சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரபல நடிகை அதிரடி.. "தனிமையில் சினேகனுடன்".. விடமாட்டேன்.. கோர்ட்டே சொல்லிடுச்சு.. இங்க பாருங்க FIR

நடிகை ஜெயலட்சுமி சினேகன் மீது பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: எந்த ஒரு ஆதாரமுமில்லாமல், பொய் புகார் அளித்து, என்னை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கின சினேகனை சும்மா விட மாட்டேன் என்று சீறியுள்ளார் நடிகை ஜெயலட்சுமி.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி, சென்னை கமிஷனர் ஆபீசில் பாடலாசிரியர் சினேகன் ஒரு புகார் தந்திருந்தார்.

அதில், சினேகம் பவுண்டேஷன் என்ற தனது அறக்கட்டளை பெயரை தவறாக பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்து வருவதாக நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்..

 மாறி மாறி புகார்

மாறி மாறி புகார்

இதையடுத்து, இந்த குற்றச்சாட்டை மறுத்த நடிகை ஜெயலட்சுமி, தன்னையும் தனது அறக்கட்டளையையும் அவதூறாக பேசி வரும் விளம்பரம் தேடி வரும் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அதே கமிஷனர் ஆபீசில் கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் தந்தார்.. இப்படி 2 பேருமே புகார்களை மாறி மாறி தந்ததால், அந்த சினேகம் பவுண்டேஷன் யாருக்கு சொந்தமானது என்ற குழப்பம் போலீசாருக்கு ஏற்பட்டது.. அதனால், சினேகம் பவுண்டேஷன் யாருக்கு சொந்தமானது? என்று 2 பேரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு அழைத்து விசாரித்தனர்.

 அவதூறு

அவதூறு

அவர்களுடன் சமரசம் செய்து அனுப்பியும் வைத்தனர்.. ஆனால், ஜெயலட்சுமி இந்த பிரச்சனையை விடவில்லை.. சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மறுபடியும் கமிஷனர் ஆபிசுக்கு போய் புகார் தந்தார்.. அத்துடன் விடவில்லை.. எழும்பூர் கோர்ட்டுக்கே சென்று, சினேகன் மீது இது தொடர்பாக கேஸ் போட்டார்.. இந்த வழக்கின் மனு நேற்று விசாரணைக்கு வந்தது... அப்போழுது அவதூறு பரப்பும் வகையில் பேசிய, சினேகன் மீது வழக்கு பதிவு செய்து அடுத்த மாதம் 19ம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு எழும்பூர் மேஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.

 நெருக்கம் + காபி

நெருக்கம் + காபி

இந்த உத்தரவு நகலை பெறுவதற்காக, இன்று கமிஷனர் ஆபீசுக்கு வந்திருந்தார் ஜெயலட்சுமி.. பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது, சினேகனை விடமாட்டேன் என்று கொந்தளித்தார்.. ஜெயலட்சுமி அப்போது பேசியதாவது: இந்த பிரச்சனை தொடர்பாக பல அவதூறுகளை சினேகன் சொல்லி வருகிறார்.. இந்த விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு சினேகன் என்னை அழைத்தாராம்.. தனிமையில் அவரை சந்தித்து, நெருங்கி.. காபி குடிக்க நான் அவரை கூப்பிட்டேனாம்.. பொதுவெளியில் இதை சொன்னதுடன் இல்லாமல், புகார் மனுவிலும் இதையே எழுதி தந்திருக்கிறார்..

 எக்மோர் கோர்ட்

எக்மோர் கோர்ட்

இதனால் நான் அதிர்ச்சி அடைந்து, இதுக்கெல்லாம் ஆதாரம் எங்கே? ஆதாரமேயில்லாமல் என் மீது எப்படி புகார் தர முடியும் என்று கேட்டேன்.. இதற்காகத்தான் மறுபடியும் ஒரு புகாரை கமிஷனர் அலுவலகத்தில் தந்தேன்.. 3 நாள் முறை எங்களிடம் போலீஸ் தரப்பு பேசினார்கள்.. சமரசம் செய்தார்கள்.. ஆனால், ஒரு மாதம் கழித்து, எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று காவல்துறையினர் சொல்லி விட்டார்கள்.. காவல்துறை மீது மிகவும் நம்பிக்கை வைத்திருந்தேன்.. அதனால்தான் கோர்ட்டுக்கே போனேன்..

 ஆர்டர் காப்பி

ஆர்டர் காப்பி

சினேகன் மீது எப்ஐஆர் பதிவு செய்ய சொல்லி ஆர்டரை நான் கோர்ட்டில் வாங்கிவிட்டேன்.. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம்.. போலீஸ் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்று சொல்லியபிறகும், நான் கோர்ட்டுக்கு சென்று இந்த ஆர்டரை வாங்கி உள்ளேன்.. எனக்கும் சினேகனுக்கும் பழக்கமே கிடையாதுங்க.. என்னை ரொம்ப அசிங்கப்படுத்திட்டார்.. இவர் செய்த அசிங்கத்தால், என்னுடைய அறக்கட்டளை மூலம் நன்மை பெறுபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்..

 தர்மம் வென்றது

தர்மம் வென்றது

அப்பா இல்லாத குழந்தைங்களை நாங்கள் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறோம்.. இப்படியெல்லாம் சினேகன் போன்றோர் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை தந்தால், நல்லது செய்ய வரும் எங்களை போன்றோருக்கு மன உளைச்சல்தான் ஏற்படுகிறது.. பொதுவெளியில் பெண்களை பற்றி ஆதாரமே இல்லாமல், எதை வேண்டுமானாலும் பேசினால் என்பவர்களுக்கு இது ஒரு பாடம்.. தர்மம் இன்று வென்றுள்ளது என்றார் ஜெயலட்சுமி.

English summary
Actress Jayalakshmi complaint against lyricist snehan and says about Police Department
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X