"கண்ணே கூசுது".. வெட்கமா இல்லை? பாஜக பெண் தலைவர்கள் என்ன பண்றாங்க? எகிறி வந்த பிரபலம்..யார் பாருங்க
சென்னை: மணிப்பூர் சம்பவத்தில் பாஜகவின் பெண் தலைவர்கள் எல்லாம் மவுனமாக இருக்கிறார்களே ஏன்? நம்முடைய பெண் அமைச்சர்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள்? என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார் நடிகை கஸ்தூரி
மணிப்பூரில் 2 சமூகத்தினரிடையே நடந்து வரும் கலவரத்தில், நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், கடந்த மே 4 ந்தேதி மைத்தேயி இன இளைஞர்கள் குக்கி பழங்குடியின பெண்கள் 2 பேரை நிர்வாணமாக்கி, இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அவர்களில் 19 வயதுள்ள ஒரு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதைத் தட்டிக் கேட்ட அப்பெண்ணின் சகோதரர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யபட்டுள்ளார். மேலும் ஒரு இளைஞரும் கொல்லப்பட்டுள்ளார்.
மணிப்பூர்: மணிப்பூரில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து நிர்வாணமாக்கி அழைத்து சென்ற விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க சிறிது கால அவகாசம் கொடுப்போம் என்றும், இல்லையெனில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்குத் தெரியவந்துள்ள நிலையில், பல்வேறு தரப்பில் இருந்தும் கொந்தளிப்புகள் வெடித்து கிளம்பி உள்ளன. அந்தவகையில், பிரபல நடிகையும், சமூக ஆர்வலருமான நடிகை கஸ்தூரியும் காட்டமான கண்டனத்தை தெரிவித்துள்ளார்..
கஸ்தூரி ட்வீட்: இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "ஜனநாயகம் என்பது மக்களுக்கானது.. மிருகங்களுக்கானது கிடையாது.. இந்த அரக்கர்கள் விலங்குகளை விட மோசமானவர்கள்.. அவர்களுக்கு இதயமே இல்லையா? அவர்களுக்கு அம்மா இல்லையா? இந்த பயங்கரம் மே 3ம் தேதி நடந்தது. இப்போதுதான் வெளி உலகுக்கு வந்திருக்கிறது..
இன்னும் எத்தனை கொடுமைகள் நடந்துள்ளதோ? பெண்களை இழிவுபடுத்துவதன் மூலம் மைத்தேயி சமூகம் வெற்றிபெற முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்களா?

வெட்கக்கேடு: இது மிகப்பெரிய அவமானம் மற்றும் மிகப்பெரிய இழப்பு... ராமாயணம், மகாபாரதம் இரண்டையும் நினைவில் கொள்ளுங்கள்.. பெண்களை இழிவுபடுத்தியவர்கள் அழிக்கப்பட்டுள்ளனர்.. மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள பாஜக அரசு வெட்கக்கேடானது. பாஜகவின் பெண் தலைவர்கள் மவுனமாக இருக்கிறார்களே ஏன்? நம்முடைய பெண் அமைச்சர்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள்? அவர்களுக்கும் இப்போதுதான் தெரிய வந்தது என்கிறார்கள்...
Rant thread :
— Kasturi (@KasthuriShankar) July 20, 2023
Democracy is for people not animals. These monsters are worse than animals. have they no hearts? Have they no mothers ?
This horror happened on 3rd May, we come to know of it now. How many more atrocities have taken place in Manipur? pic.twitter.com/aaKBUoC8W1
நீங்கள் இன்டர்நெட், டிவி, சோஷியல் மீடியாவின் சேனல்களை நிறுத்திவிடலாம்.. ஆனால் உண்மையை ஒருபோதும் மறைக்க முடியாது.. உண்மை நிச்சயம் வெளிவரும்.. அது வெற்றியும் பெறும்.
Do they think the Meitei can win by humiliating women? It is the biggest shame and biggest loss. Remember both Ramayana and Mahabharata- those who insulted women were decimated.
— Kasturi (@KasthuriShankar) July 20, 2023
Shame on the BJP govt both in center and state... fiddling while Manipur is burning for months !
ஆவேசம்: பிரேன் சிங்கின் தலைமையில் 4 பாஜக எம்எல்ஏக்கள் உட்பட 10 குக்கி சமூக எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்.. அதில் 2 பேர் அமைச்சர்கள்... கடந்த காலங்களில் குக்கி உரிமைகளை பறித்ததற்காக நிறைய பேர் காங்கிரஸை விட்டு வெளியேறி பாஜகவிலும் சேர்ந்தார்கள்.. இப்போது அவர்களின் நிலைப்பாடு என்ன?" என்றெல்லாம் ஆவேசமாக கொந்தளித்து கேள்வி எழுப்பியுள்ளார் துணிச்சல் மிகுந்த கஸ்தூரி.
-
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி












Click it and Unblock the Notifications