நடிகை கஸ்தூரி "அதை" சொன்னாரு பாருங்க.. அதுவும் "கருணாநிதி" வேற.. அவசர அவசமாக வந்துட்டாங்க திமுகவினர்
சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் புதிய புதிய மாற்றத்தை நோக்கி நடைபோட்டு வரும்நிலையில், அது தற்போது பரவலான வரவேற்பை பெற்று வருகிறது. அத்துடன் சில விமர்சனங்களையும் கிளப்பி விட்டுள்ளது.
தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் உள்ள பேருந்துகளை புனரமைத்து, தனியார் பேருந்துகளுக்கு இணையான அளவில் சேவைகளை வழங்க முடிவு செய்யப்பட்டது..

மேலும், போதுமான அளவுக்கு, புதிய பஸ்களையும் வாங்கவும், ஏசி பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், முடிவு செய்யப்பட்டது. மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 450 டவுன் பஸ்கள் வாங்குவதற்கான டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.
அரசு பஸ்கள்: இதைத்தவிர, தமிழக அரசு போக்குவரத்து கழகம், தன்னுடைய பஸ்கள் அனைத்தையுமே, புனரமைப்பதற்காக, டெண்டர் விடுக்கப்பட்டது.. இந்த டெண்டரின்படி பஸ்கள் புதுப்பிக்கப்படும்போது, அதற்கு புதிதாக மஞ்சள் நிறம் அடிக்கப்பட முடிவானது... ஏற்கனவே சில்வர் மற்றும் நீல நிறத்தில் இருக்கும் பஸ்கள், இப்போது மஞ்சள் நிறத்திற்கு மாறியுள்ளன.
கலர் கலர் பஸ்கள்: அதிமுக ஆட்சியில் பச்சை கலரில் பஸ்கள் இயக்கப்பட்டன.. பிறகு, பிஎஸ் 4 ரக பஸ் வருகையால், நீல நிறம் மாற்றப்பட்டது.. இதற்கு பிறகு, இலவச பஸ் என அடையாளம் காண்பதற்காக, பாதி பிங்க் நிறத்தில் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே தமிழகத்தில் பள்ளி வாகனங்களும், மஞ்சள் நிறத்தில் உள்ளன.. இப்போது அரசு பஸ்ஸூம் மஞ்சள் நிறமாகிவிட்டது.
இந்நிலையில், அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 14.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட 100 பேருந்துகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று தொடங்கி வைத்தார்.. இந்த பஸ்கள் எல்லாமே மஞ்சள் கலரில் காட்சி தந்தன.
மஞ்சள் பஸ்கள்: இருக்கின்ற கலர்களை எல்லாம் விட்டுவிட்டு, எதற்காக இந்த மஞ்சள் கலர் பெயிண்ட் அடிக்க வேண்டும் என்று பரவலான சந்தேகமும் சோஷியல் மீடியாவில் எழுந்து வந்தது. இந்த சந்தேகத்தைதான், நடிகை கஸ்தூரி ஓபனாகவே கேட்டுவிட்டார்.
நடிகை கஸ்தூரி: பிரபல நடிகையும், சமூக ஆர்வலரும், துணிச்சல்வாதியுமான கஸ்தூரி, திமுகவாக இருந்தாலும் சரி, பாஜகவாக இருந்தாலும்சரி, பாரபட்சம் பார்க்காமல், அனைத்து கட்சிகளையுமே விமர்சித்தும், சாடியும், கேள்வி எழுப்பி வருகிறார். சில சமயம் கிண்டலடித்தும் வருகிறார். சில சமயம், மணிப்பூர் போன்ற விவகாரங்களில் உணர்ச்சிபெருக்கில் வெடித்து கதறியும் விடுகிறார்.
அந்தவகையில், இன்றைய தினம் திமுக அரசின் மஞ்சள் கலர் பஸ்களை பார்த்துமே, திமுக அரசுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.
சென்டிமென்ட்: அந்த ட்வீட்டில், "முதல்வர் ஸ்டாலின் மாடர்ன் டீலக்ஸ் டிஎன்எஸ்டிசி பஸ்களை இன்று தொடங்கி வைத்துள்ளார். அதற்கு வாழ்த்துக்கள் நன்றி. ஆனால் மஞ்சள் கலர் என்பது நல்ல ஐடியா கிடையாது. அப்பாவின் மஞ்சள் துண்டு சென்டிமென்ட்டை மகன் ஃபாலோ செய்கிறாரா? பள்ளி பேருந்துகள்தான் மஞ்சள் கலரில் இருக்க வேண்டும். நம்முடைய அரசு பேருந்துகளை "சிஎஸ்கே ஃபேன்' பஸ்கள் போல மாற்ற வேண்டிய தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, மஞ்சள் பை விவகாரம் இப்படித்தான் சலசலக்கப்பட்டது.. பிளாஸ்டிக் ஒழிப்பை மையப்படுத்தி முதல்வர் ஸ்டாலின் "மஞ்சள் பை" இயக்கத்தை அறிமுகப்படுத்தியபோது, இதுகுறித்து விமர்சனங்கள் அப்போதே கிளம்பின..
கருணாநிதி: "மறைந்த முதல்வர் கருணாநிதி தன்னுடைய ராசிக்கு ஏற்ற மஞ்சள் சால்வையை போட்டிருந்தார். அது அவரது அரசியலுக்கு கை கொடுத்தது... ஸ்டாலினும் அதையே ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிட்டாரு" என்று எதிர்கட்சியினர் கமெண்ட் அடிக்கவும், இது முதல்வரின் காதுகளுக்கு போக, மிகவும் வருத்தப்பட்டாராம்.
இந்த மஞ்சள் பை சலசலப்பு ஒருவழியாக நீங்கியுள்ள நிலையில், மஞ்சள் பஸ் மேட்டரை கஸ்தூரி இப்போது கிளப்பி உள்ளார். உடனே திமுகவினர், கஸ்தூரியின் ட்வீட்டுக்கு சில பதிலடிகளை தந்துள்ளனர்.. "பஸ் கலரில் என்ன இருக்கு மேடம்? பஸ்களின் தரம்தான் முக்கியம்".. என்று கமெண்ட்களை தந்துள்ளனர்.

மேலும் சிலரா, "எங்களுக்கும்தான் வந்தே பாரத் ரயிலில் உள்ள காவி கலர் பிடிக்கல? என்ன செய்றது சொல்லுங்க" என்று கஸ்தூரியிடம் உரிமையுடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications