ஸ்டாலினுக்கு ரோஜா தந்த கிப்ட் பார்த்தீங்களா.. ரொம்ப நாள் பழகினவர் மாதிரி பேசினாராம்..பூரிப்பு பேட்டி
முதல்வர் ஸ்டாலினுக்கு பட்டினால் நெய்த சால்வையை நடிகை பரிசாக தந்துள்ளார்
சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகை ரோஜா தந்த கிப்ட் தான் தமிழக அரசியலின் கவனத்தை இன்றைய தினம் ஈர்த்து வருகிறது.
2 நாளைக்கு முன்பு நடிகர் விஜய்யை, புதுச்சேரி ரங்கசாமி சந்தித்து பேசினார்.. விஜய்க்கும் ரங்கசாமிக்கும் என்ன சம்பந்தம்? மாநிலம் விட்டு மாநிலம் வந்து, ரங்கசாமி ஏன் இவரை வந்து சந்தித்து விட்டு போகிறார் என்ற பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை.

நடிகை ரோஜா
அதற்குள் இந்த பக்க மாநிலத்தில் இருந்து வந்து, ரோஜா பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.. ஆந்திர மாநில எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா இன்று காலை முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்... பின்னர் செய்தியாளர்களிடம் ரோஜா பேசியபோது, "ஆந்திர மாநிலம் மற்றும் தமிழக எல்லைப்பகுதியில் சாலை அமைப்பது தொடர்பாக முதல்வருடன் பேசினேன்..

தமிழ் மக்கள்
ஆந்திர மாநிலத்தில் நான் எம்எல்ஏவாக இருக்கும் நகரி தொகுதியானது தமிழ் பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். அவர்கள் மருத்துவ உதவிகளுக்காகச் சென்னைக்குத்தான் அதிகம் வருகிறார்கள்... அவ்வாறு வருபவர்களுக்கு சில நேரம் எல்லைப்பகுதிகளில் அனுமதி கிடைப்பதில்லை.. அதனால், எந்தத் தடையுமில்லாமல் அவர்கள் வந்து சேர உதவி செய்ய வேண்டும் என்றும், ஆந்திரா மற்றும் தமிழக எல்லையில் உள்ள தமிழ் பள்ளிகளுக்கு புத்தகங்களை வழங்கி உதவ வேண்டும் என்றும் முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன்..

முக ஸ்டாலின்
முதல்வர் என்னுடன் பேசும்போது ரொம்ப நாள் பழகியவரை போல நட்புரிமையுடன் பேசினார்... நான் முன்வைத்துள்ள கோரிக்கைகளை கொரோனா காலம் முடிந்தவுடன் நடவடிக்கை எடுப்பதாக நிறைவேற்றுவதாக உறுதி கூறியுள்ளார்.. ஆந்திரா, நகரி தொகுதி நெசவாளர்கள் தயாரித்த பட்டு சால்வை முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கினேன்" என்றார் ரோஜா.. இதற்கு பிறகு, முதல்வர் மு.க. ஸ்டாலினின் படம் பொறிக்கப்பட்ட சால்வையை செய்தியாளர்களிடம் காட்சிப்படுத்தினார்.

பட்டு சால்வை
பக்கத்தில் நின்றிருந்த செல்வமணியிடம் இருந்து அந்த சால்வையை வாங்கிய ரோஜா, அதை செய்தியாளர்களிடம் பிரித்து காட்டினார்.. புளூ கலரில் இருந்தது அந்த பட்டு சால்வை.. நடுவில் ஸ்டாலின் சிரிக்கும் உருவ படம் பொறிக்கப்பட்டிருந்தது.. "இதான் அது.. கொஞ்சம் அர்ஜென்ட்டா இதை ரெடி பண்ணிட்டாங்க.. இல்லாட்டி நல்லா வந்திருக்கும்" என்றார்.. முன்னதாக, ஆந்திரா, நகரி தொகுதி நெசவாளர்கள் தயாரித்த இந்த பட்டு சால்வையைதான் முதல்வர் ஸ்டாலினிடம் ரோஜா கிப்ட்டாக வழங்கியிருக்கிறார்..!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications