சங்க அலுவலக பூட்டை உடைக்க முயன்ற விஷால்.. கைது செய்யப்பட்டு 8 மணி நேரத்திற்கு பின் விடுவிப்பு
Recommended Video

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அலுவலகத்தின் பூட்டை உடைக்க முயற்சித்த காரணத்தால் நடிகர் விஷால் கைது காலையில் செய்யப்பட்டார். காலையில் கைது செய்யப்பட நடிகர் விஷால் 8 மணி நேரத்திற்கு பின் விடுவிக்கப்பட்டார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விஷால் விலக வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்கத்தில் சிலர் குரல் எழுப்பி வருகிறார்கள். சங்கத்தின் நிரந்தர வைப்புத் தொகையான 7 கோடி ரூபாயில் விஷால் முறைகேடு செய்து விட்டதாக 150க்கும் அதிகமான உறுப்பினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் ஏ.எல்.அழகப்பன், எஸ்.வி.சேகர், ஜே.கே.ரித்தீஷ் உள்ளிட்ட முக்கிய தயாரிப்பாளர்கள் விஷாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

பூட்டு போட்டனர்
நேற்று இவர்கள் 150 பேரும் சேர்ந்து தி. நகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர். அதேபோல் அண்ணா சாலையில் உள்ள இன்னொரு தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கும் பூட்டு போட்டனர். இதனால் நேற்று மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

விஷால் வருகை
இந்த நிலையில் தி. நகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு இன்று விஷால் வந்தார். அவர் தனது ஆதரவாளர்களுடன் தி. நகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு வந்தார். உள்ளே சென்று தனது பணிகளை பார்க்க வேண்டும் என்று அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளிடம் கூறினார். ஆனால் போலீசார் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.

பெரிய சண்டை
இதனால் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் விஷால் - போலீசார் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. அலுவலக வாசலில் நிற்கும் போலீசாருடன் விஷால் வாக்குவாதம் செய்தார். பூட்டை உடைக்க விஷால் முயற்சி செய்தார். ஆனால் போலீஸ் சாவி வைத்து வேண்டுமானால் திறந்து கொள்ளலாம் என்று கூறினர். ஆனால் பூட்டை உடைத்துதான் உள்ளே நுழைவேன் என்று விஷால் உறுதியாக இருந்தார்.

வாக்குவாதம் முற்றியது
இதனால் போலீஸ் விஷால் இடையே வாக்குவாதம் முற்றியது. பூட்டை அகற்ற முயற்சித்ததற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் விஷால் தொடர்ந்து வாக்குவாதம் செய்தார். விஷாலின் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்ப துவங்கினார்கள்.

போலீசார் எச்சரிக்கை
சங்க அலுவலகத்துக்கு உள்ளே சென்றே தீருவேன். என்ன ஆகிறதோ பார்த்துக் கொள்ளுங்கள் என்று விஷால் கோபமாக பேசினார். இதனால் விஷாலை கைது செய்ய நேரிடும் என்று போலீஸ் எச்சரிக்கை விடுத்தனர். தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைக்க அனுமதிக்க முடியாது, சட்டவிரோதமாக இங்கு கூடியதாக கைது செய்ய நேரிடும் என்று உதவி ஆணையர் கோவிந்தராஜூ எச்சரிக்கை விடுத்தார்.

விடுதலை செய்தனர்
காலையில் கைது செய்யப்பட நடிகர் விஷால் 8 மணி நேரத்திற்கு பின் விடுவிக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் 8 மணி தனியார் கல்யாண மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்தார். விஷால் மீது 2 பிரிவுகளின் கீழ் பாண்டி பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், தகராறில் ஈடுபட்டு அமைதியை குலைத்தல் ஆகிய உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் விஷால் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இரண்டு பிரிவு
இதையடுத்து விஷால் மீது 2 பிரிவுகளின் கீழ் பாண்டி பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், தகராறில் ஈடுபட்டு அமைதியை குலைத்தல் ஆகிய உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் விஷால் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாக இவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர் செய்ய வாய்ப்புள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications