் போட்டி என்கிற நிலைக்கு இணையானதுதான் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக போட்டியிடுகிற முடிவும்.

tamilnadu assembly election 2026 vijay thirumavalavan

ஏற்க முடியாத திமுக கூட்டணி கட்சிகள்: திமுகவின் இந்த திட்டவட்டமான நிலைப்பாட்டை கூட்டணியில் இருக்கும் பெரும்பாலான கட்சிகள் ஏற்க முடியாதவைதான். திமுக கொடுக்கக் கூடிய சொற்ப இடங்கள் அல்லது திமுகவின் சின்னத்தில் போட்டியிடுங்கள் என்கிற நிபந்தனையை எல்லாம் எந்த ஒரு கூட்டணிக் கட்சியும் ஏற்கும் எனவும் தெரியவில்லை.

வெளியேறும் திமுக கூட்டணி கட்சிகள்?: இதனால் இயல்பாகவே திமுகவிடம் இருந்து கூட்டணி கட்சிகள் வெளியேறவே விரும்பும். அதற்கான ஒரு தொடக்கத்தையே தற்போது மது ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உருவாக்கிக் கொடுத்துள்ளது. திமுகவும் மத்தியில் ஆளும் பாஜகவிடம் மென்மைப் போக்கை வெளிப்படுத்துகிறது என இடதுசாரிகளும் விமர்சனம் செய்துவிட்டு வெளியேறக் கூடும். சுயமரியாதையைக் காப்பாற்ற வெளியேறுகிறோம் என மதிமுகவும் கர்ஜிக்கக் கூடும்.

வட தமிழ்நாடு அரசியல்: இவை ஒருபுறம் இருக்க, விசிகவின் மது ஒழிப்பு மாநாடு மற்றும் அதிமுகவிடம் சரணடைதல் என்பது வெறும் திமுகவுடனான கூட்டணி விவகாரமாக மட்டுமே பார்க்கக் கூடாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வாக்கு வங்கி என்பது வட தமிழ்நாட்டை அடிப்படையாகக் கொண்டது. வட தமிழ்நாட்டில்தான் கணிசமான செல்வாக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பெற்றுள்ளது.

விஜய் வருகையால் பெரும் பீதி: இதே வடதமிழ்நாட்டில்தான் நடிகர் விஜய் தமது முதலாவது அரசியல் மாநாட்டை நடத்த உள்ளார். நடிகர் விஜய் அரசியல் வருகை, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது அரசியல் மாநாடு அனைத்துமே தமது கட்சியின் இருப்புக்கே உலை வைக்க வாய்ப்பிருக்கிறது என்கிற அச்சம் திருமாவளவனுக்கு இருக்கிறது.

ஜாதிய கட்சி விமர்சனம்: தமிழ்நாட்டின் பெரும்பாலான கட்சிகள் ஏதோ ஒரு அரசியல் சார்பானவையாக இருக்கின்றன. திராவிட, இடதுசாரி என்கிற ஏதோ ஒரு சித்தாந்தத்தின் கீழ் இருக்கின்றன. ஆனால் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சொல்வதைப் போல, ஒரு ஜாதிய கட்சியாகத்தான் விசிக பார்க்கப்படுகிறது. என்னதான் தலித், அம்பேத்கரியம் பேசினாலும் என்னதான் இதர ஜாதி, மதத்தைச் சேர்ந்தவர்களை கட்சி அமைப்புகளில் முன்னிறுத்தினாலும் எம்.எல்.ஏ.வாக்கினாலும் விசிக என்பது அடிப்படையில் ஒரு ஜாதியக் கட்சியாகவே இருக்கிறது. திருமாவளவன் போன்ற தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு சித்தாந்த புரிதல் இருந்தாலும் ஜாதிய அடிப்படையிலேயே விசிக கட்டமைப்பு இருக்கிறது.

வட தமிழ்நாடும் விஜயகாந்த், விஜய்யும்: இதனால்தான் விஜயகாந்த் தேர்தல் களத்துக்கு வந்த போது அவர் குறிவைத்தது வட தமிழ்நாட்டை.. வட தமிழகத்து வன்னியர்கள் மட்டுமே விஜயகாந்தை வளர்த்துவிட்டார்கள் என சொல்லிவிட முடியாது. வட தமிழ்நாட்டு வன்னியர்களும் தலித்துகளும் இணைந்துதான் விஜயகாந்துக்கு கொம்பு சீவினர். விஜயகாந்த் பாணியில்தான் நடிகர் விஜய்யும் வட தமிழ்நாட்டைக் குறி வைக்கிறார். ஏனெனில் வட தமிழகத்து வன்னியர்கள், தலித்துகள்தான் ஜாதியத்தை இறுக்கமாக நம்பக் கூடியவர்களாக இருக்கின்றனர். அரசியல் பார்வையை இழந்தவர்களாகவே இருக்கின்றனர். சினிமா நட்சத்திரங்களை கொண்டாடுகிறவர்களாக உள்ளனர். இவர்களை வளைப்பதும் இழுப்பதும் எளிதானதாகவே இருக்கிறது. இதனால்தான் சொந்த ஜாதி கட்சிதான் என்பதற்காகவே பாமகவுக்கே அத்தனை வன்னியரும் ஓட்டுப் போட்டதும் இல்லை.. சொந்த ஜாதி கட்சிதான் என்பதற்காகவே அத்தனை தலித்துகளும் விசிகவுக்கு வாக்களித்ததும் இல்லை என்பதுதான் சரித்திரம்.

திருமாவளவனுக்கு அச்சம்: இதனை நன்கு புரிந்து கொண்டிருப்பதால்தான் திருமாவளவனுக்கு ஒருவித அச்சம் உருவாகி இருக்கிறது. அதாவது நடிகர் விஜய் கட்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கணிசமான அளவு இடம் பெயர்ந்துவிட்டால் கூட்டணியில் பேரம் பேசும் சக்தியும் போய்விடும் என்பதும் திருமாவளவனுக்குள் இருக்கும் இன்னொரு அச்சம். ஆகையால் விஜய் மாநாடு நடத்தும் அதே கால கட்டத்தில் அதே வடதமிழ்நாட்டில் விசிகவின் மாநில மாநாடு என்று சொல்லும் அளவுக்கு அதாவது மாஸ் காட்டியாக வேண்டும் என்ற மரண பீதியில் மது ஒழிப்பு என்ற பெயரில் மாநாட்டை நடத்துகிறார் திருமாவளவன் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஆகையால்தான் 1 லட்சம் பெண்களை சீருடையில் அணி திரட்டுவோம் என்றெல்லாம் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து வருகிறார் திருமாவளவன் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர். அதேபோல அதிமுகவிடம் சரணடைந்துவிட்டால் கட்சியை காப்பாற்ற கணிசமான பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் தந்துவிடலாம் என்பதும் திருமாவளவனின் கணக்கு என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+