சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

”விவேக் சாலை” விவேக் மனைவி வைத்த கோரிக்கை! சட்டென நிறைவேற்றிய முதல்வர்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை : நடிகர் விவேக் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு, அவரது பெயரை சூட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திந்து விவேக்கின் மனைவி அருட்செல்வி வேண்டுகோள் விடுத்த நிலையில், அவரது கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமா கண்டெடுத்த நகைச்சுவை நடிகர்களில் தனக்கென்று தனி வழியை கடைப்பிடித்தவர் சின்னக் கலைவாணர் விவேக். தனது நகைச்சுவையால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த அவர் மரக்கன்றுகள் நடுவதில் மிகவும் ஆர்வம் காட்டினார்.

சாதி, மத, மூடநம்பிக்கைகளை எதிர்த்து தனது காமெடி காட்சிகளின் வழியே சாமானியர்களுக்கும் நல்ல செய்தியை, விழிப்புணர்வை கொண்டு சென்ற அவர் இறுதிநாட்கள் வரை சமூகப் பணி மேற்கொண்டார்.

சின்ன கலைவாணர்.. விவேக் மறைந்து ஒரு வருடமாச்சு.. முதல்வரிடம் விவேக் மனைவி வைத்த உருக்கமான கோரிக்கை சின்ன கலைவாணர்.. விவேக் மறைந்து ஒரு வருடமாச்சு.. முதல்வரிடம் விவேக் மனைவி வைத்த உருக்கமான கோரிக்கை

நடிகர் விவேக் மரணம்

நடிகர் விவேக் மரணம்

தனது மரணத்திற்கு முதல் நாளில் கூட தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுக்காக பேசிய அவர் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு திரைத்துறை மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களையும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. திரைப் பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் நடிகர் விவேக்குக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

அவர் மறைந்தாலும் தினமும் நம்முடன் தான் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எனும் அளவுக்கு அவரது நற்பணிகளும் திரை உலக அர்ப்பணிப்பும் இருந்தது. இந்த நிலையில் நடிகர் விவேக்கின் மனைவி அருட் செல்வி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்தித்து கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில் நடிகர் விவேக் இல்லம் அமைந்திருக்கும் சாலைக்கு விவேக்கின் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மனைவி கோரிக்கை

மனைவி கோரிக்கை

முதல்வர் உடனான இந்த சந்திப்பின்போது, விவேக்கின் மகள் அமிர்தா நந்தினி, அவருடனும் நடித்தவரும், விவேக் பசுமை கலாம் இயக்க நிர்வாகியுமான செல் முருகன் ஆகியோரும் இருந்தனர். இந்நிலையில் தமிழக அரசு நடிகர் விவேக்கின் மனைவி வைத்த கோரிக்கையை நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பில் திரைத்துறையினரும் விவேக்கின் ரசிகர்களும் இருந்தனர். இந்நிலையில் அவரது கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

அரசாணை வெளியீடு

அரசாணை வெளியீடு

சென்னை விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் ரமலான் பரிசு வழங்கும் நிகழ்ச்சி பேசிய தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும் போது, நடிகர் விவேக், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமுக்கு பிடித்த நடிகர். மிகவும் சிறந்த நடிகரான விவேக்கின் குடும்பத்தினர் அவர் இல்லம் அமைந்துள்ள சாலைக்கு அவர் பெயரை வைக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அவர்கள் கொடுத்த மனுவை ஏற்று முதல்வர் ஸ்டாலின் உடனடியாக விவேக் பெயரை சூட்ட வேண்டும் என அரசாணையை வெளியிட உத்தரவிட்டுள்ளார். வரும் மே மாதம் 3 ஆம் தேதி அதன் பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது" என்று கூறியுள்ளார்.

English summary
Health Minister Ma Subramaniam has said that the government has accepted the request of actor Vivek's wife Arutchelvi after meeting Chief Minister MK Stalin in person to name the road where Vivek's house is located.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X