கஸ்தூரி வரிஞ்சு கட்டிட்டு வந்துட்டாங்க.. பின்னாடியே வந்த உடன்பிறப்புகள்.."என்ன அக்கறை, என்ன அக்கறை"
சென்னை: உதயநிதி ஸ்டாலினை மீண்டும் கடுமையாக விமர்சித்தும், கிண்டலடித்தும் ட்வீட் பதிவிட்டுள்ளார் பிரபல நடிகையும், சமூக ஆர்வலருமான கஸ்தூரி.
உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சுக்கு பாஜக கொந்தளித்து வருகிறது.. அமித்ஷா முதல், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரை கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே, உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாமியார் உதயநிதியின் படத்தை, கத்தியால் கிழித்து தீயிட்டு கொளுத்தியதுடன், உதயநிதியின் தலையை கொண்டு வந்தால், ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்தார்..

தலைக்கு 10 கோடி: "என் தலையை சீவுவதற்கு, ஒரு கோடி ரூபாய் எதுக்கு? வெறும் 10 ரூபாய் சீப்பு போதுமே"என்று உதயநிதி அதற்கு பதிலடி சொல்லவும், எரிச்சலடைந்த சாமியார் தரப்பு, சன்மான தொகையாக 10 கோடி ரூபாய் என்று அதிரடியாக உயர்த்திவிட்டது.
இதனால், உதயநிதி ஸ்டாலினின் தலையை வெட்டினால் ரூ.10 கோடி பரிசு வழங்குவேன் என்று அறிவித்த அயோத்தி சாமியாரின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.. ஒரு தரப்பினர், அந்த சாமியார் மீது புகார் தந்தும் வருகிறார்கள்.
போலீசில் புகார்: இந்நிலையில், தான் பேசியதில் எந்த தவறும் இல்லை என்று தொடர்ந்து சொல்லி வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.. "போலீசில் உங்கள் மீது புகார் தந்திருக்கிறார்களே" என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, முன்பைவிட இப்போது, தன்னுடைய கருத்தில் இன்னும் உறுதியாக இருப்பதாகவும் உதயநிதி சொல்லி உள்ளார்.
"நான் பேசியதில் தவறு ஏதும் இல்லை? அப்பறம் எதற்காக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்? சனாதனத்தில் பெண்கள் அடிமையாக வைக்கப்பட்டிருந்தனர்...
அடிமைகள்: கணவன் இறந்தால் உடன்கட்டை ஏற வேண்டும், வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன.. படிக்கவே கூடாது பெண்களுக்கு கட்டுப்பாடு இருந்தது.. இவையெல்லாம் இன்று திராவிட மாடலால் மாற்றம் ஏற்பட்டுள்ளது.. அனைத்து மதங்கள் குறித்தும் பேசினேன். இந்து மதம் குறித்து மட்டும் பேசவில்லை. நான் பேசக் கூடாது என்றால் திரும்ப திரும்ப பேசுவேன்" என்றார் உதயநிதி.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சை, நடிகை கஸ்தூரி மீண்டும் விமர்சித்துள்ளார்.. இன்று அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில், "என்ன அக்கறை என்ன அக்கறை. பெண்ணை இழிவுபடுத்துவதில் திமுக காரர்களுக்கு நிகர் உண்டா? அதை முதலில் ஒழிங்க... வரலாற்றில் பெண்ணை அடிமைப்படுத்திய மதம் எதுன்னு போட்டி வைத்தால் இந்து மதம் எவ்வளவோ பரவாயில்லை என்று தெரியும். அப்போ மற்ற மதத்தை ஒழிப்பேன் என்பாரா? பொய் சொல்பவர் Liar" என்று பதிவிட்டுள்ளார்.

கஸ்தூரி: நேற்றுதான் இதே பிரச்சனையை மையப்படுத்தி, ட்வீட் போட்டு உதயநிதியை கேள்வி எழுப்பியிருந்தார் கஸ்தூரி.. "டெங்கு மலேரியா உங்க தாய்க்கும் மாப்பிள்ளைக்குமே முற்றி உள்ளதே? அவங்களை என்ன பண்ணுறதா உத்தேசம்?.. ஊருக்கு உபதேசம் அதுவே பரம்பரை யுக்தி.. சனாதனத்தின் மேல் அவ்வளவு வெறுப்பு உள்ளவர்களுக்கு இந்து கோவில் சொத்து மட்டும் கேட்குதோ?.. முதல்ல உண்டியல்ல இருந்து கைய எடுங்க" என்று பதிவிட்டிருந்தார்.
இந்த ட்வீட்டினை பார்த்து ஏற்கனவே திமுகவினர் கடுப்பாகி வரும்நிலையில், இப்போது மீண்டும் உதயநிதியை சீண்டி, இன்னொரு ட்விட் பதிவிட்டுள்ளார் கஸ்தூரி. வழக்கம்போல், இந்த ட்வீட்டுக்கும், திமுக - பாஜகவினர் இரு தரப்புமே திரண்டு வந்து பதிலடிகளை தந்து கொண்டிருக்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications