Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ப்ளீஸ், ப்ளீஸ்".. பாஜக மதுவந்தி கெஞ்சினாரே.. வீட்டில் ரூ.30 லட்சம் பொருளை காணோமாம்.. டமார் புகார்

வீட்டில் இருந்த ரூ.30 லட்சம் பொருட்களை காணோம் என மதுவந்தி குற்றம்சாட்டி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீல் வைத்த வீட்டிலிருந்து காணாமல் போன 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மீட்டு தருமாறு நடிகை மதுவந்தி போலீசில் பரபரப்பு புகார் ஒன்றினை தந்துள்ளார்.

பாஜக ஆதரவாளர் மதுவந்தி, பாஜகவின் செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.. சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2-வது குறுக்கு தெருவில் ஆசியானா என்ற அப்பார்ட்மென்ட்டில் உள்ள சொந்த வீட்டில் கடந்த சில வருடங்களாகவே மதுவந்தி வசித்து வருகிறார்..

இந்த வீட்டை வாங்குவதற்காக கடந்த 2016-ல் இந்துஜா லைலண்ட் என்ற பைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளார்...

 மதுவந்தி

மதுவந்தி

ஆனால், வீட்டை வாங்கிய பிறகு, அடுத்தடுத்து சில தவணைகள் மட்டுமே வட்டி கட்டி வந்தபிறகு ஒருகட்டத்தில் நிறுத்திவிட்டார். இதனால், உரிய வட்டி பணத்தை கட்டுமாறு, பைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் பல மாதங்களாகவே மதுவந்தியிடம் எடுத்து சொல்லியும் அவர் கேளாததால், ரூ1,21,30,867 பணம் கட்ட சொல்லி கடந்த வருடம் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.. அதற்கும் பதில் ஏதும் இல்லை என்பதால், சென்னை அல்லிகுளம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, இறுதியில், மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைத்து கோர்ட் உத்தரவிட்டிருந்தது..

 அசிங்கமாயிடும்

அசிங்கமாயிடும்

அதன்படியே, மதுவந்தியின் வீடு போலீசார் பாதுகாப்போடு சீல் வைக்கப்பட்டு, அந்த வீட்டு சாவியும், இந்துஜா லைலண்ட் பைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது... அடுத்த சில மணி நேரத்தில், வீட்டை சீல் வைக்க வந்தவர்களிடம் மதுவந்தி கெஞ்சி கேட்கும் வீடியோ வெளியானது.. அந்த வீடியோவில் மதுவந்தி, "ஸார் ப்ளீஸ்.. லாக் போடாதீங்க.. உங்களை கெஞ்சி கேட்டுக்கறேன்.. எனக்கு இது ரொம்ப அசிங்கமா போயிடும்.. ஐ வில் சார்ட் அவுட்.. தயவுசெய்து நான் சொல்றது கேளுங்க" என்று இரு கைகளையும் நீட்டி கெஞ்சினார்.. அங்கிருந்த ஒருவரது பெயரை சொல்லியும், நீங்களாவது சொல்லுங்க சார், பார்த்துட்டே இருக்கீங்களே என்று கேட்டு கொண்டே நின்றார்..

 ப்ளீஸ் ப்ளீஸ்

ப்ளீஸ் ப்ளீஸ்

அதிகாரிகள் மதுவந்தியிடம் விளக்கம் சொன்னாலும், அதை அவர் பொருட்படுத்தாமல் மன்றாடி கொண்டே இருந்தார். இந்த வீடியோ அப்போது இணையத்தில் வைரலாகவும் போனது. மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைத்து வீட்டை ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நிலையில், இதன் அடிப்படையில் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி அட்வகேட் கமிஷனர் வினோத் குமார் முன்னிலையில் மதுவந்தியின் வீட்டை போலீசார் பாதுகாப்போடு சீல் வைத்து வீட்டுச் சாவியை ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது...

 தேனாம்பேட்டை

தேனாம்பேட்டை

வீடு சீல் வைக்கப்பட்ட சில தினங்களிலேயே வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துக் கொள்ளுமாறு ஃபைனான்ஸ் தரப்பில் இருந்து மதுவந்திக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.. ஆனால் பொருட்களையும் எடுக்காமல் மதுவந்தி காலம் தாழ்த்தி வந்துள்ளார்.. இந்த நிலையில் பைனான்ஸ் நிறுவனம் வீட்டை மற்றொரு நபருக்கு ஏலம் விட்டுள்ளனர்... ஆனால், வீட்டை ஏலம் விட்டது தனக்கு தெரியாது என்றும், வீட்டிலிருந்த ரூ.30 லட்சம் பொருட்கள் அப்போது மாயமாகிவிட்டதாகவும், அந்த பொருட்களை மீட்டு தரும்படியும் தேனாம்பேட்டை போலீசில் மதுவந்தி புகார் தந்துள்ளார்..

 சீல் சீல்

சீல் சீல்

சீல் வைக்கப்பட்ட வீட்டிலிருந்த பொருட்களை ஒரு மாதத்திற்குள் எடுக்க வேண்டும் என பைனான்ஸ் நிறுவனம் நோட்டீஸ் வழங்கியுள்ளதாகவும், ஆனால் பொருட்களை எடுப்பதற்குள் வீட்டினை மற்றொருவருக்கு ஏலத்தில் விற்று விட்டதாகவும் மதுவந்தி குற்றம்சாட்டி உள்ளார். மேலும் வீட்டிலிருந்த தனக்கு சொந்தமான பொருட்களை பைனான்ஸ் நிறுவனம் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் பதுக்கி வைத்துள்ளதாகவும், நேற்றுதான் இந்த விஷயமே தனக்கு தெரிய வந்தது என்றும், அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்..

 மாயம் மாயம்

மாயம் மாயம்

இந்த கடன் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பைனான்ஸ் கம்பெனியின் மண்டல மேலாளர் உமாசங்கர், கார்த்திகேயன் உட்பட 10 நபர்கள் அனுமதியின்றி இதனை செய்துள்ளதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ள மதுவந்தி, உடனே தனக்கு சொந்தமான 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மீட்டு தர வேண்டும் என்றும் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக தேனாம்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+