நடிகை பலாத்காரம்: வெயிட் பண்ணுங்க..சொல்லும் போது வாங்க.. நட்ட நடுரோட்டில் சீமானை தவிக்க விட்ட போலீஸ்
சென்னை: நடிகை பலாத்கார வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தாமதமாக வர வேண்டும் என போலீசார் உத்தரவிட்டதால் நடு சாலையிலேயே சீமான் தத்தளித்துக் கொண்டு காத்திருந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நடிகை பலாத்கார வழக்கை சென்னை வளசரவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர். பெங்களூரில் உள்ள நடிகையிடம் ஏற்கனவே வாக்குமூலம் பெற்றிருந்தது போலீஸ். இதனைத் தொடர்ந்து சீமானையும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது போலீஸ்.

ஆனால் விசாரணைக்கு வருவதற்கு சீமான் தரப்பு அவகாசம் கேட்டது. இதனை நிராகரித்த போலீசார் இன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது. இதனால் வேறுவழியே இல்லாமல் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகவும் சீமான் ஒப்புக் கொண்டார்.
சேலத்தில் இருந்து சென்னை வந்த சீமான் நேராக வடபழனியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றார். அங்கு தமது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, இரவு 8 மணிக்கு மேல் சீமானை விசாரணைக்கு வரலாம் என போலீசார் தகவல் அனுப்பினர். இதனால் சீமானும் 8 மணிக்கு மேல் புறப்பட்டு வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென போலீசார் தரப்பில் நாங்கள் சொல்லும் போது வரவும்.. அதுவரை காத்திருங்கள் என்கிற தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோ அருகே உள்ள சாலையில் சீமான் வாகனம் நிறுத்தப்பட்டது. அதே இடத்தில் சீமான் தொடர்ந்து காத்திருந்தார். அத்துடன் நீண்ட நேரம் யாருடனோ சீமான் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார் சீமான்.
இன்னொரு பக்கம், சீமான் ஆஜராக வருவதால் வளசரவாக்கம் காவல் நிலையத்தின் அருகே நாம் தமிழர் கட்சியினர் பெரும் எண்ணிக்கையில் திரண்டனர். அத்துடன் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அங்கு அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாத வகையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் காவல் நிலையம் அருகே தடுப்புகளும் போடப்பட்டுள்ளன. இதனால் வளசரவாக்கம் காவல் நிலைய பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
முன்னதாக நேற்று சீமான் வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டியபோது, அது கிழிக்கப்பட்டது. இது தொடர்பாக சீமானின் காவலாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications