Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கஸ்தூரிக்கு கோபம்.. " என்கவுண்டர் பண்ணுங்க.. மக்கள் ஒன்னும் கேட்க மாட்டாங்க.. "கடவுள் குழந்தை" பாவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறப்பு குழந்தைக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்றால், எங்கே போய் சொல்வது? இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்களை என்கவுண்ட்டர் செய்தால் கூட மக்களும் அதை எதிர்க்கமாட்டார்கள்" என்று நடிகை கஸ்தூரி ஆவேசமாக கூறியிருக்கிறார்.

சென்னை, அயனாவரத்தைச் சேர்ந்த, 21 வயது மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவி, கல்லூரி ஒன்றில் 3ம் வருடம் படித்து வருகிறார். அவருடன் பயிலும் சக மாணவியின் நண்பர், நந்தனம் கல்லுாரி மாணவர் சுரேஷ் உட்பட 3 பேரும், மன வளர்ச்சி குன்றிய மாணவியுடன் பழக்கமாகினார்கள். சுரேஷ் உட்பட மூவரும், மாணவியின் மனரீதியான பலவீனத்தை பயன்படுத்தி, காதல் வலையில் வீழ்த்தியுள்ளனர்.

actress kasthuri dmk government chennai ayanavaram

ஆட்டோவில் மாணவி: பாதிக்கப்பட்ட மாணவி தினமும் கல்லுாரிக்கு ஆட்டோவில் தான் செல்வாராம்.. அவர் ஆட்டோவில் செல்லும் போதே, கல்லுாரிக்கு உள்ளே செல்ல வேண்டாம், வெளியே போகலாம் என, மாணவியை கல்லூரி மாணவனும், பள்ளி மாணவனும் அழைத்து சென்று, வால்டாக்ஸ் சாலை மற்றும் பெரியமேடு பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு அம்மாணவியை அழைத்துச் சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அதேபோல், மொபைல் போன் செயலி வாயிலாக பழக்கமான சிலரும், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கல்லுாரி மாணவர் சுரேஷ், பள்ளி மாணவர் ஒருவரையும், ஏற்கனவே கைது செய்தனர். நேற்று மேலும் 2 பேரை கைது செய்த நிலையில், சம்பந்தப்பட்ட சிலரை தேடி கொண்டிருக்கிறார்கள்.

என்கவுண்ட்டர்: இந்நிலையில், அயனாவரம் மாணவியை பாலியல் கொடுமை செய்தவர்களை என்கவுன்ட்டர் செய்​தால் கூட மக்கள் எதிர்க்க​மாட்டார்கள் என்று நடிகை கஸ்தூரி கொந்தளித்துள்ளார். தெலுங்கர்களுக்கு எதிராக பேசியதாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்துள்ள நடிகை கஸ்தூரி, நேற்றைய தினம் எழும்பூர் ஸ்டேஷனுக்கு வந்திருந்தார்.. அப்போது செய்தியாளர்களிடம் கஸ்தூரி சொன்னதாவது:

"அயனாவரத்தில் ஏற்கெனவே நடந்த சம்பவத்தையை நான் இன்னும் மறக்கவில்லை. மக்களும் மறக்கவில்லை. அதற்குள் அதேபோல், மற்றொரு சம்பவம் அயனாவரம் மாணவிக்கு நேர்ந்துள்ளது.

அயனாவரம் மாணவி: மனநலம் குன்றிய குழந்தையை கடவுளின் குழந்தையாக பார்க்க வேண்டும். அந்த வலி எனக்கு தெரியும். தவறு செய்யாதவர்களை தனிப்படை வைத்து தேடும் போலீஸார், இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. குற்றவாளிகள் வெளியே நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் சட்டஒழுங்கு எந்த அளவில் இருக்கிறது என்பது இதிலிருந்து தெரிகிறது. தமிழகத்தில் நிரபராதிகள் தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. சிறப்பு குழந்தைக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்றால், எங்கே போய் சொல்வது? இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்களை என்கவுண்ட்டர் செய்தால் கூட மக்களும் அதை எதிர்க்கமாட்டார்கள்" என்று ஆவேசமாக கூறினார்.

ஆதவ் அர்ஜூனா: தொடர்ந்து கஸ்தூரி பேசும்போது, "போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திடுவதில் தளர்வு அளித்த கோர்ட்டுக்கும், காவல்துறைக்கும் என்னுடைய நன்றிகள்.. ஆதவ் அர்ஜூனாவை வேண்டாம் என்று எந்த கட்சியும் சொல்லமாட்டார்கள். அனைத்து கட்சிகளுக்கும் மார்ட்டின் குடும்பம் நிதி வழங்கியிருக்கிறது. ஆதவ் அர்ஜூனா அரசியல் ரீதியாக பேசுவதால் சில மோதல்கள் ஏற்படலாம். அதேநேரம் அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்" என்றார்.

முன்னதாக கஸ்தூரி பேசும்போது, "திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வருவாரா என்று தெரியவில்லை. காரணம் அவர் இன்று திமுக கூட்டணி எம்பியாக இருக்கிறார். ரொம்ப நாளாக திமுகவுக்கு வாக்கப்பட்டு அங்கேயே விசிக இருக்கிறது. ஆனால் ஆதவ் அர்ஜுனா அல்லது திருமாவளவன் இருவரில் ஒருவர் விசிகவில் இருப்பார்கள். இருவரும் இனி ஒன்றாக இருக்கமாட்டார்கள் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது" என்று கணித்து கூறியிருந்து குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+